பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்பப்படுவர் எனப் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு நடைபெற்று வந்த பொதுத் தேர்வுகள் கொரோனா பரவலால் தடைப்பட்டது. இந்நிலையில், வரும் 11-ஆம் தேதி 11-ஆம் வகுப்புக்கு நிலுவையில் உள்ள தேர்வும், 18 ஆம் தேதி 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வும் நடைபெற உள்ளது. இதனிடையே, வரும் 15-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது
இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்பப்படுவர் எனப் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், வீட்டிற்கு அனுப்பப்படும் மாணவர்கள் துணைத் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம். காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment