எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வீடு வீடாக சென்றது வீணா? - அரசின் அறிவிப்பால் தொடக்கக்கல்வித் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி...

Thursday, May 31, 2018

தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை சமூகத்தில் நலிவுற்ற ஏழை எளிய  குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமாம், அதனால்  அரசுப்பள்ளிக்கு வர  வேண்டியவர்களை தனியார் பள்ளியில் கொண்டுபோய் சேர்க்கனும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால்,  புதிய மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால்  தலைமையாசிரியர்மற்றும் ஆசிரியர்கள் அதற்கான காரணம் கூற வேண்டுமாம் இப்படியும் ஒரு  ஆணை..தனியார் பள்ளியில் அரசே சேர்க்க ஆணையிடுகிறதெனில் விடுமுறை  நாட்களில்மாணவர்களை சேர்க்க வீடு வீடாக சென்று அரசு பள்ளியில் சேர்க்க  சொல்லி சேர்க்கை பேரணிகள்  பிரச்சாரங்கள் செய்வதெல்லாம் வீணா. தனியார்  பள்ளிகளைவிட அரசு பள்ளிகள் சிறந்து விளங்கினாலும் தனியார் பள்ளிகளைவிட  அரசு பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினாலும் கற்பித்தாலும், கற்றல்  கற்பித்தல் பணிகளுக்கு சொந்த பணத்தை போட்டு சில வசதிகளை அரசை  எதிர்பாராமல் தாமே உருவாக்கிக்கொடுத்தாலும் தனியார் பள்ளிகளின் மீதுள்ள  மோகத்தால்  பணமுள்ளவர்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்லும் இன்றைய  காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகளில் பணம் செலுத்த முடியாத  பணமில்லாதவர்கள் வசதியற்றவர்கள் தான் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்களையும் இந்த அரசு தடுக்கின்ற வகையில் நீ உன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்துவிடு. உன்னிடம் பணமில்லை என்றாலும் பரவாயில்லை அரசே தனியார் பள்ளிகளுக்குபணத்தை செலுத்தும் என்று கூறுவது ஏற்புடையதா .எங்கேயாவது இப்படி நடக்குமா?? தனியார் பள்ளியில் மாணவர்கள்  சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்  என்றும் ஒரு ஆணை.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், புதிதாக மாணவர் சேர்க்கை நடைபெறவில்லைஎன்றால் அதற்கான காரணம் கேட்கப்படும் என்றும் ஓர் ஆணை.. இரண்டு ஆணைகளையும் போடுவதும் ஒரே நபர்!!! என்னன்னு சொல்றது இதை..தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களுக்கு அரசு செலுத்தும் பணத்தைஅரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு  பயன்படுத்துமேயானால்அரசு பள்ளி நலன் பெறுமே!! தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை அரசு பள்ளிகளில் இந்த அரசால் ஏற்படுத்தி தரஇயலாதா.. பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பல தனியார் பள்ளிகளில் போதிய வசதிகளே இல்லாத பள்ளி. அப்பள்ளிகளைவிட கற்றல் கற்பித்தலில், நம் பள்ளி 100% உயர்வானது.  நம் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் போதிய கல்வி தகுதியோடு உள்ளவர்கள்.

கற்றல் கற்பித்தலில் சிறந்தவர்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் அப்படியா உள்ளது.. தனியார் பள்ளிகள் சிறந்த பள்ளிகள் என்பதற்கான அளவுகோல் எது. 10&12ம் வகுப்பு தேர்ச்சியா.. அரசு பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகளில் அடைவுத்திறன் மதிப்பீட்டு தேர்வுகள் உண்டா.. வாசித்தல் திறன் ஆய்வு உண்டா. அரசுப்  பள்ளிகளில் பராமரிக்கும் ஏகப்பட்ட பதிவேடுகள் அங்குண்டா.. ABL SALM ALM முறைகள் உண்டா.. இங்கிருக்கும் நடைமுறைகள் அங்கு எதுவும் இல்லாதபோது அரசு பள்ளியையும் தனியார் பள்ளியையும் ஒப்பிடுவது எவ்வாறு????

ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டியவைகள் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - செயல்முறைகள் (31.05.2018)




NEET தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு!

MBBS,BDS படிப்புக்கான NEET தேர்வு முடிவுகள் ஜூன்5-ம் தேதி வெளியீடுஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வு முடிவுகளை வரும் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது.மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய நீட் தேர்வை, இதற்கு விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26 ஆயிரத்து 775 மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர்.தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை வரும் வரும் 5-ம் தேதி www.cbseneet.nic.in இணையதளத்தில் வெளி யிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிவு: பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும்

அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் போன்றே ஏப்ரல் மூன்றாவது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

கோடை விடுமுறை வியாழக்கிழமை முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளன.

இதனை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்கள் காலை 9.15 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும்.

புதிய சீருடையுடன் நாளை பள்ளிக்கு வர வேண்டும். பிறந்தநாள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் சீருடையில்தான் பள்ளிக்கு வர வேண்டும்.
இடுப்பு தெரியும் வகையிலோ அல்லது இறுக்கமான வகையிலோ சீருடை இருக்கக் கூடாது.

 மாணவர்கள் சட்டையை இன் செய்திருக்க வேண்டும். இன் செய்ய வசதியாக சீருடை தைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோடை விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

 கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகளும், போக்குவரத்து அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு நடத்தினர்.

இதையடுத்து சரியாகப் பராமரிக்கப்படாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

 அதேவேளையில் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் செய்து வருகின்றனர்.

பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.

 பள்ளி திறக்கும் நாளிலேயே பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

Schools Free Mid Day Meals List 2018-2019 | பள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் எந்த தேதியில் என்ன உணவு வழங்க வேண்டும் என்ற அட்டவணை வெளியீடு.


"WHATSAPP" ற்கு போட்டியாக களமிறங்கிய பதஞ்சலி.. வெளியானது Kimbho Messaging App


ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் சார்பில், கிம்போ என்கிற மெசேஜிங் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இது வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி என்கிற நிறுவனத்தை 2006ம் ஆண்டு துவக்கினார். இந்த நிறுவனம் FMCG பொருட்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது. ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது.

சமீபத்தில் இந்த நிறுவனம் பி எஸ் என் எல் நிறுவனத்துடன் இணைந்து 'சுதேசி சம்ரிதி' என்கிற பெயரில் சிம் கார்டை அறிமுகப்படுத்தியது. விரைவில் இந்த சிம் கார்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 144 மாதக் கட்டணத்தில் அன்லிமிட்டெட் கால்கள் மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் சார்பில் கிம்போ என்கிற மெசேஜிங் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இது வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக இருக்கும் என்று பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்கே திஜாராவாலா தெரிவித்துள்ளார்

NMMS Scholarship Amount increased from Rs.6000 to 12000 per annum effect from April 2017


02.06.2018 சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு வேலை நாள் - CEO PROC


'மற்றவர்களுக்கு நீங்கள் ரோல்மாடல்' - அரசுப் பள்ளி ஆசிரியரைப் பாராட்டிய உதயச்சந்திரன்


தனியார் பள்ளிகளைவிட, தான் பணிபுரியும்
அரசுப் பள்ளியை சிறப்பாக மாற்றிய ஆசிரியரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார், பள்ளிக் கல்வித்துறை அதிகாரி உதயச்சந்திரன்.

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது பொய்யாமணி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார் பூபதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பள்ளிக்கு இவர் வந்தபோது எந்த வசதியும் இல்லாமல் இருந்திருக்கிறது. சக ஆசிரியர்கள், ஊர் மக்களின் துணையோடு பள்ளியில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறார். ஊர் முழுக்க மரக்கன்றுகள், பள்ளி வளாகத்தில் இயற்கை காய்கறித் தோட்டம், மாந்த் தோட்டமதாகியவற்றை அமைத்திருக்கிறார்.

ஸ்பான்ஸர்களைப் பிடித்து, ஏ.சி வகுப்பறை, ஏ.சி கணினி ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ் ரூம், பள்ளி வளாகம் முழுக்க வைஃபை வசதி, நவீன தரைதளங்கள், பியூரிஃபைடு வாட்டர், நவீன டாய்லெட் வசதி என்று எல்லா வகையிலும் சிறப்பாக மாற்றியிருக்கிறார். இதற்காக, சமீபத்தில் இந்தப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழும் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில், இதுவரை ஏழு பள்ளிகளுக்குத்தான் இந்த தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை, பள்ளியில் நடக்கும் நல்ல மாற்றங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டுவந்திருக்கிறார், ஆசிரியர் பூபதி. அதைப் பார்த்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரி உதயச்சந்திரன், பூபதியை சென்னைக்கு அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.


இதுகுறித்து ஆசிரியர் பூபதியிடம் பேசினோம்,   ``எங்கள் பள்ளியை வெகுவாகப் பாராட்டினார். 'உங்கள் முயற்சிக்கு மாணவர்கள், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பு தருகிறார்களான்னு கேட்டார். '100 சதவிகிதம் ஒத்துழைக்கிறார்கள்'னு சொன்னதும், மகிழ்ந்தார். நீங்கள் செய்வது நல்ல முயற்சி. பொய்யாமணி பள்ளி, அரசுப் பள்ளிகளுக்கெல்லாம் அடையாளம். நீங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரோல்மாடல். இதுபோல தொடர்ந்து செயல்படுவதுதான் முக்கியம்' என்று பாராட்டியதோடு, நாமக்கல் வரும்போது எங்கள் பள்ளிக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவரது பாராட்டு எனக்கு நோபல் பரிசு கிடைச்சாப்புல இருக்கு. இந்தப் பாராட்டு தந்த தெம்பில் பொய்யாமணி பள்ளியை இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டுபோகப் பாடுபடுவேன்" என்றார்.

ONE DAY ICT WORKSHOP


ஒரு நாள் ICT WORKSHOP கிருஷ்ணகிரி DIET ல் நடைப்பெற்றது.

பயிற்சியில் பகிரப்பட்ட தகவல்கள் 1.How to create e-mail.
2.How to create youtube channel.
3.how to create blogspot.
4.how to connect mobile phone and laptop.
5.how to scan and generate QR CODE.6.SMART TEACHER KIT.
7.SMART STUDENT KIT.
8.INTERACTIVE SMART BOARD WITH ALL FACILITIES.
9.SMART ANDROID APPS.
10.WIRELESS KEYBOARD AND MOUSE.11.RASPBERRY PI SMART COMPUTER.12.OTG CABLE USES.
13.DIKSHA APP.
14.Airdroid app.
15.how to create website.
16.3d mirroring and virtual reality box.              சிறப்பு விருந்தினராக விழுப்புரம்திரு. சாப்ட்வேர் சண்முக சுந்தரம் அவர்கள்,வாணியம்பாடி  Interactive smart board expert திரு.அருண்குமார் அவர்கள்,கல்வி சிறகுகள் திரு.கார்த்திகேயன் அவர்கள் பயிற்சி அளித்தனர்.









பிளஸ் 1 தேர்ச்சியில் அரசு பள்ளிகள் வீழ்ச்சி சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் திணறல்

பிளஸ் 1 தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்து, கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. இதில், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் வழக்கம் போல், ஆதிக்கம் செலுத்தின. ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் இரண்டாம் இடத்திலும், தனியார் பள்ளிகள், மூன்றாம் இடமும் பெற்றன.பிளஸ் 2வில் முன்னிலைக்கு வரும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பிளஸ் 1 பொது தேர்வின் கடின வினாத்தாளுக்கு ஈடுகொடுக்க முடியாமல், நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. ரயில்வே பள்ளிகளும், ஓரியண்டல் என்ற பிறமொழி பள்ளிகளும், தேர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளன. அரசு பள்ளிகள், பிளஸ் 1 தேர்வில் தாக்குப்பிடிக்க முடியாமல், தேர்ச்சியில், கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.ஆண்கள் தேர்ச்சி மோசம்பிளஸ் 1 பொது தேர்வு முடிவில், தனியார் மெட்ரிக் பள்ளிகள், தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளன. பல்வேறு வகை பள்ளிகளில், பெண்கள் பள்ளிகள், 94.9 சதவீத தேர்ச்சியுடன், முதலிடம் பெற்றுள்ளன. ஆனால், ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில், பெண்கள் பள்ளிகளை விட, 14 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.அதேநேரம், மாணவர் மற்றும் மாணவியர் இணைந்து படிக்கும் பள்ளிகளில், 91.6 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. பாடப்பிரிவு வாரியான தேர்ச்சியிலும், அனைத்து பாடங்களிலும், 90 சதவீதத்துக்கு மேல் மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உணவு பதப்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து தொழில்நுட்ப பாடத்தில், 99.80 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தாவரவியலில் சரிவுபிளஸ் 1 தேர்வில், மொழி பாடங்களை, 8.47 லட்சம் பேர் எழுதி, அதில், 95.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியலில், 5.22 லட்சம் பேர் தேர்வெழுதி, 93 சதவீதம் பேரும், வேதியியலில், 5.22 லட்சம் பேர் பங்கேற்று, 92.74 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த பாடப்பிரிவில், உயிரியல் தேர்வெழுதிய, மூன்று லட்சம் பேரில், அதிகபட்சமாக, 96.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பிரிவில், தாவரவியல் தேர்வெழுதிய, 76 ஆயிரம் பேரில், 89 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வின்போது, தாவரவியல் வினாத்தாள் மிக கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோல், தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் அளவும் குறைந்துள்ளது.கணித வினாத்தாளும் கடினமாக இருந்த நிலையில், அதில், 4.25 லட்சம் பேர் தேர்வு எழுதி, 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொருளியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடத்தில், 94 சதவீதமும், வரலாறில் மிக குறைவாக, 87 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது. மனை அறிவியல் பாடத்தில் தேர்வு எழுதிய, 76 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.

நிர்வாக ரீதியாக பள்ளிகளின் தேர்ச்சிநிர்வாகம் சதவீதம்1. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 98.672. ஆங்கிலோ இந்தியன் பள்ளி 98.573. சுயநிதி பள்ளிகள் 98.054. சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளி 97.975. ஓரியண்டல் பள்ளிகள் 97.656. ரயில்வே பள்ளிகள் 96.307. பகுதி அரசு உதவி பள்ளிகள் 96.238. அரசு உதவி பள்ளிகள் 94.409. இந்து அறநிலையத்துறை 94.0610. சமூக நலத்துறை 93.8811. வனத்துறை பள்ளிகள் 90.5812. மாநகராட்சி 88.6413. கள்ளர் சீர்திருத்த துறை 88.0514. நகராட்சி பள்ளிகள் 85.7215. பழங்குடியினர் நலத்துறை 84.9316. அரசு பள்ளிகள் 83.9117. ஆதி திராவிடர் துறை 77.74

பிளஸ் 1 பொது தேர்வு - 85 சதவீதம் தாண்டவில்லை

பிளஸ் 1 பொது தேர்வில், வினாத்தாள் கடினமாக இருந்ததால், 90 சதவீதத்துக்கு அதிகமாக, மிக சிலரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர்களும், 85 சதவீதத்தை தாண்டவில்லை.ஆண்டு தோறும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளில், முடிவு எப்படி இருக்கும்; அதில், யார் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள, பெற்றோர், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரும் ஆர்வமாக இருப்பர்.இந்த ஆண்டு, பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், பிளஸ் 1ல் தேர்ச்சி விகிதம் என்ன; மதிப்பெண் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பே அதிகரித்துள்ளது.இதன்படி, நேற்று வெளியான தேர்வு முடிவில், மதிப்பெண் அளவு மாணவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. தேர்ச்சி பெறுவோமா என, மாணவர்கள் அச்சத்தில் இருந்த நிலையில், தேர்ச்சியில் பெரும்பாலும் பாதிப்பு இல்லை. தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வை விட அதிகமாக இருந்தது. ஆனால், பாடவாரியாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணில், பெரும் சரிவு ஏற்பட்டிருந்தது.மற்ற பொது தேர்வுகளில் உள்ளதை போல், பிளஸ் 1லும், 'டாப்பர்' என்ற, 'ரேங்கிங்' முறை பின்பற்றப்படவில்லை. யார் முதல் மதிப்பெண், எந்த பள்ளி முதலிடம் என்பன போன்ற தகவல்கள் இடம் பெறவில்லை. அதேநேரம், மாணவர்களின் மதிப்பெண் அடுக்குமுறை வெளியிடப் பட்டது.இதில், மொத்தம், 600 மதிப்பெண்களுக்கு, 83 சதவீத மதிப்பெண்ணான, 500க்கு மேல், 36 ஆயிரத்து, 380 பேர் பெற்றுள்ளதாக, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அதில், 90 சதவீதத்துக்கு மேல், அதாவது, 550 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருந்ததால், அதை, தேர்வுத்துறை குறிப்பிடவில்லை.

29 சதவீதம், 'ஜஸ்ட் பாஸ்' தேர்வெழுதிய, 8.63 லட்சம் பேரில், 64 ஆயிரத்து, 817 பேர், 451 முதல், 500 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். இது, 75 முதல், 83 சதவீத மதிப்பெண். அதேபோல், 48 ஆயிரத்து, 532 பேர், 426 முதல், 450 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர்; இது, 71 முதல், 75 சதவீதம் மொத்த மதிப்பெண்ணில், 66 சதவீதத்துக்கும் மேல், அதாவது, 401க்கு மேல், 425 மதிப்பெண் வரை, 61 ஆயிரத்து, 351 பேர் பெற்றுள்ளனர். 351 முதல், 400 வரை, 1.60 லட்சம் பேரும்; 301 முதல், 350 வரை, 1.93 லட்சம் பேரும்; 201 முதல், 300 மதிப்பெண் வரை, 2.48 லட்சம் பேரும் பெற்றுள்ளனர் ஒவ்வொரு பாடத்திலும், தலா, 35 மதிப்பெண் வீதம், ஆறு பாடங்களில் குறைந்த பட்சம், 210 மதிப்பெண் பெற வேண்டும். இந்த, 'ஜஸ்ட் பாஸ்' வகையில், 29 சதவீதம் பேர், 201 முதல், 300 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர் தேர்வு எழுதிய, 8.63 லட்சம் பேரில், 70 சதவீதம் பேர், 210 முதல், 400 வரையிலான, 35 முதல், 65 சதவீத மதிப்பெண்களே பெற்றுள்ளனர். 4 சதவீதம் பள்ளி மாணவ - மாணவியரும், 5 சதவீத தனித்தேர்வர்களும், தேர்ச்சி பெறவில்லை

Teachers Transfer Counseling - விண்ணப்பங்கள் எப்போது பெறப்படும்?

கலந்தாய்வு செய்தி: ஜூன் 10 க்குள் விண்ணப்பம் பெறப்படும். ஜூன் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

6-9 வகுப்பு மாணவர்களின் அடைவுத்திறன் கண்டறிதல்தேர்வு மற்றும் bridge course அளித்து மாணவர்களின் தரத்தை மேம்படுத்துதல்-CEO procee Dt.30.05.2018




New Text Books Download Now via tnscert ebooks link


புதிய பாடநூல்கள் (1,6,9,11) இணையத்தில் கிடைக்கின்றன.


நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ புதிய மற்றும் கடின வார்த்தைகள். தமிழ் வழி மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்காக.

SC, ST - மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது பிரதமருக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து திரும்ப பெற முடியாது என்று கல்வி உதவித்தொகை திட்ட வழிகாட்டி விதியில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக அளவில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் ஏழ்மை நிலையில் உள்ளனர். இவர்களால் ‘மெரிட்’ மூலம் அரசு இடஒதுக்கீட்டை பெற முடியாது. சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இவர்கள் படித்து, கல்வி உதவித்தொகை மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டம் ஏராளமான மாணவர்களை உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியில் சேர வழிவகை செய்கிறது. ஒட்டுமொத்த கல்வி சேர்க்கை விகிதம், 45 சதவீதத்தை தாண்ட இந்த திட்டம் மிக பயனுள்ளதாக உள்ளது.

எனவே புதிய விதிகளை வகுத்து, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்வி கட்டணத்தை திரும்ப பெற முடியாது என்று கூறுவதால், அவர்களுக்கு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி மறுக்கப்படுவதோடு, ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கும் இலக்கை அடைவதில் பின்னடைவு ஏற்பட்டுவிடும். மேலும் இது எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும்.

சமூக நீதி, எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் மேம்பாடு போன்றவற்றுக்கான திட்டங்களை வலுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளை, திருத்தப்பட்ட வழிகாட்டி நீர்த்துப்போக செய்து விடும். மத்திய பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு பல ஆண்டுகளாக தேக்க நிலையில் உள்ளது. அந்த வகையில் மார்ச் மாதம் வரை தமிழக அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத்தொகை ஆயிரத்து 803 கோடியே 50 லட்சம் ஆகும்.

ஏற்கனவே இருக்கும் பயன்களை குறைப்பதற்காக விதிகளில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பதிலாக, நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும். மற்ற மத்திய அரசு திட்டங்களில் உள்ளது போல, கல்வி உதவித்தொகை திட்டத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு முறையே 60:40 சதவீதம் என்றளவில் இருக்க வேண்டும்.

எனவே இதில் நீங்கள் தலையிட்டு, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை பாதிக்கும் விதிகளை திரும்ப பெற நடவடிக்கை வேண்டும். கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகையை விரைவாக மத்திய அரசு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

நூலகங்களில், 'WIFI' ; ஆசிரியர்களுக்கு, 'BIOMETRIC'

'அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு, 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும். நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார்.

சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக, செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவுகள், மின்னணு வருகைப் பதிவு எனப்படும், 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும். அதற்கு, ஒன்பது கோடி ரூபாய் செலவிடப்படும்.அரசு பள்ளிகளில், 6.23 கோடி ரூபாய் மதிப்பில், நுாலகங்கள் அமைக்கப்படும்.மாணவர்கள், திறன் சார்ந்த கல்வியை பெறும் வகையில், 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 3.55 கோடி ரூபாய் செலவில், தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்.
தொன்மை வாய்ந்த கட்டடம், அரிய வகை நுால்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாக்கும் வகையில், 1.50 கோடி ரூபாய் செலவில், குளிர்சாதன வசதியுடன், கன்னிமாரா நுாலகம் புதுப்பிக்கப்படும்.காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மூன்று நுாலகங்கள், 1.50 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய, மாதிரி நுாலகங்களாகமாற்றப்படும்.
காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மாணவர்களை ஈர்க்கும் திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.இத்திட்டம், இந்த கல்வியாண்டில், 1.28 கோடி ரூபாய் செலவில், அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.அனைத்து ஒன்றிய தலைமை இடங்களிலும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக, ஒரு கோடி ரூபாய் செலவில், 'ஆதார்' சேர்க்கை மையங்கள் ஏற்படுத்தப்படும்.மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், ஒரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், 32 விளையாட்டு மேம்பாட்டு பள்ளிகள், 96 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக, 96 லட்சம் ரூபாய் செலவில், கணினி மூலமாக, நவீன தொழில்நுட்பத்துடன், பேசும் கருவி, பேசும் புத்தகம், மென்பொருள், கற்றல் உபகரணம், தொடுதிரை, தொடுகை வரைபடம், சிறப்பு விசைப்பலகை, ஒலிப்புத்தகம் ஆகிய வசதிகள், மாவட்ட மைய நுாலகங்களில் ஏற்படுத்தப்படும்.
வரும் கல்வியாண்டில் இருந்து, ஒவ்வொரு மாதமும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்த, 90.97 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர் கல்வி நிறுவனங்களுடன், அரசு பள்ளிகளை இணைக்கும் திட்டம், 67 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.அரசு உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில், இடைநிலை கல்வி பயிலும் திறன்மிக்க மாணவர்கள், பிற மாநிலங்களில் உள்ள அறிவியல், தொழிற்நுட்பம், கல்வி சார்ந்த தேசிய நிறுவனங்களை பார்வையிட, வாய்ப்புகள் வழங்கப்படும்.இதற்காக, 40.20 லட்சம் ரூபாய் செலவிடப்படும். 
அனைத்து மாவட்ட நுாலகங்களிலும், 32 லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் டிவி அல்லது எல்.இ.டி., புரஜெக்டர்' வசதி ஏற்படுத்தப்படும்.குடிமைப் பணி தேர்வுகள் உட்பட, அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தேவைப்படும் தகவல்கள், உரிய நேரத்தில் சென்றடையும் வகையில், பொது நுாலகங்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், மென்பொருள் உருவாக்கப்படும்.மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில், 32 மாவட்டங்களிலும், தலா, 5,000 ரூபாய் வீதம், 'நுாலக ஆர்வலர் விருது' வழங்கப்படும்.
முதற்கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை மாவட்ட நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்.மாணவர்களுக்கு, பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, 'இளம் படைப்பாளர் விருது' வழங்கப்படும். மாணவர்களுக்கு பயன் தரும் வகையில், பல்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்த, 5,000 வீடியோக்கள் தொகுக்கப்பட்டு, தமிழக அரசு கேபிள் வழியாக, ஒரு மணி நேரம்ஒளிபரப்பப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

பிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் 2–ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் மாதம் 2–ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மறு கூட்டல்,மறு மதிப்பீட்டுக்கு 4–ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–


2018–ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அடுத்த(ஜூன்) மாதம் 2–ந் தேதி அன்று பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 4–ந் தேதி முதல் 6–ந் தேதி வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 1 மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பிளஸ் 1 தேர்வில், மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். சிறப்பு துணை தேர்வு, ஜூலை, 5ல் துவங்க உள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, நேற்று வெளியானது. இதில், 8.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதவர்கள், சிறப்பு துணை தேர்வு எழுதலாம். அவர்களுக்கு, ஜூலை, 5 முதல் சிறப்பு துணை தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.



மதிப்பெண் பட்டியல் எப்போது: தேர்வு எழுதியவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம், ஜூன், 4 முதல் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம். www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். அரசு தேர்வுத்துறையால், அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே, இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும். 
மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரும், தனித்தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியரும், சான்றொப்பம் அளித்தால் மட்டுமே, மதிப்பெண் பட்டியல் செல்லும். எனவே, மதிப்பெண் பட்டியலில் சான்றொப்பம் பெற வேண்டும்.
மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்படி: பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், ஜூன், 1, 2 மற்றும், 4ம் தேதிகளில், பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும். மொழி பாடம் ஒன்றுக்கு, தலா, 550 ரூபாயும், முக்கிய பாடங்களுக்கு, தலா, 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விடைத்தாள் மறுமதிப்பீடு தேவை என்றால், அவர்கள் முதலில் விடைத்தாள் நகலை பெற வேண்டும். அதை ஆய்வு செய்து, மறுமதிப்பீடு தேவை என்றால் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கேட்பவர்கள், மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் பெற்று, மறுமதிப்பீடு தேவையா அல்லது மறுகூட்டல் தேவையா என்பதை முடிவு செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.மறுகூட்டல், மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் ஒப்புகை சீட்டை பாதுகாக்க வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்

அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக டாக்டர் என்.ராஜேந்திரனை தமிழக கவர்னரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். என்.ராஜேந்திரன் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரலாறு பேராசிரியராக பணி புரிந்தவர். இவர் ‘தமிழ்நாட்டில் தேசியம்’ மற்றும் ‘சுவதேசியம்’ ஆகிய 2 நூல்களை எழுதி இருக்கிறார்.


27 ஆண்டுகள் கல்வித்துறையில் கற்பித்தல் மற்றும் நிர்வாகத்திறமையில் அனுபவம் பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் மற்றும் இயக்குனராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி உள்ளார். பாரதிதாசன் பள்ளி நிர்வாகத்தின் நிறுவனர் ஆவார். இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழுவில் 2008 மற்றும் 2015-ம் ஆண்டு என 2 முறை உறுப்பினராக அங்கம் வகித்துள்ளார்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட என்.ராஜேந்திரன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டி ராஜ்பவனில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

QR CODE TNTEXT BOOK 1ST SONG !!!


புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுக்கு நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்

128 பள்ளிகளுக்கு 192 லட்சம் செலவில் புதுமைப்பள்ளி விருது வழங்கப்படும்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2 லட்சமும் வழங்கப்படும். 192 ஆசிரியர்களுக்கு 10,000 வீதம் 19.2 லட்சம் செலவில் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விப் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த  காமராசர் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திற்கு 30 மாணவர்கள் என மொத்தம் 960 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 145.3 லட்சம் செலவில் விருது வழங்கப்பட உள்ளது

இவ்வாண்டு 200 பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்

இந்த ஆண்டு 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

தமிழகத்தில் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் 854 பள்ளிகளில் குறைந்த அளவு மாணவர்கள் இருக்கின்றனர். அதனால் அந்த பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்கன்வாடியில் உள்ள 4.35 லட்சம் மழலைகளுக்கு உரிய ஆங்கில பயிற்சி அளித்து அரசுப் பள்ளியில் சேர்க்க அரசு பரிசீலித்து வருகிறது

சென்னையில் புதிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில்  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெரிலேயே,  டிபிஐ வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.39 கோடியே 90 லட்சம் செலவில்  ஒருங்கிணைந்த கல்வித்துறைக்கான கட்டிடம் கட்டப்படும்

பள்ளிக் கல்வித்துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 27,205.88 கோடி ஒதுக்கீடு

சட்டப் பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:


பள்ளிக் கல்வித்துறைக்கு 2018-19ம்  ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தில் 27,205.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தேர்வு முறையில் தர வரிசை ரத்து செய்யப்பட்டதுடன், மாணவரின் செல்போனுக்கு உடனடியாக தேர்வு முடிவுகள் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



3 ஆயிரம் பள்ளிகளில் 60 கோடி செலவில் ஹைடெக் ஆய்வகம் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் தெரிவித்தார்.


இந்த ஆண்டு முதல் இணைய தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. ரூபாய் நோட்டுகளில் இருப்பது போல ரகசிய குறியீடுகள் கொண்ட கிழியாத வகையில் தயாரிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படுகிறது.




கடந்த 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு நடைமுறைக்கு வர உள்ளது. இதையடுத்து, மூன்றாண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் என்ற இலக்கினை, இந்த ஆண்டிலேயே அடைவது என தீர்மானித்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளைச் செம்மைப்படுத்தவும், எளிமைப்படுத்தவும், அதன் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு 68 மாவட்ட கல்வி அலுவலகங்கள் நிர்வாக வசதிக்காக 120 மாவட்ட கல்வி அலுவலகங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.


நபார்டு வங்கி உதவியுடன் அறிவியல் உபகரணங்கள், கணினிகள், அறிவியல் ஆய்வகங்கள், ஆங்கில மொழி ஆய்வகங்கள், கணித ஆய்வகங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.200 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், தளவாடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், குடிநீர்வசதி மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்பட உள்ளன. பள்ளிகளில் தூய்மைப் பணிகள் “100 நாள் வேலை” திட்டப் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும்.


முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெரிலேயே,  டிபிஐ வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.39 கோடியே 90 லட்சம் செலவில்  ஒருங்கிணைந்த கல்வித்துறைக்கான கட்டிடம் கட்டப்படும்.





மேலும், 3090 உயர்நிலைப் பள்ளிகள் - 10 கணினிகளுடனும், 2939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு - 20 கணினிகளுடனும் கூடிய  ஹைடெக் ஆய்வகம் ஏற்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக 3000 பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு தலா 2 லட்சம் வீதம் 60 கோடி செலவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் உலகத்தர தொழில்நுட்பத்தோடு ரோபாடிக் பயிற்சி வகுப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடங்க பரிசீலித்து வருகிறோம்.


கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில்  8869 பள்ளிகள் 90,889 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 32 மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகளுக்குப் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது.


