எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TET - ஆசிரியர் நியமனம்: இரண்டு தேர்வுகள் எதற்கு? உண்மையில் 13,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள்? இந்து தமிழ்

Tuesday, July 31, 2018

பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்குத் தகுதித் தேர்வு, பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு என்று இரண்டு தேர்வுகளை நடத்துவதற்கான அரசாணையை
வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

ஆசிரியர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்த வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வை இந்த ஆண்டு உரிய காலத்தில் நடத்தாமல் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தது. இந்நிலையில், இப்படியொரு அறிவிப்பு வந்திருப்பது ஆசிரியர் பயிற்சிப் படிப்பு முடித்த மாணவர்களிடையே கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மாறும் முறை

ஏற்கெனவே, சி-சாட் தேர்வு இப்படித்தானே நடத்தப்படுகிறது. தகுதித் தேர்வு எழுதி, வெற்றி பெற்றவர்கள் காத்திருந்துதானே காலிப் பணியிடங்களில் சேர்கிறார்கள் என்பது வாதத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், அது அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வு. ஒரு குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்கள் சில ஆண்டுகள் வரையில் காலிப் பணியிடங்களுக்கு முயலலாம் என்ற ஏற்பாடு அது. அந்தத் தேர்வோடு தமிழ்நாட்டுக்குள் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வை ஒப்பிட முடியாது.

 தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் முடித்தவர்களும் கல்வித் துறையில் பட்டம் பெற்றவர்களும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டு, அந்த வரிசையின் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதே நடைமுறையாக இருந்துவந்தது. அந்த நிலை மாற்றப்பட்டு, அவ்வப்போது உருவாகும் காலிப் பணியிடங்களுக்கு நேரடியாகவே போட்டித் தேர்வை நடத்தி தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும்வகையில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்தத் தகுதித் தேர்வும் போதாமல், இன்னொரு தேர்வும் நடத்தப்படுவதற்கு என்ன காரணம்? அதை அரசு விளக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துகொண்ட வரிசையின் அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதால் தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. படித்து முடித்து வெகுகாலம் சென்றபிறகு பணிக்கு வருபவர்கள் பாடங்களை  மறந்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அப்படியென்றால் இப்போது கல்லூரியிலிருந்து படிப்பை முடித்துவிட்டு வெளியே வருபவர்கள் உடனடியாகத் தகுதித் தேர்வு எழுதி வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்குப் பாடங்கள் மறந்துபோகவும் வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் தகுதித் தேர்வு, பணியிடங்களுக்கான தேர்வு என்று ஏன் இரண்டு தேர்வுகளை நடத்த வேண்டும்?

தகுதி இல்லையா?

இரண்டு கட்டத் தேர்வுகளை எழுதி வென்று ஆசிரியர் பணியில் சேர்பவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள், சிறப்பாகப் பணிபுரிவார்கள் என்று ஒரு நம்பிக்கையும் விதைக்கப்படுகிறது. அப்படியென்றால் அவர்கள் கல்லூரியில் கற்ற கல்வி தரமில்லாததா என்ற கேள்வியும் எழுகிறது. ஓராண்டு படிப்பாக இருந்த பி.எட். படிப்பு இரண்டாண்டுகளாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஆசிரியர் பயிற்சிப் பட்டயப் படிப்பை முடித்த அனைவருமே அதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து இளங்கலை, முதுகலை என்று படிப்பைத் தொடரவே செய்கிறார்கள். அப்படியும் ஆசிரியர் பணிக்கு அவர்கள் தகுதிபெறவில்லையா என்ன?

வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கவனமாகக் கையாள வேண்டிய அரசு, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் பாதிக்கப்படுபவர்களை நோக்கியே திருப்பிவிடுகிறது என்பதுதான் இந்த அரசாணையின் நோக்கமாக இருக்க முடியும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் கல்வித் துறைப் படிப்புகளையும் அரசுதான் கண்காணிக்கிறது. அப்படியென்றால் அவர்களைத் தகுதிப்படுத்த அரசு தவறிவிட்டதா?

 பட்டம் பெற்று, வேலைக்குக் காத்திருக்கும் மாணவர்களைக் காத்திருக்கச் சொன்னாலும் தவறு இல்லை. குறைந்த பணியிடங்களுக்கு அதிக போட்டிகள் நிலவும் நிலையில் ஆசிரியராவதற்கான தகுதியே உனக்கு இல்லை என்று தம் மீதான பழியை மாணவர்களை நோக்கி திருப்பி வீசப்போகிறது தமிழக அரசு.

நோக்கம் என்ன?

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவால் வேலை கொடுக்க முடியாத நிலை. ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுகளாலும் வேலை கொடுக்க முடியாத அல்லது விரும்பாத நிலை. தற்போது மேலும் ஒரு தேர்வு மாணவர்களின் மீது சுமத்தப்படுகிறது.

பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு நடத்திவந்தது. சி.பி.எஸ்.இ. வசம் அந்தப் பொறுப்பு  ஒப்படைக்கப்பட்டது. அடுத்து தேசிய தேர்வுகள் முகமை அந்தத் தேர்வுகளை நடத்தப்போகிறது. தேசிய அளவில் நடக்கும் அந்தத் தேர்வு, உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மட்டுமல்ல. அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஆய்வுப் பட்டம் படிப்பதற்கு ஊக்கத்தொகையையும் வழங்குவதற்கான தேர்வு.

ஒருவேளை ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களுக்கும் அப்படி ஏதாவது உயர்கல்விக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டால் இந்தத் தேர்வின் நோக்கம் உண்மையிலேயே கல்வியின் தரத்தை உயர்த்துவதுதான் என்று ஏற்றுக்கொள்ளலாம். அப்படியெல்லாம் ஏதும் நடக்கப்போவதில்லை.

தெருவுக்கு ஒரு தனியார் பள்ளி திறக்கப்பட்டுவருகிறது. அடிப்படைக் கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டிய அரசு தனியாரைத் தாராளமாக அனுமதிக்கிறது. தனது பொறுப்புகளிலிருந்து நழுவுகிறது. அரசுப் பள்ளிகளே இல்லாமல் போனால், அப்புறம் ஆசிரியர் எதற்கு?  2012-ம் ஆண்டுக்குப் பிறகு நான்காண்டுகள் கழித்து 2017-ல் தேர்வு நடந்தது. அடுத்த தேர்வு எப்போது?

அரசுப் பள்ளிகளின் உண்மை நிலை என்ன?

# அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை - 8,000

# அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் - 30 லட்சம்

# ஆசிரியர் பணியிடங்கள் - 1.32 லட்சம்

# காலிப் பணியிடங்கள் - 13,000

2017 தகுதித் தேர்வு - ஒரு பார்வை

1. எட்டாம் வகுப்பு வரைக்குமான ஆசிரியர் தகுதித் தேர்வுகளை எழுதியவர்கள் - 7.53 லட்சம்

2. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் -  34, 979

3. முதுகலை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் - 2,00,299

4. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் - 3,521

நன்றி - இந்து தமிழ்

கூட்டுறவு சங்க- புதிய தேர்தல் நாள் விவரம் - கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியீடு -press release



பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 01-08-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

 உரை:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

பழமொழி :

A thief knows a theif

பாம்பின் கால் பாம்பறியும்

பொன்மொழி:

வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.

- கீர்கே கார்ட்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?
ஆஸ்திரேலியா

2.சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?
அட்லாண்டிக்

நீதிக்கதை :

உதவி:-


கழுதை ஒன்று, நிறைய பொதி சுமந்து கொண்டு சென்றது. அதன் பின்னால் கழுதையின் எஜமானரும், அவர் வளர்க்கும் நாயும் வந்து கொண்டிருந்தனர். செல்லும் வழியில் புல் தரையைப் பார்த்ததும், கழுதையை அங்கு மேயவிட்டு மரத்தின் நிழலில் படுத்துத் தூங்கினார் எஜமானர்.

 கழுதை அங்கிருந்த புற்களை நன்கு மேய்ந்தது. ஆனால், நாய்க்குத் தின்பதற்கு எதுவுமில்லை. பசி, அதன் வயிற்றைப்பிடுங்கியது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாய், கடைசியாக கழுதையைப் பார்த்து, “நண்பனே, என்னால் பசி தாங்க முடியவில்லை. எஜமான ரோ தூங்குகிறார். கொஞ்சம் கீழே படு. உன் பொதியில் உள்ள உணவில் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன்” என்று கெஞ்சியது.

நாயின் கெஞ்சலை கழுதை பொருட்படுத்தவில்லை. அது ஆனந்தமாகப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. நாயும் விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தது.

நாயின் தொந்தரவு தாங்காத கழுதை, “என்னப்பா அவசரம்? எஜமானர் எழுந்திரிக்கட்டும். அவர் சாப்பிடும்போது உனக்கும்தான் கொடுப்பாரே” என்றது. வேறு வழியில்லாமல் நாய் சோர்ந்து போய் படுத்துக் கொண்டது.

அப்போது ஓநாய் ஒன்று மேய்ந்து கொண்டிருந்த கழுதை மீது பாய்ந்தது. பயத்தால் அலறிய கழுதை, “நண்பா, சீக்கிரம் ஓடிவந்து என்னைக் காப்பாற்று” என நாயைப் பார்த்து கதறியது.

படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமல், “ஏன் அவசரப்படுகிறாய்? கொஞ்சம் பொறுமையாக இரு, எஜமானர் விழிக்கட்டும். அவர்தான் கட்டாயம் உனக்கு உதவி செய்வாரே” என்றது நாய்.

கழுதை, நாய்க்கு உதவி செய்யாமல் தான் செய்த தவறை நினைத்து வருந்தியது.

நீதி: நாம் மற்றவர்களுக்கு உதவினால் தான், மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.

இன்றைய செய்தி துளிகள் :

1.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது: காவேரி மருத்துவமனை அறிக்கை

2.இந்தியாவிலேயே ஐடிஐ பராமரிப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது: அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி

3.பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

4.விண்வெளி ஆச்சர்யம்.. பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய்.. 15 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்!

5.இலங்கையுடன் ஒருநாள் போட்டி : இந்தியா யு-19 அணி அபார வெற்றி

SPD and DEE PROCEEDINGS-School Education-100% Coverage for Aadhaar Enrollment & Updation by 31.03.2018- Additional Facilities-Reg



4th std " The Sky is Falling" Reading and Tamil Meaning

வாட்ஸ்அப்பில் இனி க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசலாம்

WhatsApp group call - வாட்ஸ்அப் புதிய அப்டேட்
வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் ( WhatsApp group call) அப்டேட் செயல்முறைக்கு வந்தது. வாட்ஸ்அப் செயலி உலகில் இருக்கும் அனேக திறன்பேசி பயனர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் செயலி ஆகும்.


மிகவும் பயனுள்ளதாக இந்த செயலினையினை உபயோகிக்கும் வகையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அப்டேட்டினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சுமார் 2 பில்லியன்கள் மக்கள் பயன்படுத்தி வரும் இந்த வாட்ஸ்அப் செயலில் புதிதாக வந்திருக்கும் அப்டேட் தான் க்ரூப் கால்.
வீடியோ கால்கள் மற்றும் வாய்ஸ் கால்கள் இரண்டும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையேயான பேச்சு வார்த்தையினை மிகவும் எளிதாக்கும் வகையில் இருந்தது.
இந்நிலையில் க்ரூப் கால்கள் செய்வதற்கான வாய்ப்பினையும் அளித்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.
அந்நிறுவனத்தின் ப்ளாக் ஸ்பாட்டில் "உலகில் இருக்கும் பல்வேறு நாடுகளில் வழங்கப்படும் இணைய சேவைகள் பொறுத்து இது மாற்றம் அடையும்" என்று இது குறித்து குறிப்பிட்டுள்ளது.
வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் (WhatsApp group call) செய்வது எப்படி?
மற்ற வாட்ஸ்அப் காலினைப் போலவே ஒருவரை மட்டுமே அழைக்க முடியும்.
பின்னர் அதில் "ஆட் பார்ட்டிசிபெண்ட்" ( add participant ) என்ற வசதியினை பயன்படுத்தி உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களை இந்த குருப் காலில் இணைத்துக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்சனான 2.18.189 and v2.18.192 - ல் WhatsApp group call சரியாக இயங்குகிறதா என்று சரிபார்க்கப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது இந்த புதிய அப்டேட்.

மொத்தம் நான்கு நபர்கள் WhatsApp group video and audio call மூலம் ஒரே நேரத்தில் தகவல்கள் பரிமாறிக்கொள்ளலாம்

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்


குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுமன் ஆகியோர் கூறியதாவது, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாக இருந்த 9,351 இடங்களுக்கு நடந்த தேர்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்தத் தேர்வினை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். முதல்முறையாக, குரூப் 4 பிரிவுடன் கிராம நிர்வாக அலுவலர் தேர்வும் இணைத்தே நடத்தப்பட்டது. இதன் மூலம் டிஎன்பிஎஸ்சிக்கு ரூ.11 முதல் ரூ.12 கோடி மிச்சமானது. நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்.

பிப்ரவரி மாதம் நடந்த குரூப் 4 தேர்வை எழுதிய 17 லட்சம் பேரில் சுமார் 14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை விட 3 மடங்கு அதிகமான அதாவது 30 ஆயிரம் பேரை கலந்தாய்வுக்கு அழைப்போம்.

தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தகவல் அனுப்பப்படும், அவர்கள் தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம், அவர்கள் சென்னை வருவது தவிர்க்கப்படும்.

சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும். 30ம் தேதி வரை இ-சேவை மையங்களில் செய்யலாம். அது முடிந்ததும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கும். நாங்களே அதனை பதிவிறக்கம் செய்து சரிபார்ப்போம். அது முடிந்த பிறகு அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிவித்தனர்

SSLC - பத்தாம் வகுப்பு சிறப்புத் துணை பொதுத்தேர்வு முடிவு நாளை (01.08.2018) வெளியீடு அரசு அறிவிப்பு

10-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவினை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே நாளை பிற்பகல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி

கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் 4 பேர் தலைமையில் கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகள் விசாரிக்கப்படும் என்றும் 4 மண்டலமாக முறைகேடு விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முறைகேடு நிரூபிக்கப்பட்டால் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கூட்டுறவு தேர்தலை நடத்தினாலும் முடிவை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களின் ஊதிய பட்டியலலில் முறைகேடு - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் VIDEO


Co

ஆகஸ்ட் மாத பள்ளி நாட்காட்டி





உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கண்ட உத்தரவை பிறப்பித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை என மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் வினவினார். மேலும் ஆகஸ்ட் 6-க்குள் அட்டவணையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

அதன்பின் உள்ளாட்சி தேர்தலை சென்ற வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. அதன்பின் மீண்டும் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கில் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Inspire award-Last date of submission is extended to August 31st 2018


+2 மாதிரி வினாத்தாள்கள் அரசு இணையதளத்தில் வெளியீடு DIRECT LINK ATTACHED!!!

இலவச, 'நீட்' பயிற்சி ஒரு வாரத்தில் துவக்கம் : பாடம் நடத்த 300 ஆசிரியர்கள் தயார்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி
மாணவர்களுக்கு, ஒரு வாரத்தில், 'நீட்' தேர்வு பயிற்சி துவங்க உள்ளது. பயிற்சி அளிக்க, 300 அரசு பள்ளி ஆசிரியர்கள் தயாராக உள்ளனர்.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தனியார் நிறுவனங்கள் பல, நீட் தேர்வுக்கான பயிற்சி தருகின்றன. ஆனால், அதற்கு லட்சம் ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ - மாணவியருக்கு, அரசின் சார்பில், நீட் நுழைவு தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை, தமிழக அரசு, 2017ல் அறிமுகம் செய்தது. அப்போது, ஏற்கனவே நடந்த, நீட் தேர்வுகளின் வினா வங்கி மற்றும் முக்கிய கேள்வி - பதில்கள் அடங்கிய புத்தகம், மாணவர்களுக்கு இலவசமாக தரப்பட்டது. பள்ளிகளில், தினமும், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையிலும், வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்பாகவும், இந்த பயிற்சி வழங்கப்பட்டது. பொதுத்தேர்வு முடிந்த பின், பல்வேறு கல்லுாரி வளாகங்களில், உணவு, விடுதி வசதியுடன், அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சியும் தரப்பட்டது. அதேபோல, இந்த ஆண்டுக்கான, தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி, இன்னும் ஒரு வாரத்தில் துவங்க உள்ளது. இதற்காக, பிளஸ் 2 பாடம் நடத்தும் திறமைமிக்க, 320 ஆசிரியர்கள், பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று, பயிற்சி பெற்றுள்ளனர்.இவர்கள், மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்க உள்ளனர். மேலும், 2017 - 18ல் நடந்த, நீட் தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள் இணைந்த, வினா வங்கி கையேடும் தயாராக உள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்

பி.ஆர்க்., மாணவர் சேர்க்கை ஆக., 11ல் நுழைவு தேர்வு

'பி.ஆர்க்., படிப்பில்,
நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்வதற்கான, தமிழக அரசின் திறனறி நுழைவு தேர்வு, வரும், 11ல் நடத்தப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, மாணவர்களை சேர்க்க, தனியாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, 'நாட்டா' என்ற, தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழக மாணவர்களுக்கு, நாட்டா நுழைவு தேர்வு குறித்து, அதிக விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலானவர்கள், அந்த தேர்வை எழுதாமல், பி.ஆர்க்., படிப்பில் சேர முற்படுகின்றனர். இது போன்ற, நாட்டா தேர்வு எழுதாத மாணவர்களுக்கு, கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில், திறனறி நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும் சேரலாம். தமிழக அரசின் இந்த தேர்வு, 2017ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான நுழைவு தேர்வு, வரும், 11ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, https://admissions.annauniv.edu/tanata18 என்ற இணையதளத்தில் நேற்று துவங்கியது. வரும், 6ம் தேதி வரை விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, 1,000; மற்ற மாணவர்களுக்கு, 2,000 ரூபாய் தேர்வு கட்டணம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும், 7ல் வழங்கப்படும்; தேர்வு முடிவு, 16ல் வெளியிடப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வுக்கான விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

உயர் கல்வி சேர்க்கையில் தமிழகத்திற்கு 2ம் இடம்

மத்திய மனிதவள மேம்பாட்டு
அமைச்சகம் நடத்திய, உயர் கல்வி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில், மாணவர் சேர்க்கையில், தமிழகம், தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆண்டுதோறும், உயர் கல்வி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு நடத்தி வருகிறது. இதன்படி, 2017 - 18க்கான ஆய்வு அறிக்கையை, அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் விகிதத்தில், தமிழகம், 48.6 சதவீதத்துடன், தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரான, சண்டிகர், 56.4 சதவீதத்துடன், முதல் இடத்தையும்; புதுடில்லி, 46.3 சதவீதத்துடன், மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.நாடு முழுவதும், மொத்தம், 39 ஆயிரத்து, 50 கல்லுாரிகள் உள்ளன. அவற்றில், தமிழகத்தில், 2,472; புதுச்சேரியில், 76 கல்லுாரிகள் உள்ளன. தமிழகத்தில், ஒவ்வொரு கல்லுாரியிலும், சராசரியாக, 919 பேர் படிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில் அதிக எண்ணிக்கையில், கல்லுாரிகள் செயல்படும் எட்டு மாநிலங்களில் ஒன்றாக, தமிழகம் உள்ளது. தமிழகத்தில், 76.2 சதவீதம், சுயநிதி தனியார் கல்லுாரிகள் செயல்படுகின்றன. உயர் கல்வியை பொறுத்தவரை, பி.ஏ., பட்டப்படிப்பில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கலை படிப்புகளில், 36.4 சதவீதத்தினரும், இன்ஜினியரிங் படிப்பில், 14.1 சதவீதத்தினரும் சேர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு!!!

பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில் கண்காணிப்பு
குழு அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில், சத்துணவு, அங்கன்வாடி மையங்களில், தினமும் ஏதாவது ஒருகலவை சாதம், முட்டை, குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.இவற்றின் தரம் குறித்து, அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அரசு முடிவு : இந்நிலையில், பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தை செம்மைப்படுத்தி, ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில், கண்காணிப்பு குழுக்களை அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்ட குழுவுக்கு, கலெக்டர் தலைவராக இருப்பார்.

முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மருத்துவத் துறை இணை இயக்குனர், பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர், சமூகநல அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட, 12 பேர், உறுப்பினர் செயலர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஒன்றியஅளவில், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், குழந்தை நல வளர்ச்சி அலுவலர், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் உட்பட, ஏழு பேர்குழுவில் இடம் பெறுவர்.

விசாரணை : குழுவினர், ஒவ்வொரு பள்ளியின் அடிப்படை தேவை குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். 90 நாட்களுக்கு ஒருமுறை கூடி, பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும், இரு பள்ளிகளில் உணவு மாதிரிகளை எடுத்து, பாதுகாப்பு அலுவலர், ஆய்வு கூட்டங்களுக்கு கொண்டு வர வேண்டும்.ஏதேனும் பள்ளிகளில், தரமில்லாத உணவு தயாரித்திருப்பின், ஆய்வு கூட்டத்துக்கு பின், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்படும்

DEE PROCEEDINGS- வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் 2 மாத கால அளவில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது பார்வை செய்து முடித்திருக்க வேண்டும்


சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-17 "எடுத்தோடும் விளையாட்டு" (31.07.2018)



வரலாற்றில் இன்று ஜூலை 31


சூலை 31 (July 31) கிரிகோரியன் ஆண்டின் 212 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 213 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 153 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 30 – அலெக்சாந்திரியா சமரில் மார்க் அந்தோனியின் படைகள் ஒக்டாவியனின் படைகளை வென்றன. ஆனாலும் அந்தோனியின் பெரும்பாலான படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் தற்கொலை செய்து கொண்டான்.

781 – பியூஜி எரிமலையின் பதிவு செய்யப்பட்ட முதல் சீற்றம் இடம்பெற்றது.

1009 – நான்காம் செர்ஜியசு 142வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

1423 – நூறாண்டுப் போர்: கிரவாந்த் நகரச் சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலேயரிடம் தோற்றது.

1492 – எசுப்பானியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1498 – தனது மூன்றாவது பயணத்தின் போது கிறித்தோபர் கொலம்பசு டிரினிடாட் தீவை அடைந்தார். இவரே இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.

1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு இங்கிலாந்தின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

1655 – உருசியா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.

1658 – ஔரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசராக ஆனார்.

1712 – பெரும் வடக்குப் போர்: தென்மார்க்கு, சுவீடன் கப்பல்கள் பால்ட்டிக் கடலில் மோதிக் கொண்டன.

1715 – கியூபா, அவானாவில் இருந்து எசுப்பானியா திரும்பிக் கொண்டிருந்த 12 எசுப்பானிய புதையல் கப்பல்களில், 11 கப்பல்கள் புளோரிடா கரையில் மூழ்கின. சில நூற்றாண்டுகளின் பின்னர் இவற்றின் சிதைவுகளில் இருந்து பெருமளவு புதையல் கண்டுபிடிக்கப்பட்டன.

1741 – புனித உரோமைப் பேரரசர் ஏழாம் சார்லசு ஆஸ்திரியா மீது படையெடுத்தார்.

1790 – முதலாவது அமெரிக்கக் காப்புரிமம் பொட்டாசு செயன்முறைக்காக சாமுவேல் ஒப்கின்சுக்கு வழங்கப்பட்டது.

1805 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.

1865 – உலகின் முதலாவது குற்றகலத் தொடருந்து சேவை ஆத்திரேலியா, குயின்சுலாந்து மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1913 – பால்க்கன் நாடுகள் புக்கரெஸ்ட்டில் அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.

1932 – செருமனியில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் நாட்சி கட்சி 38% வாக்குகளைப் பெற்றது.

1938 – கிரேக்கம், துருக்கி, உருமேனியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என பல்காரியா உடன்பாட்டுக்கு வந்தது.

1938 – பெர்சப்பொலிஸ் நகரில் அகாமனிசியப் பேரரசர் முதலாம் டேரியசின் தங்கம், மற்றும் வெள்ளித் தட்டுகளைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

1954 – ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.

1964 – சந்திரனின் மிக அருகில் எடுக்கப்பட்ட படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

1971 – அப்பல்லோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.

1972 – வட அயர்லாந்தில் பல முக்கியமான நகர்ப்புறப் பகுதிகளை பிரித்தானிய இராணுவம் கைப்பற்றியது.

1973 – அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் ஒன்று மாசச்சூசெட்ஸ், பாஸ்டன் விமான நிலயத்தில் மோதியதில் 89 பேர் உயிரிழந்தனர்.

1987 – ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

1988 – மலேசியா, கோலப்புறையில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்தனர், 1,674 பேர் காயமடைந்தனர்.

1992 – சியார்சியா ஐநாவில் இணைந்தது.

1992 – நேபாளத் தலைநகர் காட்மாண்டில் தாய்லாந்து விமானம் ஒன்று மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 113 பேரும் உயிரிழந்தனர்.

1999 – நிலாவில் உறைநீரைப் பற்றி ஆராய்வதற்காக சென்ற நாசாவின் டிஸ்கவரி விண்கலம் நிலாவின் தரையுடன் மோத வைக்கப்படது.

2006 – பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தைத் தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

2006 – ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2007 – வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.

2014 – தாய்வானில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர், 270 பேர் காயமடைந்டஹ்னர்.

பிறப்புகள்

1874 – செய்குத்தம்பி பாவலர், தமிழ் எழுத்தாளர், சதாவதானி (இ. 1950)
1880 – பிரேம்சந்த், இந்திய எழுத்தாளர் (இ. 1936)
1902 – கே. சங்கர் பிள்ளை, இந்திய கார்ட்டூன் வரைவாளர் (இ. 1989)
1907 – தாமோதர் தர்மானந்தா கோசாம்பி, இந்திய மார்க்சியப் புலமையாளர், கணிதவியலாளர் (இ. 1966)
1912 – மில்ட்டன் பிரீட்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2006)
1916 – மோகன் லால் சுகாதியா, இராச்சசுத்தான் அரசியல்வாதி (இ. 1982)
1919 – வே. குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்
1936 – நேஷனல் செல்லையா, தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்படக் கலைஞர் (இ. 2016)
1940 – வியட்னாம் வீடு சுந்தரம் , வசனகர்த்தா ,இயக்குனர்
1951 – சரத் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1954 – மணிவண்ணன், தமிழக நடிகர், இயக்குநர் (பி. 2013)
1961 – ராம்ஜி, இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர்
1965 – ஜே. கே. ரௌலிங், ஆங்கிலேய எழுத்தாளர்
1989 – விக்டோரியா அசரென்கா, பெலருசிய டென்னிசு வீராங்கனை

கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் தேசிய நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்பி ராஜேந்திரன், கணினி மூலம் நீட் தேர்வு நடத்துவதற்கு முன்னரான ஏற்பாடுகளைப் பற்றி கேள்வி எழுப்பினார். தேசிய தேர்வு முகமை நீட் நுழைவுத் தேர்வை கணினி மூலம் நடத்துவதற்கு முன்பு மாணவர்களுக்கு சிறப்பு கணினி பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ராஜேந்திரனின் கேள்விக்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வாரத்திற்கு 2 நாள் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான கணினி பயிற்சி ஐந்து மாதங்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

கிராமப்புற மாணவர்கள் மிகவும் சிறந்தவர்கள் அவர்களுக்கு இந்த பயிற்சி போதுமானதாக இருக்கும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து கரூர் எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசுகையில், தேசிய நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களை தேர்வு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை படிப்படியாக பறித்து வருகிறது என்று குற்றம் சாட்டிப் பேசினார். தொடர்ந்து பேசிய தம்பிதுரை மாணவர்கள் நுழைவு தேர்வில் மட்டும் கவனம் செலுத்துவதால் கல்வித்தரம் குறையும். மத்திய அரசு நடத்தும் 2 மணி நேர நுழைவுத் தேர்வுக்காக ஆண்டு முழுவதும் மாணவர்கள் நேரத்த செலவிடுதால் நிச்சயமாக கல்வித்தரம் குறையும் அதனால், பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மேற்படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், தம்பிதுரை நீட் தேர்வு விவகாரத்தில், கிராமப்புற மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. நாங்கள் தான் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறோம். மாநில அரசின் கல்வித் திட்டங்களில் மத்திய அரசு தலையிடக் கூடாது. மத்திய அரசின் இந்த செயல்பாட்டை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது என்று கூறினார். தம்பிதுரையின் குற்றச்சாட்டு பதிலளித்துப் பேசிய பிரகாஷ் ஜவடேகர், நீட் தேர்வு தமிழ் வினாத்தாள் மொழிபெயர்பில், தமிழக அரசு நியமித்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டே நீட் வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. இந்த தவறு மீண்டும் நடைபெறாது என்று இரு தரப்பிலிருந்தும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மாநில அரசின் பாடத் திட்டத்தின்கீழ் 2 கோடி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இதிலிருந்து 24 லட்சம் மட்டுமே தேசியத் தகுதித் தேர்வை எழுதுகின்றனர். இதர மாணவர்களுக்கான தேர்வை மாநில அரசுதான் நடத்துகிறது. அதனால், நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. அதனால், இதில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்

8-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை கைவிடும் சட்டத் திருத்தத்தை அரசு ஆதரிக்கக் கூடாது'

பள்ளிகளில் 5, 8 -ஆம் வகுப்புகளில் மாணவர்களைத் தக்க வைக்கும் (பெயிலாக்கும்') சட்டத் திருத்தத்தை தமிழக அரசு ஆதரிக்கக் கூடாது என தமிழ்நாடு, புதுச்சேரி பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும், முன்னாள் துணைவேந்தருமான வே.வசந்திதேவி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஐந்து, எட்டாம் வகுப்புகளின் இறுதியில் தேர்வுகள் நடத்தி மாணவரது கற்றல் திறன்களை காண வழிசெய்யும் கல்வி உரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் அது நிறைவேறிய பின்னர் சட்டமாகும். இதில் மாணவர் தேர்ச்சி பெறத் தவறினால் இரண்டு மாதத் தனிப் பயிற்சி கொடுத்து மீண்டும் தேர்வு நடத்தலாம் என்றும் இந்த மசோதா கூறுகிறது.
இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டால் ஏழ்மை, அன்றாட வாழ்க்கைப் போராட்டம், பெற்றோரின் கல்வியறிவற்ற நிலை போன்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகள்தான் கற்றல் திறனற்றவர்கள் என வெளியேற்றப்படுவர். இந்தக் குழந்தைகள் கட்டாயக் கல்வி பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் சட்டமே கொண்டுவரப்பட்டது.
பல ஆண்டு போராட்டங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே இந்தத் திருத்தம் தோற்கடிக்கிறது.
எனவே, கல்வி உரிமைச் சட்டத் திருத்தத்தை தமிழக அரசு ஏற்கக்கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளும், தலித், பழங்குடியினர், விளிம்பு நிலை மக்களுக்காகச் செயல்படும் அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என அதில் வசந்திதேவி கூறியுள்ளார்

மருத்துவப் படிப்பு இடங்களை ஒப்படைத்து விட்டு, பொறியியல் படிப்பைத் தேர்வு செய்துள்ள மாணவர்கள்

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு கடந்த புதன்கிழமை தொடங்கியது. 5 சுற்றுகளாக இந்தக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
பி.இ. முதல் சுற்று மாணவர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் சுற்று மாணவர்களுக்கான இடங்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. இரண்டாம் சுற்றில் 20,000 மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதன்கிழமை (ஆக.1) மாலை 5 மணி வரை தங்கள் விருப்ப இடங்களை ஆன்-லைனில் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர்.
முதல் சுற்றில் 6,768 பேர் சேர்க்கை: கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்த 7,303 பேரில் 7,136 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. இவர்களில் 6,768 பேருக்கு இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கல்லூரி சேர்க்கைக் கடிதத்தை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும்.
மருத்துவப் படிப்பை கைவிட்ட 3 பேர்: மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று எம்.பி.பி.எஸ். படிப்பைத் தேர்வு செய்த மாணவர்கள், அதைக் கைவிட்டு பொறியியல் படிப்பில் சேர விரும்பினால், ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்து தங்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்த பிறகு ஒரு நாள் உள்ள கால அவகாசத்துக்குள் ஏதாவது ஒரு உதவி மையத்தில் தங்களுடைய எம்.பி.பி.எஸ். ஒதுக்கீடு உத்தரவை ஒப்படைத்துவிடவேண்டும். அவ்வாறு ஒப்படைக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும்.
அந்த வகையில், முதல் சுற்று பி.இ. கலந்தாய்வு முடிவில் 3 மாணவர்கள் தங்களுடைய எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு, பி.இ. இடங்களைத் தேர்வு செய்து இறுதி ஒதுக்கீட்டையும் பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைச் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்

ஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவதற்கு ஒருநபர் குழுவை அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக எம்.ஏ. சித்திக் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளையும், ஊழியர்களையும் நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு அரசுக்கு அறிக்கை வழங்க உள்ளது.
இந்தக் குழுவின் சார்பில் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி விலிங்டன் கல்லுôரி வளாகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்பட கருத்துத் தெரிவிக்க விண்ணப்பித்த பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு கூட்டமைப்பின் சார்பில் இருவர் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்டக் கலந்தாய்வு இன்று தொடக்கம்: வகுப்புகள் தொடக்கம் தாமதமாகும்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளுக்கு 2018-19-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன.
முதல் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 9-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள 3,422 இடங்களுக்காக 5,337 பேர் பங்கேற்றுத் தங்களுக்கான முதல் 3 விருப்பப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்த நிலையில், முதல் 2,593 இடங்களில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
இதையடுத்து நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் 1,334 பேர் மட்டுமே பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்தனர். இதனால் கலந்தாய்வில் பங்கேற்காதவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களை அந்த இடங்களுக்குத் தகுதியானவர்களாகத் தேர்வு செய்யும் பணி (ஸ்லைடிங்) 2 நாள்கள் நடைபெற்றது.
இதில், 1,330 இடங்கள் நிரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காலியாக உள்ள 758 இடங்களுக்காக இரண்டாம் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 31, ஆகஸ்ட் 1ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் இடங்களைத் தேர்வு செய்பவர்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறுகிறது.
இதிலும் இடங்கள் காலியாக இருந்தால் ஆகஸ்ட் 6ஆம் தேதி மீண்டும் ஸ்லைடிங் நடத்தப்பட்டு அவர்களுக்கு ஆகஸ்ட் 8, 9ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு நடைமுறைகள் தாமதமாவதால் வகுப்புகள் தொடங்குவது ஆகஸ்ட் 2ஆவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஆகஸ்ட் 1ஆம் தேதியே முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என துணைவேந்தர் கு.ராமசாமி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இணையதளம் மற்றும் வைபை வசதியுடன் தமிழக அரசு பள்ளிகளில் கணினி வழி கற்றல் திட்டம்: ஆய்வகங்கள் தொடங்க 420 கோடி ஒதுக்கீடு


தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் இணையதளம் மற்றும் வைபை வசதியுடன் கணினி வழி கற்றல் திட்டத்துக்காக கணினி ஆய்வகங்கள் ₹420 கோடி செலவில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை  மேற்கொண்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கல்வியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. சிபிஎஸ்இக்கு இணையான பாடத்திட்டம், அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி, ஸ்மார்ட்  வகுப்பறைகள், பாடப்புத்தகங்களில் கியூஆர் கோடு மற்றும் பார்கோடு இணைத்து பாடங்கள் வடிவமைப்பு என்று அடுத்தடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர 3 ஆயிரம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் முதல்கட்டமாக ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படுகிறது. இதற்காக 30 ஆயிரம் கையடக்க கணினி எனப்படும் டேப்லெட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் ஒரு  வார காலத்தில் விடப்படும் என்று பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசின் ஐசிடி கணினி வழி கற்றல் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்்கனவே 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என்று அரசு  அறிவித்தது. ஆனால், இதற்காக டெண்டர் விடுவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்று ஐசிடி திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு  வரப்படுகிறது.இதற்காக மாநிலம் முழுவதும் 3,100 அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும், 2,940 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் தொடங்கப்படுகின்றன. இதற்காக ₹420 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டரும்  விடப்பட்டுள்ளது. இவ்வாறு தொடங்கப்படும் கணினி ஆய்வகங்களில் தலா 10 கணினிகள் என மொத்தம் 60 ஆயிரத்து 300 கணினிகள் இணையதள வசதி மற்றும் வைபை வசதியுடன் அமைக்கப்படுகின்றன. இந்த தகவலை  ஆசிரியர் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 31-07-2018

Monday, July 30, 2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

 உரை:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

பழமொழி :

A teacher is better than two books

ஒரு ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்

பொன்மொழி:

ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.

- சாமுவேல் பட்லர்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?
பைன்

2.உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?
மார்ச் 22

நீதிக்கதை :

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு



கோவில் கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன.

கோபுரத்தில் கும்பாபிஷேக வேலை கள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன.

செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன.

தானியத்தை உலர்த் தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சி யடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் தயார் செய்து வலை விரித்தான்.

அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலை களில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள் எல்லாம் ஒன் றாக இறக்கையை விரித்து பறக்க, வலையோடு புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.

உடனே வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின.

