எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

உப்பு தண்ணீரில் ஓடும் டூவீலர் - அசத்தும் அரசுப்பள்ளி மாணவி

Tuesday, July 3, 2018


5 ஆயிரத்தில் smart classroom அமைப்பது எப்படி?


EMIS-ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட உள்ளதால்- 17.07.2018 க்குள் EMIS பணியினை முடிக்க உத்தரவு


8th Std - English - The Woodern Bowl ( Unit 1 Prose ) - Video Lesson


அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - அறிவிப்பு வெளியீடு.

அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில்  ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை - Order Issued



பொதுமாறுதல் பெற்றவர்கள் துய்க்கப்படாத பணியேற்பிடைக்காலத்தை தங்களது ஈட்டிய விடுப்பு சேமிப்பு கணக்கில் 5 நாட்கள் சேர்க்க கோரும் விண்ணப்பம்


2nd Std - English - Our School ( Unit 1 Prose ) - Video Lesson


3rd Std - English - My Friend ( Unit 1 Poem ) - Video Lesson

3rd Std - English - Unity is Strength ( Unit 1 Prose ) - Video Lesson


4th Std -Science- Video Lesson- Special Sense of Animals


இன்று ஜூலை 03 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு

பிரான்சு புவியியலாளர், சுரங்கப்பொறியாளர்- பியெரி பெர்தியர் ( Pierre Berthier) பிறந்த தினம்.

அரசுப்பள்ளியில் சட்டக்கல்வி மன்றம்

EMIS விவர அடிப்படையிலேயே வருங்கால கல்வித்திட்டங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும்


TEACHER WANTED


BE - இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கல்லூரியினை எவ்வாறு தேர்வு செய்வது?


இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், எந்த தரவரிசைக்கு, எந்த கல்லுாரி கிடைக்கும் என்ற புதிய தகவலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.


  இதில், மூன்றாண்டு தரவரிசை எண்கள் இடம் பெற்றுள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.

கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.04 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல், ஜூன், 28ல் வெளியானது. ஜூலை, 10க்கு பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடக்க உள்ளது. இந்நிலையில், தரவரிசையில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு, எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தை போக்கும் வகையில், அண்ணா பல்கலையில் இருந்து, புதிய வழிகாட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கான, https://tnea.ac.in என்ற இணையதளத்தில், இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.ஒவ்வொரு கல்லுாரியிலும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், எந்த தரவரிசை எண் வரையிலான மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு கிடைத்தது.

 இன வாரியாக எவ்வளவு, 'கட் ஆப்' மதிப்பெண் தேவை, 2015 முதல், 2017 வரை, இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட, 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள், கல்லுாரி வாரியாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படை தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொண்டால், கல்லுாரிகளை எளிதில் தேர்வு செய்ய முடியும்.

+2 Public Exam - விடைத்தாளில், கூட்டல் பிழைகள் ஏற்படுத்திய, ஆசிரியர்கள் மற்றும் துறை அலுவலர் கள், 1,000 பேருக்கு, 'நோட்டீஸ்'


பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கூட்டல் பிழைகள் ஏற்படுத்திய, ஆசிரியர்கள் மற்றும் துறை அலுவலர் கள், 1,000 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.


  பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் மற்றும் ஏப்ரலில் நடந்தது. விடைத்தாள்கள் திருத்தப்பட்ட பின், தேர்வு முடிவுகள், மே, 16ல் வெளியாகின. இந்தத் தேர்வை நன்றாக எழுதியும், சரியாக மதிப்பெண் கிடைக்காத மாணவர்களுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய, சலுகை வழங்கப்பட்டது.

இந்த சலுகையை பயன்படுத்தி, 2,500க்கும் மேற்பட்டவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். அவர்களின் மறுமதிப்பீடு முடிவுகள், இரு வாரங்களுக்கு முன் வெளியாகின. அதில், 1,000 மாணவர்களின் விடைத்தாளில், கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால், மதிப்பெண் மாறியது.இந்த விடைத்தாள்களை தேர்வுத்துறை ஆய்வு செய்து, அவற்றை திருத்திய ஆசிரியர்கள், சரிபார்த்த விடை திருத்தும் மைய தலைமை அதிகாரிகள், துறை அலுவலர்கள் யார் யார் என, பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஆசிரியர்கள் உள்ளிட்ட, 1,000 பேருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

விளக்கத்துக்கு சரியான பதில் அளிப்பவர்களை தவிர, மற்றவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தேர்வுத்துறையில் இருந்து ஆசிரியர்களின் பட்டியல், பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கால்நடை மருத்துவ படிப்பு : இன்று தரவரிசை பட்டியல்


கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு, உணவு தொழில்நுட்பம் போன்ற படிப்புகளில், 360 இடங்கள் உள்ளன.


 அதேபோல, கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் போன்ற, பி.டெக்., படிப்புகளுக்கு, 460 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 12 ஆயிரத்து, 217 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இவர்களுக்கான தரவரிசை பட்டியலை, சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இன்று காலை, வெளியிடப்படுகிறது. தமிழக கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர், பாலச்சந்திரன் வெளியிட உள்ளார்.

BE - கூடுதல் கட்டணம் புகாரை விசாரிக்க கமிட்டி

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என, கல்லுாரிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டி நிர்ணயித்துள்ளது.


 அதிகபட்சமாக, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆண்டு கட்டணமாக, 55 ஆயிரம் ரூபாய்; நிர்வாக இடங்களுக்கு, 87 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.ஆனால், சரியான உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லுாரிகளும், கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கல்லுாரிகளுக்கு அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லுாரிகள் மீது விசாரணை நடத்துவது குறித்து, கமிட்டி ஒன்றை, தமிழக அரசு அமைத்துள்ளது; அண்ணா பல்கலை இயற்பியல் துறை பேராசிரியர், செல்லத்துரை, கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த கமிட்டி, புகார்களை விசாரித்து, உயர் கல்வி மற்றும் கல்லுாரி கட்டண நிர்ணய கமிட்டிக்கு அறிக்கை அனுப்பும். கூடுதல் கட்டணம் தொடர்பான புகார்களை, மாணவர்களும், பெற்றோரும், tncapitation@gmail.com என்ற, இ - மெயிலுக்கு அனுப்பலாம் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் குளறுபடி சிபிஎஸ்இக்கு ஐகோர்ட் 4 கேள்விகள்:


நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக 4 கேள்விகளை கேட்டு அதற்கு சிபிஎஸ்இ தரப்பில் வரும் 6ம் தேதி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


 மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.ேக.ரங்கராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நீட் தேர்வை சுமார் 24 ஆயிரம் பேர் தமிழ் வழியில் எழுதினர். இதில் 49 வினா-விடைகள் தவறாக இருந்தன. இதனால் 196 மதிப்பெண் குறைவாக கிடைப்பதால், தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி தவறான 49 வினா-விடைகளுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்கவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அவகாசம் அளிப்பதாக கூறிய நீதிபதிகள் விசாரணையை ஜூலை 6க்கு தள்ளி வைத்தனர். மேலும், அன்றைய தினம் சிபிஎஸ்இ தரப்பில், அறிவியல் பாடத்திலுள்ள ஆங்கில வார்த்தைகளை மொழி மாற்றம் செய்தபோது சரியான தமிழ் வார்த்தையை கண்டறிந்து அவற்றை பயன்படுத்த என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது?

அவ்வாறு முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அதற்குரிய அகராதி ஆங்கிலத்திற்கு சமமான தமிழை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதா?, அப்படி உருவாக்கியிருந்தால், தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்களின் கவனத்திற்கு அது கொண்டு செல்லப்பட்டுள்ளதா?, உடல் உறுப்புகள், தாவரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து குறிப்பிட்ட ஆங்கில வார்த்தைகளை தமிழில் எப்படி உச்சரிப்பது என தமிழ் வழி மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளதா? என்ற 4 கேள்விகளுக்கு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்' என, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசுக்கு பரிந்துரை !

சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்' என, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

 என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசுக்கு, சில பரிந்துரைகளை அளித்துள்ளது; அதன் விபரம்:சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர், பாகுபாடு மற்றும் பாலியல் சீண்டல்கள் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சிறுபான்மையினர் அதிகம் நிறைந்த பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்.இதன் மூலம், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் கல்வியறிவு பெறுவர். முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதிகளில், உருது நடுநிலைப் பள்ளிகள் துவங்க வேண்டும். அங்கு, தாய்மொழியாக உருது இருக்க வேண்டும்.இவ்வாறு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

+1 MATHS TM VOLUME 1 – BOOK BACK ONE MARK MATERIAL!!!

1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் !!!

மொபைல்போனைக் காக்கும் 'ஏர் பேக்'!

ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிலிப் ஃபிரென்ஸல் என்ற பொறியியல் மாணவர், ஏர் பேக் கொண்ட மொபைல் கவர் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

ஸ்மார்ட்போன்கள் இன்று நம்முள் ஓர் அங்கமாக மாறிவிட்ட நிலையில் அதனைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளச் சந்தையில் பல்வேறு ஸ்மார்ட் கேஸ்கள் வந்து விட்டன. இருப்பினும் ஒருமுறை போன் கை தவறி கீழே விழுந்துவிட்டால் அதன் ஸ்க்ரீனில் ஏற்படும் விரிசலை யாராலும் தடுக்க முடியாது (கொரில்லா கிளாஸ் டிஸ்ப்ளே தவிர). அப்படி ஒரு சூழலை சந்திக்கும் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வர்ணிக்கவே முடியாது. காரணம், அதனை மீண்டும் சரி செய்ய சில ஆயிரங்கள் செலவாகும். இனி அந்தக் கவலை இல்லை.

ஆலென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 25 வயதான ஃபிலிப் ஃபிரென்ஸல் என்ற மாணவர், மொபைல் கீழே விழுந்தாலும் அது அடிபடாத வகையில் புதிய ஏர் பேக் கேஸ் ஒன்றை வடிவமைத்துள்ளார். ஒருமுறை இவரது விலை உயர்ந்த போன் கீழே விழுந்து உடைந்ததாலேயே இந்த ஏர் பேக் மொபைல் கேஸை உருவாக்கும் எண்ணம் இவருள் முளைத்திருக்கிறது. நான்கு ஆண்டு கால முயற்சிக்குப் பின் ஆக்டிவ் டாம்பிங் என்ற பெயரில் இந்த ஏர் பேக் மொபைல் கேஸை அவர் உருவாக்கியிருக்கிறார்.


 இந்த மொபைல் கவரில் சென்சார் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். மொபைல் கீழே விழும்போது, அந்த சென்சார் மூலம் இந்த கேஸில் உள்ள ஸ்பிரிங் போன்ற அமைப்பானது தானாக விரிவடைந்து மொபைலை எந்தவித சேதமும் இன்றி காக்கிறது. இந்த மொபைல் கவர் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. தற்போது இந்தக் கண்டுபிடிப்புக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிமம் கிடைக்கும்பட்சத்தில் விரைவில் சந்தைகளில் எதிர்பார்க்கலாம்

SCERT-புதிய பாடத்திட்டம்-புதிய பாடநூல்கள்-பாடக்கருத்துகளை டிஜிட்டலாக்கம் செய்வது தொடர்பான பணிமனை சார்பு


School Morning Prayer Activities - 03.07.2018


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் :

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.