உலகப் புத்தக தினத்தை (ஏப்ரல் 23) முன்னிட்டு 24-1-2018 முதல் 15-4-2018 முடிய மாநில அளவில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2020ம் ஆண்டிற்குள் நூலகங்களில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சிந்துசமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த சிறப்பு நூலகம்   மற்றும் காட்சிக்கூடம்,  கீழடி, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, நீலகிரி, திருச்சி, கோவை, சென்னை மாவட்டங்களில் அமைக்கப்படும். உலகத் தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் 6 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் அமைக்க ஆவன செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க திட்டம் : செங்கோட்டையன் தகவல்

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வருடன்  ஆலோசனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகல்வித்துறை மானிய கோரிக்கையில் விவாதத்தின் போது, எம்எல்ஏ செம்மலை ( மேட்டூர்) பேசியதாவது: பாட திட்ட மாற்றம் ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளி கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகத்தை குறைக்கும் வகையில் ஆங்கில வழியிலான எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி, இயங்குவதால் மெட்ரிக்குலேசன் என்ற பெயரை தனியார் சுய நிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.


அமைச்சர் செங்கோட்டையன் :  அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி தொடங்குவது குறித்து முதல்வர்,  துணை முதல்வருடன் கலந்து பேசி ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு  எடுக்கப்படும். மெட்ரிக்குலேசன் பெயர் மாற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கும்.




செம்மலை : அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி கொண்டு வந்தால்தான் போட்டியை தவிர்க்க முடியும். வயிற்றில் குழந்தை  இருக்கும் போதே தனியார் பள்ளிகளில் எல்கேஜியில் சேர்ப்பதற்கு பதிவு செய்கின்றனர். எனவே, விரைந்து இதற்கான முடிவு எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 4 வயதிற்குள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கின்றனர்.


அமைச்சர் செங்கோட்டையன் : அரசு கண்டிப்பாக விரைந்து முடிவு எடுக்கும். அங்கன்வாடி மையங்களுடன் ஒருங்கிணைந்து உள்ள ஆரம்ப பள்ளிகளில் 90 சதவீதம் மாணவர்கள் படிக்கின்றனர். 5 வயது பூர்த்தியானால் மட்டுமே அரசு பள்ளிகளில் சேர்க்க முடியும் என்ற விதி உள்ளது. தனியார் பள்ளிகளில் 4 வயதுக்கு முன்னரே குழந்தைகளை சேர்ப்பது தொடர்பாக உரிய சட்ட விதிகள் கொண்டு வர நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது

பணி மாறுதலுக்கு வழிகாட்டு நெறிகள் : பள்ளிக் கல்வித்துறை வெளியீடு

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:


தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறையில் மாறுதல் வழங்க மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், இணை இயக்குநர் ஆகியோர் தகுதி உடையவர்கள். 2017-2018ம் ஆண்டில் பணி நிரவல் பெற்றவர்கள் மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அனுமதி வழங்கலாம்.


ஒரு இடத்துக்கு ஒருவருக்கு மேல் மாறுதல் கேட்டால் அவர்களுக்கு சில முன்னுரிமையின் அடிப்படையில் வழங்க வேண்டும். குறிப்பாக புற்றுநோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மற்றும் டயாலசிஸ் செய்து கொள்பவர்கள், முற்றிலும் கண்பார்வையற்றவர்கள் என 21 வழிகாட்டுதல்கள் படி வழங்க வேண்டும்.




சிறப்பு முன்னுரிமை ்அடிப்படையில் மாறுதல் பெறுவோர் 3 ஆண்டுகள் கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. மலைப் பாங்கான இடங்களுக்கு செல்ல தயக்கம் காட்டுவார்கள் என்பதால் மலை சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும். ஈராசிரியர் பள்ளியில் ஒருவர் மாறுதல் பெற்றால் புதிய ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகுதான் அவரை விடுவிக்க வேண்டும். இதுபோல 21 வழி்காட்டு நெறிமுறைகள் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது

பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி எகிறியது எப்படி?

பிளஸ் 1 தேர்வில், வினாக்கள் மிக கடினம் என, மாணவர்கள் புலம்பிய நிலையில், 'ஜீ பூம்பா' மந்திரம்போல், தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வை விட அதிகரித்துள்ளது.


தமிழக பாடத்திட்ட மாணவர்கள், தேசிய அளவிலான போட்டி தேர்வு களில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு, நீண்ட காலமாக உள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர்களை தயார்படுத்த, பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


இந்த ஆண்டு, முதல் முறையாக நடந்த பொது தேர்வில், வினாத்தாளில் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகள் இடம்பெற்றன. ஐ.ஐ.டி., நடத்தும், ஜே.இ.இ., மற்றும் மருத்துவ கவுன்சில் நடத்தும், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகள் போன்று, பிளஸ் 1 பொது தேர்வில், வினாக்கள் கேட்கப்பட்டன.


அதனால், பெரும்பாலான மாணவர்கள், பதில் எழுத திணறினர்.வினாக்கள் கடினமாக இருந்ததாக, பெற்றோரும், ஆசிரியர்களும் கவலை தெரிவித்தனர். அதனால், சலுகை மதிப்பெண் தேவை என்றும், கோரிக்கை எழுந்தது. ஆனால், தேர்வுத் துறை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், பிளஸ் 1 தேர்வில், 91.3 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது, எப்படி நிகழ்ந்தது என, ஆசிரியர்களும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.


40 சதவீதத்துக்கும் மேல், மாணவர்களின் தேர்ச்சி பாதிக்குமோ என, விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள், அச்சத்தில் இருந்தனர். ஆனால், அனைத்துக்கும் நேர்மாறாக, தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 1 தேர்வு முறையும், வினாத்தாள் முறையும் மிக கடினமாக இருந்தது. ஆனால், பள்ளிக் கல்வித் துறையின் முயற்சி, இறுதியில் மாறி விட்டதாக தெரிகிறது.


வழக்கம்போல், அரசியல் ரீதியாக, தேர்ச்சி சதவீதம் காட்டப்பட்டதோ என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. விடை திருத்தத்தில் வராத மதிப்பெண், இறுதி பட்டியலில், அதிகம் வந்ததுபோல் தெரிகிறது.


எனவே, மதிப்பெண்ணை பதிவு செய்வதில், 'டேட்டா என்ட்ரி' முறை பின்பற்றப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.பொது தேர்வு முறையில், எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும், மதிப்பீடு முறையும், மதிப்பெண்ணை இறுதியாக பதிவு செய்யும் முறையும், வெளிப்படை தன்மையுடன் நடந்தால் மட்டுமே, மாணவர்களின் சரியான கல்வித் திறன் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

கோடை, 'விடுமுறை ' முடிந்தது நாளை பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகளில் நாளை முதல், வகுப்புகள் துவங்க உள்ளன. புதிய கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்களும், சீருடைகளும் நாளை வழங்கப்பட உள்ளன.

தமிழக பாடத்திட்டத்தில், பள்ளி இறுதி தேர்வும், பொது தேர்வுகளும், ஏப்., 20ல் முடிந்தன. ஏப்., 21 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இன்று வரை, 41 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.

சென்ற ஆண்டில், முந்தைய வகுப்புகளில் இருந்த மாணவர்கள், நாளை அடுத்த வகுப்புக்கு, தேர்ச்சி பட்டியலின்படி மாற்றப்பட உள்ளனர்.முதல் நாளான நாளை, அரசின், 14 வகை நலத்திட்டங்களில், பாட புத்தகம், நோட்டு புத்தகம், இலவச சீருடை போன்றவை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

பள்ளி திறப்பை பொறுத்தவரை, நாளை மறுநாள் சனிக்கிழமை என்பதால், பல தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளி திறப்பை, ஜூன், 4க்கு தள்ளி வைத்துள்ளன. இந்த பள்ளிகள், முதலாவதாக வரும் சனிக்கிழமையில், கூடுதலாக ஒரு நாள் பணியாற்றி ஈடு செய்ய முடிவு செய்துள்ளன

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காதது ஏன்? - கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

பகுதி  நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாததற்கு மத்திய அரசு செவி சாய்க்காததே காரணம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது பேசிய அதிமுக கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு, பணிப் பதிவேடு பராமரித்தல் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அவர்களின் ஊதியத்தை ரூ. 15 ஆயிரமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும் என்றார்

இதற்குப் பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது

பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) கீழ் பள்ளிகளில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். வாரத்தில் மூன்று நாள்களுக்கு மட்டுமே அவர்களுக்கு பணி வழங்கப்படும். அதுவும் ஒரு நாளில் அவர்கள் 2 மணி நேரம் மட்டுமே பணிபுரிவர்

இருந்தபோதும், இவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் வகையில், கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசிடம் பேசியபோது அதற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை என பதிலளித்தார்

இந்தத் திட்டத்தின் கீழ் பலர் தொலைதூரத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களை, அவர்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்

பள்ளி ஆய்வின் போது CEO, DEO, BEO, EDC, SSA APO, BEO, BRC SUPERVISOR, BRTE, DI, DPEI, ECO ஆகிய கல்வித்துறை அதிகாரிகளின் பணிகள் என்ன? - செயல்முறைகள் (30.05.2018)

Wednesday, May 30, 2018

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் - Important Points Highlights

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 403-ல்

தொடக்கக் கல்வித்துறை சார்ந்து வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளை இங்கு காண்போம்!


