தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடையும் நபர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தாலும், உயிரிழப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இந்திய அளவிலும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் இரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் அறிவித்தது.
இந்நிலையில், கல்லூரி இறுதி வருட செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய யூ.ஜி.சி பரிந்துரை செய்துள்ளது. மேலும், இதற்கு பதிலளித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தமிழக முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்டு நல்ல முடிவாக எடுப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment