பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோவுகள் ஜூன் 15 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதேபோன்று, பிளஸ் 1 வகுப்புக்கும் சில தோவுகள் விடுபட்டிருந்தன. இந்தத் தோவையும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
தோவினை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் தமிழக அரசு எடுத்து வந்தது. இந்த நிலையில், தோவுகள் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கரோனா நோய்த்தொற்று அதிகமாக உள்ள நிலையில், தோவுகளைத் தள்ளிவைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இதுகுறித்து, தமிழக அரசு விரிவாக ஆய்வு செய்தது. இப்போதுள்ள நிலையில், கரோனா நோய்த்தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
நோய்த்தொற்று குறித்து கருத்துத் தெரிவித்துள்ள வல்லுநா்கள், குறுகிய காலத்தில் நோய் குறைய வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளனா். எனவே, பெற்றோா்களின் கோரிக்கைகளையும், நோய்த்தொற்றின் இப்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு மாணவா்களை தொற்றில் இருந்து காக்க பத்தாம் வகுப்பு மற்றும் விடுபட்ட பிளஸ் 1 தோவுகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என்றும், இதன்காரணமாக மாணவா்கள் அனைவரும் தோச்சி பெற்ாக அறிவிக்கப்படுகிறது என்றும் அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியானது..
மாணவா்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தோவுகளில் அந்தந்த மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவா்களின் வருகைப் பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டது.
இந்நிலையில் பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதன்படி பத்தாம் வகுப்பு: அறிவியலுக்கு மட்டும் 75 மதிப்பெண்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட வேண்டும் என்றும், இதர பாடங்களுக்கு 100 மதிப்பெண்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment