குழாயில் ஓடும் அழுத்தப்பட்ட ஃபிரியான் திரவம் பெட்டியினுள் சென்று வெப்பத்தை ஏற்று விரிவடைந்து வாயுவாக மாறுகிறது. அப்போது குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் பொருட்கள் குளிர்வடைகின்றன.
இவ்வாறு விரிவடைந்த ஃபிரியான் வாயுவை மீண்டும் அழுத்தி திரவமாக்கும் போது வெப்பம் உண்டாகிறது. இது பெட்டியின் வெளிப்புறமுள்ள வெப்ப மாற்று வழியாக அகற்றப்படுகிறது. இந்த வெப்பம் வீட்டிலுள்ள காற்றோட்டத்தில் பரவி விடு
குளிர்சாதனப் பெட்டியை சற்று நேரத்துக்கு திறந்து வைக்கும்போது அதிலிருந்து குளிர்ச்சியான காற்று வெளிப்படும்.
ஆனால் தொடர்ந்து அப்படியே திறந்து வைத்தால் குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலை உயர்ந்து அது அறை வெப்பநிலைக்கு வந்துவிடும். இதனால் அறையும் குளிராது; பெட்டியில் இருக்கும் பொருட்களும் குளிர்ச்சியடையும். மின்சார விரயம்தான்
மிச்சம் குளிர்சாதனப் பெட்டியின் பின்புறமுள்ள வெற்றமாற்றியை சன்னலில் பொருத்தி வெளிக்காற்று அறையில் உட்புகா வண்ணம் வைத்து பெட்டியை திறந்து வைத்தால் வீடு குளிர்வடையும் இது தான் ஏர்கண்டிஷனரின் தத்துவமும் கூட
No comments:
Post a Comment