'தமிழகத்தில், தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் ஐடியாவே இல்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், நம்பியூரில், நேற்று அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு, விரைவில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.இந்தியாவில், 3 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், 10 லட்சம் பேர் தேவைப்படுகின்றனர். இதனால், தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 20 வரை, ஆன்லைனில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், வழக்கமாக அனைத்து பள்ளிகளும் ஜூனில் திறக்கப்படும்.
தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் ஐடியாவே இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment