கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியான புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் 02.09.2021 அன்று நடைபெற்ற நேர்முகத் தேர்வு 2021 (Campus Interview) காணொளிக் காட்சி மூலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த சத்யம் பயோ கம்பெனி குழுவானது (Sathyam Group of Companies, Madurai) நேர்முகத் தேர்வினை நடத்தியது.
இந்த காணொளிக் காட்சி நேர்முகத் தேர்வில், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு வேளாண் மாணவர்கள் பலர் மதுரை – சத்யம் பயோ கம்பெனியின் களப்பணி அலுவலர் மற்றும் விற்பனை ஒருங்கிணைப்பாளராக தேர்வு பெற்றுள்ளனர். வருகின்ற அக்டோபர் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள தங்களது கிளை நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று மதுரை – சத்யம் பயோ கம்பெனி தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு படித்து முடித்ததும் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் நடைபெற்ற இந்த நேர்முகத் தேர்வினை, புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு மேலாளர் ஜெ.பிரசாந்த், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு பொறுப்பு வகிக்கும் N. திவ்யபாரதி மற்றும் சத்யம் குழுமத்தின் மனிதவள மேம்பாட்டுத் தலைவர் திரு. P. அருள் ஜெனித் ராஜ், MBA., மற்றும் மனிதவள மேம்பாட்டு மூத்த நிர்வாகி திரு. K. வடிவேல்கார்த்திக், MBA.,அவர்களும் மிகச் சிறப்பாக நடத்தி முடித்தனர்.
காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வினை கல்லூரியின் செயலாளர் திரு. M. ராஜாராம் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் V. செல்லமுத்து அவர்கள் நன்றியுரை தெரிவித்தார்.
No comments:
Post a Comment