பழமொழி :

A constant guest is never welcome

விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு

பொன்மொழி:

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான்
பிறக்கின்றன. -நபிகள் நாயகம்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?
லூயி பாஸ்டியர்

சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?
தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்

நீதிக்கதை :

ஆல்ப்ரெட் ராஜாவும் பிச்சைக்காரனும்


அரண்மனையைஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், "ராஜாவைப் பார்க்க வேண்டும்" என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், "என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?" என்றார் அரசர். "ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன்" என்றான் மிகவும் பவ்வியமாக.


 அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், "விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது" என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,

மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை. அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.

அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர். இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

 ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது. அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.
அரண்மனைகளில்கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.

மனதில் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது. நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன. அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.

இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.

நீதி:
மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.

இன்றைய செய்தி துளிகள் : 

1. மாநில பாடத்திட்டத்தில் +2 படித்தவர்களுக்கு 70% எம்.பி.பி.எஸ். இடம் : அமைச்சர் விஜயபாஸ்கர்›

2.தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் - காவிரி ஆணையம் உத்தரவு

3.குனிந்து படிக்கும் மாணவன் உயர்ந்து  நிற்பான்: ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி

4.சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி: சூரத்தில் நிலத்தடி குப்பை தொட்டிகள் அமைப்பு


5.சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு வெள்ளி

6.உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்

Teachers Attendance - CEO PORTEL செயலியில் பயன்படுத்துவதில் ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் ஒன்றியம் வாரியாக பொறுப்பாளர்களை தொடர்புகொள்ளவும்.

Monday, July 2, 2018

திருவண்ணாமலை மாவட்டம் - ஒன்றியம் வாரியாக பொறுப்பாளர்கள்:

*1.அனக்கவுர் ஒன்றியம்*

9443690098
8489264131




 *2.திருவண்ணாமலை ஒன்றியம்*

9790011922
9488832269

*3. துரிஞ்சப்புரம் ஒன்றியம்*

9787946004
9003774397

*4. கீழ்பென்னாத்தூர் ஒன்றியம்*

7871650977

*5. தண்டராம்பட்டு ஒன்றியம்*

9080780316
9677367619

*6. செங்கம் ஒன்றியம்*

9677369619
9600373681

*7. புதுப்பாளையம் ஒன்றியம்*

9245138881
8525838183

*8. கலசபாக்கம் ஒன்றியம்*

7299513055
9786517444

*9. போளூர் ஒன்றியம்*

9443105353
9487046758

*10. ஜவ்வாது மலை ஒன்றியம்*

9488660545
7530064985

*11. சேத்பட்டு ஒன்றியம்*

7708910931
7092088068

*12. மேற்குஆரணி ஒன்றியம்*

9751190116
9566981898

*13. ஆரணி ஒன்றியம்*

9566187686
9445450526

*14. தெள்ளார் ஒன்றியம்*

9940305465
9500261852

*15 பெரணமல்லூர் ஒன்றியம்*

8680830025
9940831239

*16. வந்தவாசி ஒன்றியம்*

9790239057
9944717934

*17. செய்யார் ஒன்றியம்*

9976386732
9003968656

*18. வெம்பாக்கம் ஒன்றியம்*

9943402434
9842522886

Flash New : - 8 CEO's Transferred - G.O 121 - Orders Issued


ஏழ்மையில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்!


* ஏழ்மை நிலையிலும் படித்து அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் , சாதித்து காட்டிய அரசு பள்ளி ஆசிரியர்கள்....

* நேற்று விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட " நீயா நானா " சிறப்பு வீடியோ தொகுப்பு!


