எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News : 10ம் வகுப்பு தேர்வு -செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை!

Sunday, June 7, 2020




10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பல்​வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன், முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் பயிற்சி அளிப்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் செங்கோட்டையன் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதி முதல் நீட் தேர்வு குறித்து ஆன்-லைன் வழியில் பயிற்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One