4 நிலைகளில் மாறுதல் நடைபெறும்


 ஒன்றியத்திற்குள்


 (புதிய) கல்வி மாவட்டத்திற்குள்


 மாவட்டத்திற்குள் (கல்வி மாவட்டங்களிடையே)


 மாவட்டம் விட்டு மாவட்டம்

மாறுதல் வழங்கும் அதிகாரம்


 ஒன்றியம் & கல்வி மாவட்டத்திற்குள் : மாவட்டக் கல்வி அலுவலர்


 மாவட்டத்திற்குள் : முதன்மைக்கல்வி அலுவலர்


 மாவட்டம் விட்டு மாவட்டம் : இயக்குநர்.

சிறப்பு முன்னுரிமையில் பகுப்பு


 50% & அதற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளி (IV)


 50%-க்கு கீழுள்ள மாற்றுத்திறனாளி (VII)


 1.6.18-ல் 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (V)


 5 வருடங்களுக்குக் கீழ் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (VIII)


 1.6.18-ல் ஒரே பள்ளியில் குறைந்தது *5 ஆண்டுகள் / அதற்கும்மேல்* பணிபுரிந்தோர் (X)

பிற முக்கிய கூறுகள்


 1.6.2017-க்கு முன் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும்.


 1.6.2017-ற்குப் பின் தன் இணையை இழந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கலாம்.


 மாறுதல் பெறுவோர் இனி குறைந்தது 3 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும்.


 2017-18-ல் பணிநிரவல் செய்யப்பட்டோருக்கு அனுமதி உண்டு.


 2018-19 முதல் முன்னுரிமை விபரம் மாறுதல் ஆணையில் இடம் பெறும்.


 இணையர் உரிமை (SPOUSE) (XI) கோருவோர் தமது இணை பணியாற்றும் மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


 மலைச் சுழற்சி நடைபெற வேண்டும்.


 அலகு விட்டு அலகு இல்லை.


 மாநிலச் சராசரிக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ள மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்குவதைத் தவிர்ப்பதோடு, மாறுதல் & பதவி உயர்வில் வெளிமாவட்டங்களில் இருந்து அம்மாவட்டங்களுக்கு நிரப்புதல் வேண்டும்.


 ஈராசிரியர் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படும் வரை பணிவிடுவிப்பு இல்லை.

வழக்கத்திற்கான மாற்றம்


 நிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்

School Education 2018-2019 Year Planner Published! பள்ளிக்கல்வித்துறை 2018 - 2019 ஆம் கல்வியாண்டு வாராந்திர  செயல்திட்டம் வெளியீடு!!

மதிப்பெண் சான்றிதழ்கள் கிழியாதபடி non tearable paper-இல் இனி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

10, 12ஆம் வகுப்பு தமிழ் பாடத்துக்கு 2 தாள்களாக இல்லாமல் இனி ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடைபெறும்.


மதிப்பெண் சான்றிதழ்கள் கிழியாதபடி non tearable paper-இல் மாணவர்களுக்கு இனி வழங்கப்படும்

-அமைச்சர் செங்கோட்டையன்

New DEO Office Opening Regards Clarification



அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் இயற்ற வல்லுநர் குழு அமைப்பு

அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுத்திட மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் முன் வைக்கப்பட்ட பள்ளி கல்வி துறை கொள்கை விளக்கு குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு பொது பாடத்தின்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மாநில பள்ளிக்கல்வி பொதுப்பாட சட்டம் 2010-ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கான கட்டணத்தை கல்வி கட்டணக் குழு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பள்ளியால் நிர்ணயிக்கப்ட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த ரூ.63,86,290 ரூபாயை மாணவர்களிடம் திரும்ப வழங்க கட்டண நிர்ணய குழு ஆணையிட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.  

புதிய கற்றல் முறை படிநிலைகள்!!


பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறிவிப்புகள் - ALL OFFICIAL COPY PUBLISHED

FLASH NEWS- 2018-19 TEACHERS COUNSELING GO -403 DATE-29.05.2018 PUBLISHED

மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்


ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன. வீடியோ அழைப்புகளில் இனி குழுவாக இணைந்து அழைக்கும் வசதி குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. பிரவுசரில் 'api.whatsapp.com/send?phone= என டைப் செய்து பின்னர், தொலைபேசி எண்ணை டைப் செய்வதன் மூலம் எண்ணை சேமிக்காமலேயே செய்தி அனுப்ப முடியும். இதேபோன்று வாட்ஸ் அப் மீடியாக்களில் 30 நாட்களுக்குள் டெலிட் செய்யப்பட்ட வீடியோ அல்லது புகைப்படத்தை மீண்டும் பதிவறக்கம் செய்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.


ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வாட்ஸ் அப் செயலிலேயே காண்பதற்கான வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிள் ஐ-போன் செயலியில் மட்டுமே இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஐ-போன் பயனாளர்களுக்கான புதிய வசதியாக வாட்ஸ் அப்பில் பதிவிறக்கம் செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனின் கேலரியிலிருந்து மறைக்கவும் முடியும். இதுமட்டுமல்லாது, இந்தியாவில் யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களை வழங்கும் சேவைகளுக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ் அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு பள்ளிகளில் LKG, UKG- உட்பட இன்றைய சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்


*மொழி பாடங்கள் தாள் 1,  தாள்2 என்ற முறையை மாற்றி‌ ஒரே தாளாக தேர்வு நடத்த நடவடிக்கை.


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை ஏற்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொலைதூரத்தில் இல்லாமல் ரகுல் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல் வழங்கப்படும்

*அரசு பள்ளிகளில் LKG, UKG  வகுப்புகளை துவக்க நடவடிக்கை.



*அரசு பள்ளி ஆசிரியருக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு 



*ரூபாய் 9 கோடி செலவில் அரசுப் பள்ளி  ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும்.



*அரசு கேபிள் டிவியில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பாடப்பிரிவுகளில்  காணொளிகாட்சிகள் ஒளிபரப்பப்படும்.





*துவக்கத்தில் இது ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும்.



*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் நூலகங்களில்  வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.



*கன்னிமாரா நூலகம் புதுப்பிக்கப்படும்



சட்ட பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.



அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.


சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

அரசுப்பள்ளிகளின் சீருடை மாற்றம்- 1 முதல் 12 ஆம் வகுப்புவரை -முழு விவரப்படங்கள்





தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்துநீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள் கல்வியாளர்களின் ஆய்வில் தகவல்!