Click here - Vijay tv. "neeya naana " Special video collection

தங்களது ஊதியத்தில் வாடகைக்கு கட்டடம் எடுத்து மாணவர்களுக்கு பாடம் சொல்லி தரும் ஆசிரியர்கள்


ஆசிரியர்கள், பள்ளி,மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நாள் பேரிடர் மேலாண்மை பயிற்சி








சேலம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி*
*சேலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ஆசிரியர்கள், பள்ளி,மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நாள்  பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது . இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ஞானகொளரி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு கருத்தாளராக மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்க கன்வீனர் பிரபாகரன்  மற்றும் குழுவினர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள். இப்பயிற்சியில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் இருந்து பட்டதாரி ஆசிரியர்கள் லியோ,மணிகண்டன், ஜோசப் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொற்றுநோய்களை தடுக்கும் முறைகள், பாம்பு  எப்படி பிடிப்பது, மின்சாரத்தை எவ்வாறு பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது, தீயினை எந்தெந்த முறையில் அணைப்பது போன்ற பயிற்சிகளை பெற்றனர்*

Penalty on late filling of income Tax Return"Section 234F'.

சி.பி.எஸ்.இ., விருதுகள் எண்ணிக்கை உயர்வு

சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின், இணைப்பு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தேசிய அளவில், சி.பி.எஸ்.இ., ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.தேசிய அளவில், இதுவரை, 34 விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு முதல், 48 விருதுகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த விருதில், பள்ளி முதல்வர்களுக்கு, ஐந்து; கலை, தொழிற்கல்வி, உடற்கல்வியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு, தனியாக, 10 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம், ரூ.1,000 பரிசு

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, 1 கிராம் தங்க நாணயம், 1,000 ரூபாய் பரிசாக தரப்படும்' என அறிவித்து இருந்த கிராமத்தினர், பெரிய விழா நடத்தி, 28 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
தஞ்சாவூர், பேராவூரணி அருகே உள்ளது, துலுக்க விடுதி கிராமம். இங்கு, 1998 முதல், துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும், கிராம மக்களே செய்து வந்தனர். 2003ல், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, கல்வித் துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

83 மாணவர்கள் மட்டுமே இருந்ததால், '120க்கு மேல் மாணவர்கள் இருந்தால் மட்டுமே, தரம் உயர்த்த முடியும்'என, அதிகாரிகள் தெரிவித்தனர்.பள்ளியை தரம் உயர்த்த நினைத்த கிராம மக்கள், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டனர். இதன்படி, 'பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, 1 கிராம் தங்க நாணயமும், 1,000 ரூபாய் பரிசுமும் வழங்கப்படும்' என, அறிவித்தனர். இதனால், நடப்பு கல்வியாண்டில், 28 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். அறிவித்தபடி, புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா, நேற்று முன்தினம் பள்ளியில் நடந்தது.

பேராவூரணி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராசு, மணவர்களுக்கு, 1 கிராம் தங்க நாணயம் மற்றும், 1,000 ரூபாய் பரிசு வழங்கினார். தற்போது, 96 மாணவர்கள் உள்ளனர். எனவே, பள்ளியை தரம் உயர்த்தும் கோரிக்கையை, மீண்டும் எழுப்ப, கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு : பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்!!!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அதன் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கும் விழா நடந்தது. திருச்செங்கோட்டில் நடந்த விழாவில் பாராட்டு சான்றுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க அரசு ரூ.27 ஆயிரத்து 205 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த மாதம் லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வருகிறார்கள். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் 6 வாரம் தங்கியிருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த ஆங்கிலத்தை கற்றுத்தர இருக்கிறார்கள்.



அங்கன்வாடியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசக்கூடிய வகையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கிளாஸ்’ 3 ஆயிரம் பள்ளிகளில் கொண்டுவர டெண்டர் விடப்பட்டுள்ளது.

9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வகுப்பறைக்கு 10 கணினி, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 20 கணினி என வழங்கி இணையதள பயிற்சி அளிக்கப்படும். ஒரு சிறந்த ஆசிரியர் 100 பள்ளிக்கு காணொலி காட்சி மூலமாக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 15 இடங்களில் சி.ஏ. பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. ஆடிட்டர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். 20 ஆயிரம் மாணவர்கள் இதன்மூலம் தணிக்கை பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

RTI – ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கல்வித்தகுதிகள் பயின்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு (INCENTIVE ) வழங்க திட்டவட்டமான அரசாணை பள்ளிக்கல்வித்துறையில் உள்ளதா? இல்லையா?!!!



