எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் தேங்காய்!

Wednesday, June 10, 2020




தேங்காயை உணவில் சேர்த்து வருவதால் இதயம் சருமம் மூளை மற்றும் வயிறு இவைகள் ஆரோக்கியமாக இருக்கும். நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுதல் வயதாகுவதை தடுத்தல் சரும ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் அல்சர் வயிற்றெரிச்சல் அல்சீமர் நோய் போன்ற பாதிப்புகளையும் சரி செய்கிறது. தேங்காயில் ஒவ்வாமை எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் உள்ளன. இவைகள் நமக்கு ஒரு மருத்துவ பொருள் போன்று செயல்படுகிறது. தேங்காயில் உள்ள கொழுப்பு ஹைப்பர் லிப்பிடிமியா மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடையதாக உள்ளது என்று பலர் நம்புகின்றனர். ஆனால் இது தவறான விஷயம் எனக் கூறப்படுகிறது.

காரணம் தேங்காயில் உள்ள சேச்சுரட்டேடு கொழுப்பு அமிலங்கள் ஆத்ரோஜெனிக் வடிவமானவை.

அதாவது மற்ற சேச்சுரட்டேடு கொழுப்புகளை போல் இல்லாமல் இதில் உள்ள சேச்சுரட்டேடு கொழுப்பு சங்கிலி தொடர் நடுத்தரமானது. இந்த கொழுப்பு சங்கிலி தொடர் எளிதில் உடைந்து கொழுப்புகள் அதிகமாக உடலில் தங்குவதில்லை. எனவே அதிக கொலஸ்ட்ரால் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.

இதனால் எந்த விதமான இதய நோய்களின் அபாயமும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். அதுமட்டுமல்லாமல் தேங்காயில் உள்ள கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை கூட்டுகிறது. எனவே இது இதயத்திற்கு பாதுகாப்பானதும் கூட. இதற்கு முக்கிய காரணம் தேங்காயில் உள்ள கோக்கொசைன் என்ற பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வேலையை செய்கிறது.

சருமப் பிரச்சினைகள் சரும ஒவ்வாமை ஆகியவற்றை குணப்படுத்துவதில் மிகச்சிறந்த பலன்களை தேங்காய் செய்கிறது. சரும தொற்று மூளைக் காய்ச்சல் நிமோனியா பாக்டிரேமியா செப்சிஸ் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. குமட்டல் வாந்தி வயிற்று வலி வயிற்றுப் போக்கு பசியின்மை போன்றவற்றை சரிசெய்ய பயன்படுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் சேதம் நமது உடலில் ஏகப்பட்ட நோய்களின் இருப்பிடமாக அமைந்து விடும். இதய நோய்கள் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருத்தல் புற்று நோய் ஆர்த்ரிட்டீஸ் வயதான தோற்றம் போன்றவற்றை ஏற்படுத்தி விடும். இதற்கு தேங்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் மற்றும் ப்ளோனாய்டுகள் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மாதிரி செயல்படுகின்றன.

தேங்காய் நமது அறிவாற்றலை வலிமையாக்கும் பொருள். இதிலுள்ள மீடியம் கொழுப்பு சங்கிலி கீட்டோனாக நமது உடலில் உடைக்கப்படுகிறது. இந்த கீட்டோன்கள் மனித மூளைக்கு தேவையான ஆற்றலாக செயல்படுகிறது. எனவே இது நினைவாற்றலை அதிகரித்து அல்சீமர் போன்ற மறதி நோயை தடுக்கிறது.

அம்லைடு பிளக் என்பது ஒரு விதமான புரோட்டீன் ஆகும். இந்த புரோட்டீன் மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கு இடையே குவிந்து அந்த நரம்பு செல்களை சாகடித்து விடும். இதனால் நினைவின்மை ஏற்பட்டு மறதி ஏற்பட ஆரம்பித்து விடும். ஆனால் தேங்காயில் உள்ள ஆக்ஸினேற்றிகள் இந்த அம்லைடு புரதத்திற்கு எதிராக செயல்பட்டு மூளையில் உள்ள நரம்பு செல்களை பாதுகாக்கிறது. இதே போன்று இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகளும் மூளையின் நரம்பு செல்கள் அழிவதை தடுக்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One