STUDENT SCHOOL ADMISSION FORMS - 2018 (NEW)



5th std 1st term All subjects and All Lesson FA (B)

Periyar University Feb 2018 pride Exam result published

இனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு:  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தகவல்கள் :

இந்தக் கல்வியாண்டு (2018-2019) முதல்... இனிவரும் காலங்களில் இந்த Whats Appல் இனி தங்களின் பள்ளிப் பார்வையின் பதிவேற்றம் பின்வருமாறு பதிவிட வேண்டும்  என்று C.E.O. அவர்கள் தெரிவித்துள்ளார்.  தகவல் பின்வருமாறு :


1. ஒன்றியம் / பள்ளியின் பெயர்


2. அப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை,


3. தங்கள் பார்வையிட்ட வகுப்பு, மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, 




4. தங்கள் பார்வையில் கண்ட பள்ளியின் நிறைகள் / குறைகள்,


5. கடந்த பள்ளி பார்வையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டதா? அதன் விவரம்,


6. இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பெயர் மற்றும் காரணம்,


7. பள்ளியில் மாணவர்கள் இடையே தனித்திறமை இருப்பின் அந்த விவரம் மற்றும் புகைப்படம். மேற்கண்ட முறையில் மட்டுமே பதிவிட வேண்டும் என்று தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள படுகிறது.


-தகவல் C.E.O.

+1 Result - பாட வாரியாக தேர்ச்சி விகிதம்!


+1 Result - ஈரோடு மாவட்டம் முதலிடம்!

ஈரோடு மாவட்டம் - 97.3% பெற்று மாநில அளவில் முதலிடம்!

திருப்பூர்  மாவட்டம் - 96.4% பெற்று மாநில அளவில் இரண்டாயிடம்.

கோவை மாவட்டம் - 96.2% பெற்று மாநில அளவில் மூன்றாமிடம்.

+1 Result Published Now

91.3% மாணவ,  மாணவிகள் தேர்ச்சி !

94.6% மாணவிகள் தேர்ச்சி !

87.4% மாணவர்கள் தேர்ச்சி !

ABL பாடமுறைக்கு மாற்றாக PILOT கல்வி முறை அமல்-வரும் கல்வி ஆண்டு முதலே அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த முடிவு

Pedagogy method will implement to all primary schools from 2018-19 academic year.Some important points alternative (Pedagogy) methodology:
👉Tamil Nadu Govt will implement alternative method instead of ABL. This method is calling Pedagogy.
(Kuzhandai Neya Katral).
👉This method will implement 2 schools in each block level as a trial from January 2018.
👉Pedagogy method will implement to all primary schools from 2018-19 academic year.
👉1 to 3 std mingle (for Asst tr)
👉4 and 5 std mingle (for HM)
👉Alternative method will introduce. Name Pedagogy.
👉ABL cards not implement.
👉Text book, students work book and Teacher Guide will issue.
👉Low level black board,  kambi pandal, self attendance, Grouping, health chakra and whether chart will continue.
👉Each period 90 minutes only.
👉Daily 3 subjects will teach.

Period 1
9.30 to 11 am
Period 2
11.10 to 12.40
Period 3
2.00 pm to 3.30
👉Extra curricular and co curricular activities:
1.30 to 2.00 pm &3.40 to 4.10 pm.👉
👉Six groups reduced.  Only 4 groups.
👉QR code has in the text book.
👉Teacher scan the QR code, then video lesson will play in the mobile or tablet.
👉Many activities in the text book.
👉Teacher can teach each class separately.
👉But should give activity or written work to other class students.
👉More activity for bright students and minimum activity for slow learners in the text book and work book.
👉Students materials should display on the kambi pandal.
👉15 periods to a week.
👉All periods and subjects same to all classes in the school. Time table will design by Education Department.
In future student will evaluate through online with the help of tablet.
👉4 std No ABL.
👉4 and 5 std SALM methodology will implement.
👉Cards maybe use as  TLM.

ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், பள்ளி இறுதி தேர்வு மற்றும் பொது தேர்வுகள், ஏப்., 20ல் முடிந்தன. அடுத்த நாள் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.


உத்தரவு : ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை போன்றே, ஏப்., மூன்றாவது வாரம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், 41 நாட்கள் கோடை விடுமுறை, நாளை முடிவுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், ஜூன், 1 முதல் வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி திறப்பு நாளில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு : இந்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், பள்ளி திறக்கும் நாளிலேயே, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.

இணையதள கல்விக் கழகம் மூலம் இணைய வழியில் கணினி தமிழ் பாடத் திட்டம்

இணையதள கல்விக்கழகம் மூலம் இணைய
வழியில் கணினித் தமிழ் பாடம் கற்றுத் தரப்படும் என்று  அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார்

தமிழ் மொழியை கணினிக்கு கொண்டு செல்லும் கட்டாயம் உள்ளது

எனவே, கணினித் தமிழ் பாடத்திட்டத்தை பட்டயப் படிப்பாக இணைய வழியில் இணையதள கல்விக் கழகம் பயிற்றுவிக்க உள்ளது

அரசுத் துறைகளுக்கு தேவைப்படும் பட்சத்தில், தகவல் தொழில்நுட்ப பணியாளர் தொகுப்பில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்

அரசுத் துறைகளின் இணையதளங்கள் உரிய கால இடைவெளியில் பாதுகாப்பு தணிக்கை செய்யப்படும்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் M.Sc. Marine-Biology(5yrs) படிக்க வாய்ப்பு

புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கம் - ஆலோசனை செய்ய அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் CEO அழைப்பு - சுற்றறிக்கை


2nd & 3rd STD TAMIL BOOKS WITH QR CODE FOR PRACTICE TO TEACHERS


பாடநூலில் உள்ள QR CODE வேலை செய்யும் விதத்தினை சோதிக்க ( 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்கான சமச்சீர் ” தமிழ் ” பாடத்திட்டத்தின் ) இந்த PDF ஐ DOWNLOAD செய்து PRINT செய்து பயன்படுத்தவும்.!!!

Click here to download pdf

மானியக்கோரிக்கையில் மாற்றம் வருமா? தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு !!!

7வது கல்வி ஆண்டைநிறைவுசெய்யும்  12000க்கும்மேலான தொகுப்பூதிய பகுதிநேரஆசிரியர்களுக்கு(தற்போது சம்பளம்ரூ.7700) பட்ஜெட்மானியக்கோரிக்கையில் தமிழகஅரசு  புதிய அறிவிப்புகளைவெளியிட வலியுறுத்தல்.

மே மாதத்திற்கு ஊதியம்தரவேண்டி கல்விஅமைச்சர்,பள்ளிக்கல்வி முதன்மை செயலர்மற்றும் அனைவருக்கும்கல்விஇயக்க மாநில திட்டஇயக்குநர் ஆகியோரை கடந்தஏப்ரல் மற்றும் நடப்பு மேமாதத்தில் நேரில் சந்தித்துகோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.பரிசீலித்து வருவதாக அமைச்சர்மற்றும் செயலர் அவர்களும்நம்பிக்கை அளித்து இருந்தனர்.ஆனால் மே மாதத்திற்கு ஊதியம்தரவேண்டியது குறித்துஉத்தரவுகள் வரவில்லை எனஅனைவருக்கும் கல்வி இயக்கஅதிகாரிகள் சொல்கிறார்கள்.எனவே மே மாதம் ஊதியம்தருவது குறித்து செயல்முறைஆணைகளை உடனடியாகவெளியிடவேண்டும்.

வருகின்ற ஜீன் மாதத்தில்பணிமாறுதல் நடத்தஅனைவருக்கும் கல்வி இயக்கம்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.எனவே ஏற்கனவே 25.10.2017ல்கல்விஅமைச்சர் அவர்களை சந்தித்தபோது அவரவர் இருப்பிடபகுதிக்கு அருகில்அனைவருக்கும் பணிமாறுதல்தருவதாக சொன்னபடி விரைந்துநடமுறைப்படுத்த வேண்டும்.

மேலும், ஏற்கனவேஅறிவிக்கப்பட்ட 7வதுஊதியக்கமிஷன் 30% ஊதியஉயர்வுடன் சேர்த்து கணிசமானஊதிய உயர்வு மற்றும் அனைத்துவேலைநாட்களிலும் முழுநேரவேலை குறித்தஅரசாணைகளை வெளியிட்டுஇந்த மானியக்கோரிக்கை கூட்டத்தொடரிலே அரசு வெளியிட அனைவரும்வலியுறுத்தி வருகின்றனர்என்பதை கூடுதல் கவனம்செலுத்தி ஆவன செய்திடவேண்டும்.


ஊதிய முரண்பாடுகளைகலைய வலியுறுத்தும் ஒருநபர்குழுவிடம் தொகுப்பூதியபகுதிநேர ஆசிரியர்களுக்குஅனைத்து வேலைநாட்களிலும்முழுநேரப்பணியுடன்சிறப்புகாலமுறை ஊதியத்தில்பணியமர்த்த கோரிக்கை மனுஅளிக்கப்பட்டுள்ளது. எனவேதமிழக அரசு இந்ததருணத்திலாவது தொகுப்பூதியபகுதிநேர ஆசிரியர்களுக்குஊதிய உயர்வுடன்கூடியநிலையான வேலையைஉறுதிசெய்து அறிவிப்புகளைபுதிய அரசாணையைவெளியிடவேண்டும்.

ஏற்கனவே ஜீன், ஜீலை2017ல் நடைபெற்ற  சட்டமன்றகூட்டத்தொடரில் தொகுப்பூதியபகுதிநேர ஆசிரியர்களுக்குஊதிய உயர்வு மற்றும்பணிநிரந்தரம் குறித்த திமுகஉறுப்பினர்களின்கேள்விகளுக்கு கல்வி அமைச்சர்பணிநிரந்தரம் செய்ய அரசுபரிசீலித்து வருகிறது என்றும்,பணிநிரந்தரம் செய்ய கமிட்டிஅமைக்கப்டும் எனவும்பதிலளித்துள்ளதை விரைந்துசெயல்படுத்த வேண்டும். மேலும்ஜனவரி 2018ல் நடைபெற்றகூட்டத்தொடரில் வேடச்சந்தூர்அதிமுக சட்டமன்ற உறுப்பினர்பரமசிவம் பகுதிநேரஆசிரியர்களுக்கு தற்போதுதரப்பட்டுவரும்தொகுப்பூதியமான ரூ.7700/-ஊதியத்தை உயர்த்தி தரவலியுறுத்தியதைகூட அரசுநடைமுறைப்படுத்தாமல் உள்ளதுவேதனையளிக்கிறது.


தமிழக முதல்வரை சந்தித்தபோது (2.11.2017)குறைந்தபட்சமாக சிறப்புகாலமுறை ஊதியத்தில் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.போராட்ட நாட்களில் 100%அளவில் பள்ளிகளை இயக்கிட அரசு உத்தரவிட்டு பகுதிநேர ஆசிரியர்களை முழுநேரமும் முழுஅளவில் பயன்படுத்தியதை அங்கீகரித்து, தமிழக அரசு மனிதநேயத்துடன் இந்த பட்ஜெட் மானியக்கோரிக்கை கூட்டத்தொடரிலாவது புதிய அரசாணை வெளியிட்டு சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த அனைவரும் ஒருமனதாக தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுக்கிறோம்.

 இவன், செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,செல் : 9487257203

திருவண்ணாமலையில் 18 பள்ளிகள் மூடல்!!! (பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைப்பு)




இன்று பிளஸ் 1 'ரிசல்ட்'; மாணவர்கள் கலக்கம்

சென்னை: முதல் முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்டுள்ள, பிளஸ் 1 பொது தேர்வின் முடிவுகள், இன்று(மே 30) வெளியாகின்றன.

தமிழகத்தில் இந்தாண்டு முதல், பிளஸ் 1க்கும் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்ச்சில் துவங்கி, ஏப்ரலில் முடிந்த இந்த தேர்வில், 8.61 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:00 மணிக்கு வெளியாகின்றன.

தேர்வர்களின் மொபைல்போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரம் எஸ்.எம்.எஸ்., ஆக வரும். மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில், பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். ஜூன், 4 முதல் மதிப்பெண் பட்டியலை பெறலாம்.

திக்.. திக்...

பிளஸ் 1 பொது தேர்வில், பெரும்பாலான வினாத்தாள்கள் கடினமாக இருந்தன. குறிப்பாக, ஜே.இ.இ., மற்றும், 'நீட்' நுழைவு தேர்வில் கேட்கப்படுவது போன்ற கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் பதில் அளிக்க திணறினர். விடை திருத்தத்தின்போது, 40 சதவீத மாணவர்கள், 'ஜஸ்ட் பாஸ்' என்ற தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே எடுத்தது தெரிய வந்தது.

இந்நிலையில், இன்றைய தேர்வு முடிவு எப்படி இருக்கும் என, மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஆனால், தேர்ச்சி விகிதம் பாதித்தால், விமர்சனம் ஏற்படும் என்பதால், பெரும்பாலான மாணவர்கள், தேர்ச்சி நிலைக்கு கொண்டு வரப்பட்டிருப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது

அரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படுமா?

சென்னை,
சட்டசபையில் 30-ந்தேதி (இன்று) பள்ளி
கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் கேள்விகள் வருமாறு:-

* அரசு பள்ளிகளின் தர நிர்ணயத்தை ஆய்வு செய்து அவற்றை கண்காணிக்கக்கூடிய தன்னிச்சையான ஆணையம் அமைப்பதற்கு அரசு முயற்சி எடுக்குமா?

* 2017-18 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த கணினி வழிக்கல்வி மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றனவா?

* மாணவர்கள் பொது அறிவு மற்றும் மொழித்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் 31 ஆயிரத்து 322 பள்ளிகளுக்கு ரூ.4.83 கோடி மதிப்பிலான சிறுவர் நாளிதழ்கள், இதழ்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன?

* குழந்தைகளுக்கான வகுப்புகளை அரசு பள்ளிகளில் உடனடியாக தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து பள்ளி கல்வித்துறை எப்போது முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தும்?

சட்ட திருத்தம்

* துணை வேந்தர்களின் மீதான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் கல்வித்துறையின் மீதான நம்பிக்கையை குறைத்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கு தன்னிச்சையான அமைப்புகளை உருவாக்குவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவருமா?

* பட்டதாரி மாணவ-மாணவிகள் வேலை வாய்ப்பு இன்றி கிடைக்கின்ற வேலை செய்யும் நிலையை போக்குவதற்கு, திறன் மேம்பாடு கல்வி திட்டத்துக்கு என்ன வகையான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டுள்ளது?

இவை அனைத்தையும் ஆராய்ந்து சட்டங்கள், மசோதாக்கள், மானியக் கோரிக்கைகள் போன்றவற்றை பரிசீலிக்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்கப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

பிளஸ் 2வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சிப்பெற்ற  மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து, சென்னையில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களை சந்தித்து கூறியதாவது:

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் கடந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. பிஎஸ்சியில் 20 பட்டப்படிப்புகளும், 16 டிப்ளமோ படிப்புகளும் உள்ளது. வகுப்புகள் பல்கலைக்கழகத்தில் நடக்கும். இதற்கான பயிற்சிகள் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடைபெறும்.

பிஎஸ்சி படிப்புகள் 4 வருடங்கள். இதில், 3 வருடங்கள் மாணவ, மாணவிகள் படிப்பார்கள். ஒரு வருடம் பயிற்சியில் ஈடுபடுவார்கள். டிப்ளமோவில் 2 வருடங்கள் படிப்பார்கள். 6 மாதம் பயிற்சியில் ஈடுபடு வார்கள்.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப்பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த படிப்புகளை படிக்க ரூ. 18 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். கடந்தாண்டு 10 படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

200 இடங்களில் 32 இடங்கள் மட்டுமே நிரம்பியது. எனவே, இந்தாண்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, பல்கலைகழகத்தின் பதிவாளர் பாலசுப்ரமணி உடனிருந்தார்.

HSE (+1) First Year - PUBLIC EXAM MARCH 2018 RESULT -Official Link

HSE ( +1 ) First Year -Examination Results Expected on 30th May 2018 at 09:00 Hrs.



Flash News : அரசு பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்த தடை

Tuesday, May 29, 2018

பள்ளி மாணவர்களுக்கு தனியாக சிறப்பு வகுப்புகளை எடுக்கக்கூடாது  என்று புதுச்சேரி அரசு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தவும் அரசு ஆசிரியர்களுக்கு புதுச்சேரி அரசு தடைவிதித்துள்ளது. ஆசிரியர்கள் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்படப்பட்டுள்ளது.

DSE - பள்ளிக் கல்வி நிர்வாக சீரமைப்பு புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல்-சார்பு.!







எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One