ஜூலை 2018 மாத பள்ளி நாள்காட்டி & Training Days

BEO அலுவலக குறைதீர் நாள் : 7.7.18
 சனிக்கிழமை வேலை நாள் : 21.07.18 & 28.7.18
 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி
(I STD)
 1 batch: 13&14.7.18
2 batch: 16&17.7.18
3 batch: 18&19.7.18
4 batch: 20&21.7.18
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி (VI std)
*Maths&social : *
1 batch: 9&10.7.18
2 batch : 11&12.7.18
*Tamil& Science*
1 batch : 13&14.7.18
2 batch: 16&17.7.18
  *English *
1 batch:18&19.7.18
2 batch: 20&21.7.18
 R.L : இல்லை
 அரசு விடுமுறை இல்லை
 CRC - இல்லை
 கல்வி வளர்ச்சி நாள் : 15.7.18
 ஜூலை மாத வேலை நாள்கள் : 24
 இதுவரை மொத்த
வேலை நாள்கள் :45

School Morning Prayer Activities - 02.07.2018 ( Daily Updates... )


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் :

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

 உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.



பழமொழி :

A cat may look at a king

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

பொன்மொழி:

ஜாதீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி இருக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர். - அரிஸ்டாட்டில்.


இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஜீன்ஸ்துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
லீவைஸ்ட்ராஸ், 1848

2.காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?
கர்நாடகா

நீதிக்கதை :

தந்திர நரி (Sly Fox)
திருக்குறள் நீதிக் கதைகள்
(Thirukural Moral Story)

ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக பசியின் காரணமாக மானை தொரத்துகிறது.

சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில் விழுந்தது.


 இதை பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது.

தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது.

தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா! என்று இதேபோன்று அன்பாக பேசிக்கொண்டே சிறிது சிறிதாக அருகில் சென்றது. மானும் உதவி தான் செய்கிறது என்று எண்ணி நம்பிவிட்டது.

நரி மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்து மான் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி. அறவணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை நிரவேற்றிக்கொண்டது.

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.


விளக்கம்: தீய குணமுடையவர் அன்பின் மிகுதியினால் விழுங்குபவர் போல் பார்த்தாலும் அவருடைய நட்பு வளர்வதை விடக் குறைவது நல்லது.

என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். நல்ல நட்புடன் பழக வேண்டும் என்று கூறுகிறேன்.

இன்றைய செய்தி துளிகள் : 02.07.2018

1. அரசு பள்ளி மாணவர்களுக்கு லண்டன் பேராசிரியர்கள் மூலம் இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு!

2.திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீதம் பிளாஸ்டிக்பயன்பாடில்லாத பள்ளிக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்,'' - முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார்

3.தமிழக சட்டசபை நடப்பு கூட்டத் தொடரில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்?: உச்ச நீதிமன்ற கெடுவையடுத்து நடவடிக்கை

4.நம் நாட்டில் பேசப்படும் தாய்மொழிகளின் எண்ணிக்கை 19,569 : ஆய்வில் தகவல்

5. ஆதார் கார்டுடன், பான் எண்ணை இணைக்க 2019, மார்ச் 31 வரை அவகாசம்

6.போராடி தோற்றது அர்ஜென்டினா : கால் இறுதியில் பிரான்ஸ்

பிளாஸ்டிக் பயன்பாடில்லாத பள்ளிக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு!

Sunday, July 1, 2018


திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத பள்ளிக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்,'' என, முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை வகித்தார்.

