எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

விடைத்தாள் திருத்தும் மையத்தில் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் சுகாதாரப்பணிகள்

Friday, June 19, 2020







ஆத்தூர் பாரதியார்,தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்றுவரும் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பிற்கான விடைத்தாள் திருத்தும் மையத்தில் சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்,ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி சேவை அமைப்பான இளம் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் அங்கு  விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள்  மற்றும் அலுவலர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பார்த்தல், கிருமிநாசினி வழங்குதல், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி வர செய்தல் போன்ற பணிகளை தன்னார்வலர்கள் ஆக இளம் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கடந்த 15 நாட்களாக ஈடுபட்டு வந்தனர். இவர்களின் சேவையை கல்வி அலுவலர்கள் பாராட்டினர் . மேலும் ரெட் கிராஸ் சார்பில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு லோட்டஸ் ஜோசப் அவர்கள் குளிர்பானங்களும்,பிஸ்கட்களும்,கபசுரக்குடிநீரும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஜே.ஆர் சி.கன்வீனர் பிரபாகர் செய்திருந்தார். இணை கன்வீனர் முனுசாமி ஒருங்கிணைத்தார்.ஆசிரியர் ஜோசப்ராஜ் நன்றி கூறினார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One