கூட்டத்தில், காணொளிக்காட்சி மூலம், சி.இ.ஓ., ஜெயக்குமார் பேசியதாவது: பள்ளி வளாகத்தில், தினமும் இறைவணக்க கூட்டத்தில், பசுமை உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, வரும், ஜூலை, 31க்குள் முற்றிலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத சிறந்த பள்ளிக்கு, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில், ஒரு லட்சம் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை, பள்ளி முகப்பில் தெரியும்படி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

7th std - Term 1 - Lesson Plan for All Subjects

7th Tamil - Term 1 - Lesson Plan - Click here

7th English - Term 1 - Lesson Plan - Click here

7th Maths - Term 1 - Lesson Plan - Click here

7th Social Science - Term 1 - Lesson Plan - click here

8th std - Term 1 - Lesson Plan for All Subjects

8th Tamil - Term 1 - Lesson Plan - Click here


8th English - Term 1 - Lesson Plan - Click here

8th Maths - Term 1 - Lesson Plan - Click here

8th Social Science - Term 1 - Lesson Plan - click here

STD 8 - 1ST TERM - TAMIL LESSON PLAN - ALL UNITS

அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை 9 மணிக்குள் பள்ளியில் இருக்க CEO உத்தரவு!


DEPARTMENTAL EXAMINATION 2018 – TNPSC OFFICIAL TENTATIVE ANSWER KEY PUBLISHED

அனைத்து பள்ளிகளின் UDISE NUMBER!!!





பிற பள்ளியிலிருந்து நமது பள்ளியில் சேர்ந்த மாணவர்களை அவர்கள் முன்பு படித்த பள்ளியின் UDISE NO, வகுப்பு  மற்றும் பிரிவு பயன்படுத்தி SEARCH செய்யலாம்.

UDISE NUMBER, வகுப்பு , பிரிவு மூலம் தேடும் போது மாணவனின் மாற்றுச் சான்றிதழில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரி மட்டும் இருப்பதால் UDISE NUMBER இன்றி தேடுவதில் சிரமம் ஏற்படுகிறது…


பின் வரும் லிங்கை அழுத்தி அதில் உள்ள தமிழகத்தின் அனைத்து பள்ளிகளின் UDISE எண்ணை அறிந்து கொண்டு எளிதாகத்தேடவும்…


CLICK HERE👇👇👇

HTTPS://DRIVE.GOOGLE.COM/FILE/D/0B5CEV_SAOO07QMNZZWDUNGZ2VXC/VIEW?USP=DRIVESDK

வகுப்பறையில் புதிய அணுகுமுறைகளை செயல்படுத்த ஆர்வமாக உள்ள ஆசிரியர்களுக்கு!!

வகுப்பறைகளில் புதிய அணுகுமுறைகளை செயல்படுத்த ஆர்வமாக
இருந்தால் உங்கள் செயல்திட்ட சுருக்கத்தினை ஜீலை 30 ஆம் தேதிக்குள் RIE மைசூருக்கு அனுப்ப வேண்டும். அங்கு தெரிவு செய்யப்பட்ட செயல்திட்டங்களை டெல்லியில் இருக்கும் NCERT க்கு அனுப்பி வைப்பார்கள்.

NCERT ல் பகுப்பாய்வு செய்து  சிறந்த செயல்திட்டத்தை ந்மது வகுப்பறையில் செயல்படுத்துவதற்கு அனுமதி தருவார்கள். அனுமதி கடிதம் கிடைத்த பின் ஒரு மாதம் முதல் சுமார் ஆறு மாதங்களுக்குள் உங்கள் செயல்திட்டத்தை செயல்படுத்தி அதன் அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும்.

அதன்பின் ஒருமுறை டெல்லி சென்று உங்கள் செயல்திட்டத்தை வழங்க வேண்டும். சிறந்த பத்து செயல் திட்டத்திற்கு தேசிய விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும். ஆர்வம் இருக்கும் ஆசிரியர்கள் உங்கள் வகுப்பறையில் செயல்படுத்தும் புதிய அணுகுமுறைகளை தேசிய அளவில் பகிர்ந்து பரிசினை பெற்றுக்கொள்ளுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள link ல் அதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Click here to read more link

கல்வி மாவட்டங்கள் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு அதிகாரிகளுக்கு வாகனம் ஒதுக்கீடு செய்யாததால் ஆய்வுப்பணிக்கு செல்ல தவிப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட 128 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு வாகனம் ஒதுக்கீடு செய்யாததால் ஆய்வுப்பணிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். தமிழக பள்ளிக் கல்வியில் நிர்வாக சீர்திருத்தம் செய்வதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அதிக அளவில் அதிகாரம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி 68 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடம் 128 இடங்களாக உயர்த்தப்பட்டு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாவட்டங்களில் உள்ள தொடக்க  மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை நியமிப்பது, மாறுதல் உத்தரவுகள் பிறப்பிப்பது, பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்வது என பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்ய உள்ளனர். இது தவிர பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை மேற்பார்வையிடவும் உள்ளனர்.



புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு அரசு பள்ளியை தேர்வு செய்து அதில் அவர்களுக்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அதிகாரிகள் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்ய வசதியாக வாகனங்கள் ஒதுக்கீடு செய்யவில்லை.

அதனால், மாவட்டங்களில் உள்ள கிராமப்பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து தொடக்க கல்வி இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் விரைவில் வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி வரும், 9ம் தேதி துவக்கம்

பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில், ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதியை, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
 
இதில், பிளஸ் 1ல், புதிய பாடத்திட்டப்படி, பாடங்களை நடத்துவது குறித்து, ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி, வரும், 9ல் துவங்கி, 21ல் முடிகிறது. மாவட்ட அளவில், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வழியாக, பயிற்சி தரப்படுகிறது. பயிற்சிக்கான ஆசிரியர்கள், மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்

பள்ளிக்கல்வி இயக்குனராக ராமேஸ்வரமுருகன் நியமனம்: அரசாணை வெளியீடு


 பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் நேற்று ஓய்வுபெற்றதையடுத்து ராமேஸ்வரமுருகன் தமிழக அரசால் பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் நேற்று ஓய்வு பெற்றார்.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது பணியாற்றி வரும் ராஜேந்திரன் கூடுதல் பொறுப்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


 
பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் நேற்றுடன் ஓய்வு பெற்றார். தற்போது மத்திய இடைநிலை கல்வி திட்டத்தின் இயக்குனராக உள்ள ராமேஸ்வரமுருகன் பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2014ம் ஆண்டு இவர் ஏற்கனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ஜூலை 1ம் தேதி முதல் காலியாக உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடத்துக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் கூடுதல் இயக்குனராக பணிபுரியும் ராமேஸ்வரமுருகனை பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது. என்று கூறப்பட்டுள்ளது

அமைச்சர் செங்கோட்டையனின் அசத்தல் திட்டம்! 6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பட்!


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறார். இன்று புதிய திட்டமாக 6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்து படிக்க வசதியாக ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் டேப் வழங்க மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் எளையாம்பாளையத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்த அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.

பாஸ்போர்ட்டுக்கு புது ‘ஆப்’: 2 நாளில் 10 லட்சம் பேர் பதிவிறக்கம்


இந்தியாவின் எந்த பகுதியில் வசிக்கும் நபரும், மொபைல் போன் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வகையில், புதிய, ‘மொபைல் ஆப்’பை, பாஜவைச் சேர்ந்தவரும், வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் அறிமுகம் செய்தார்.


  இதில், கம்ப்யூட்டர், பிரிண்டர் இன்றி, மொபைல் போன் மூலம், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதுடன், அதற்கான கட்டணம் செலுத்தி, நேர்காணலுக்கான நேரம், தேதியை பெறும் வசதியும் உள்ளது.

இதனால், புதிய, ‘மொபைல் ஆப்’பிற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வகையிலான பாஸ்போர்ட்டிற்கான புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு நாட்களில், 10 லட்சம் பேர் அந்த ‘ஆப்’பை பதிவிறக்கம் செய்துள்ளதாக, அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One