உடனே நீல நிறப் புறாக்களும் தன் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக் கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம் குறைய ஆரம் பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக “ஒற்றுமை நீங்கினால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

நீதி: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

இன்றைய செய்தி துளிகள் :

1.கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

2.பள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல்!

3.கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.

4.செவ்வாய்க் கிரகத்தில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய ஏரி!

5.1000-மாவது டெஸ்டில் களமிறங்க உள்ள இங்கிலாந்து..... வாழ்த்து தெரிவித்த ஐசிசி

Flash News : TNPSC Group 4 - 2018 Exam

கடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .

Click Here - TNPSC Group - IV Result - Server-1

Click Here- TNPSC Group - IV Result - Server-2

பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடம் ஏதுமில்லை - RTI Letter


ஆசிரியர்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்ய Helpline Number மற்றும் Email முகவரி


" TAB Training " Modules For Teachers

Vidyarthi Vigyan Manthan - மாணவர்கள் அறிவியல் திறனறி தேர்வுக்கு செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான பிரசார் நிறுவனம், என்சிஇஆர்டியின் விபா நிறுவனம் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வு தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு நவம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் இணைய வழியில் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் தேர்வு எழுதலாம். ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம். தேர்வுக்கட்டணம் ரூ100 செலுத்த வேண்டும்.
செப்டம்பர் 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த தேர்வு எழுதலாம். 6 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடக்கும். மேற்கண்ட தேர்வு எழுத  விரும்புவோர் www.vvm.org.in என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

புதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயம்

கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயமாகிறது.
இதனால் புதிய வாகனங்களை வாங்கும்போது ஒரு ஆண்டுக்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும். கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் காப்பீடு வழங்கப்படும்.

கடந்த ஆண்டில் மூன்றாம் நபர் காப்பீட்டை ஆன்லைன் மூலம் வழங்கலாம் என்றும் காப்பீட்டு காலத்தை 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை நீட்டிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதன் அடிப்படையில் விதிமுறைகளை வகுத்துவரும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், ஒரு மாதத்திற்குள் இறுதி முடிவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது புதிய வாகனங்களை வாங்கும்போது ஓராண்டுக்கான காப்பீடு செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. அதன் பிறகு வாகன உரிமையாளர் ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் தற்போது கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் காப்பீடு வழங்கப்படும். காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் அல்லது அந்த வாகனங்களால் ஏற்படும் இழப்புக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும் நடைமுறை தற்போது உள்ளது.

நூலகத்துக்காக 1 கோடி மதிப்பிலான வீட்டை தானமாக கொடுத்த ஆசிரியர் !


குடியாத்தம் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மகளிர் நூலகத்துக்கு தானமாக வழங்கிய வீட்டை வணிக வரித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சானூர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் புலவர் நடராஜன். இவர் வாழ்ந்த ஒரு கோடி மதிப்பிலான வீட்டை குடியாத்தம் பகுதியில் மகளிருக்கான நூலகம் அமைக்க தானமாக வழங்கியுள்ளார். இந்த நூலக கட்டிடத்தை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் தான் வாழ்ந்த வீட்டை மகளிர் நூலகத்திர்க்கு தானமாக வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர் புலவர் நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.சி.வீரமணி, நூலகத்திர்க்காக தனது வீட்டை தானமாக வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர் புலவர் நடராஜனுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். மேலும் விரைவில் குடியாத்தத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்

ENGLISH SPELL THE WORD- Work Book

நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம் வலியுறுத்தல்.

 சேலம், ஜூலை 30: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகத்தின்தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகத்தின் மாநில பொது குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. மாநில தலைவர் ஜோஸ் டைட்டஸ் தலைமை வகித்தார். கழக நிறுவனர் திருமாவளவன் பேசினார். கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் இருந்து வரும் பங்களிப்பு புதிய ஓய்வூதிய முறையை கைவிட்டு, பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். 38 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் கழகத்தின் செயல்முறைக்கு அரசு ஏற்பு அளிக்க வேண்டும்.







2013ம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் பெற்ற அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை,  பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.


மருத்துவக்கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு, ஆண்டுக்கு இருமுறை என்பதை கைவிட்டு ஒரே முறை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நிர்வாகிகள் மனோகரன், மரியதாசன், நற்குணம், செல்வராசு, சுப்பிரமணியன், ராஜசேகரன், சின்னப்பா, குமார், குணசேகரன், எழில்வாணன், அனுசுயா, பிரைட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-16 "வேடனும் பறவையும்" (30.07.2018)



வீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்புதல்

தமிழகத்தில், ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, 100 கோடி ரூபாய் அளவுக்கு,வீட்டுக்கடன் வழங்க, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில், ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, நியாயமான விலையில், வீடுகள் மற்றும் மனைகள் கிடைப்பதற்காக, 733 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் துவக்கப்பட்டன. இதில், 688 சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்துடன் இணைந்துள்ளன. இவற்றில், 28 சங்கங்கள் வாயிலாக, 2017- 18ல், 537 உறுப்பினர்களுக்கு, 30 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், தவணை தொகை வசூலிப்பது, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் வாயிலாக, ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, 100 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சங்கங்களின் செயல்பாடுகள் அடிப்படையில், அவற்றின் உறுப்பினர்கள் பலன் பெறுவர்.

பள்ளிகளில் மதிய உணவுடன் வாரம் இரண்டு நாள் பால்


'மாணவர்களுக்கு கையடக்க கணினி எனும், 'டேப்' வாங்க, ஒரு வாரத்தில் டெண்டர் முடிவு செய்யப்படும்,'' - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

'மாணவர்களுக்கு கையடக்க கணினி எனும், 'டேப்' வாங்க, ஒரு வாரத்தில் டெண்டர் முடிவு செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில், நேற்று அவர் அளித்த பேட்டி: நொய்யல் ஆற்றைபாதுகாக்க, 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதி மூலம், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தொழிற்சாலை கழிவுகள், அங்கு சேராமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து, அங்குள்ள கழிவுகளை அகற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இதற்கான பணிகள், விரைவில் துவங்கும்.தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளை தரம் உயர்த்த, பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தற்போது, அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி படிக்க, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, ஆங்கில வழி வகுப்புகளை, இரண்டு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், இரண்டு வகுப்புகள் கூடுதலாக நடத்தப்படும்.மாநில அளவில், 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' நடத்தப்படும். ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கு புதிய பாடத் திட்டம் வந்துள்ளதால், அம்மாணவர்கள், 'க்யூ ஆர் கோடு' மற்றும் இணையதளம் வழியேகல்வி பயில, கையடக்க கணினி எனும், 'டேப்' வழங்கப்படுகிறது.இதற்காக, அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, இந்த வாரம் டெண்டர் முடிவு செய்யப்படும். விரைவாக, 'டேப்' வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு

கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு

புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

இந்நிலையில், 748 அரசு பள்ளிகளில், தலா ஒரு கணினி அறிவியல் ஆசிரியரை நியமிக்க, ஓராண்டுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது. ஆனால், புதிய பாடத்திட்டப்படி, கலை பாடப்பிரிவுக்கு, 'கம்ப்யூட்டர்அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடமும், தொழிற்கல்விக்கு, கணினி தொழில்நுட்பம் என்ற பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்த பாடங்கள் முக்கியமானதாக உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும், கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான, கல்வித் தகுதி மாற்றி அமைக்கப்பட உள்ளது.

 இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, புதிய கல்வித் தகுதிக்கான கோப்பை தயாரித்து, அரசின் அனுமதிக்காக அனுப்பியுள்ளனர்.தற்போதைய நிலையில், கணினி அறிவியல் பாடம் நடத்த, இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், கணினி பயிற்றுனர்கள் என்ற பதவியில் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, பாடம் எடுக்க வேண்டியுள்ளது.

பள்ளிக்கல்வி விதிகளின்படி, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். எனவே, இந்த விதிகளின்படி, கணினி அறிவியல் பாட ஆசிரியர் பதவிக்கு, முதுநிலை படிப்புடன், பி.எட்., முடித்தவர்களை நியமனம் செய்ய, விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது? : 20 லட்சம் பேர் காத்திருப்பு!!!


அரசு துறையில் பல்வேறு பணிகளுக்காக, 20 லட்சம் பேர் எழுதிய, 'குரூப் - 4' தேர்வு முடிவுகள், ஐந்து மாதங்களாக வெளியாகாததால்
, தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழக அரசு துறைகளில், காலி பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த வரிசையில், குரூப் - 4 பதவியில் அடங்கிய, 9,351 காலி பணியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, பிப்., 11ல் போட்டி தேர்வு நடத்தப்பட்டது.இதில், முதல்முறையாக, கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவியில், 494 இடங்களையும் சேர்த்து, 4,096 இளநிலை உதவியாளர், 3,463 தட்டச்சர், 815 சுருக்கெழுத்தர், 156 வரைவாளர் உட்பட, மொத்தம் எட்டு வகை பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வுக்கு, 20.83 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; அவர்களில், 20.69 லட்சம் பேருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. தேர்வு முடிந்து, ஐந்து மாதங்களைத் தாண்டியும், இன்னும் முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இது குறித்து, தேர்வர்கள் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் - 4 தேர்வில், வி.ஏ.ஓ., பதவியும் சேர்க்கப்பட்டு, வழக்கத்தை விட தாமதமாகவே இந்த ஆண்டு, குரூப் - 4 தேர்வு நடத்தப்பட்டது. அதிலும், விடை திருத்தம் முடிந்து, விரைவில் தேர்வு முடிவுகள் வரும் என, எதிர்பார்த்தோம். ஐந்து மாதங்களாக காத்திருந்தும், தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், அடுத்த தேர்வுக்கு தயாராவதிலும், தேர்வர் களுக்கு சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. எனவே, தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

TNEB -TANGEDCO தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தில் 1275 காலியிடங்கள் நிரப்பஉள்ளது!!!


TNEB -TANGEDCO தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தில் 1275 காலியிடங்கள் நிரப்பஉள்ளது.

விண்ணப்பிக்க: https://goo.gl/fMXqt

https://goo.gl/fMXqtF

தமிழக அரசு சார்பில், அரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, ‘ஹை – டெக்’ கணினி ஆய்வகங்கள்-புது திட்டம்


6,029, ‘ஹை – டெக்’ ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன் பள்ளிகளுக்கு புது திட்டம்
தமிழக அரசு சார்பில், அரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, ‘ஹை – டெக்’ கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.தமிழக பள்ளிக் கல்வித்துறையில், கல்வித் தரத்தை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பாடத்திட்டம் மாற்றப்பட்டு, பாடப் புத்தகங்களில், க்யூ.ஆர்., கோடு மற்றும், ‘பார் கோடு’ இணைத்து, பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பார் கோடுகளை பயன்படுத்தி, வீடியோவாகவும் பாடத்தின் முக்கிய அம்சங்களை பார்க்க முடியும்.
அதுபோல, தமிழகம் முழுவதும், 3,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. இதற்காக, மாணவர்களுக்கு, 30 ஆயிரம், ‘டேப்லெட்’ என்ற, கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசின், ஐ.சி.டி., என்ற, கணினி வழி கற்றல் திட்டத்தை, தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது.மத்திய அரசு நிதி உதவியுடன், இந்த திட்டம், ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.



ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், ‘டெண்டர்’ விடுவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால், திட்டத்தை செயல்படுத்த முடியாமல், கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசின் விதிகளை ஏற்று, ஐ.சி.டி., திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 2,939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஹை – டெக் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த பணிகள் அனைத்தும், தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்காக, 420 கோடி ரூபாயில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில், சர்வதேச அளவில், பிரபலமான நிறுவனங்கள் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆய்வகங்களில், தலா, 10 கணினிகள் வீதம், மொத்தம், 60 ஆயிரத்து, 290 கணினிகள், இணையதளம், ‘வை – பை’ வசதியுடன் இடம் பெறும்

வரலாற்றில் இன்று 30.07.2018


❇🅾கிரிகோரியன் ஆண்டின் 211 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 212 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 154 நாட்கள் உள்ளன.*

*🌍நிகழ்வுகள்🌍*

🔹1502 – கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடற்பயணத்தின் போது கொந்துராசை அடைந்தார்.

🔹1629 – இத்தாலியில் நேப்பிள்சில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.

🔹1733 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது விடுதலைக் கட்டுநர் லாட்ஜ் ஆரம்பிக்கப்பட்டது.

🔹1756 – ரஷ்யாவின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க கட்டிடக் கலைஞர் பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி கத்தரீன் அரண்மனையைக் கட்டி முடித்தார்.

🔹1825 – பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

🔹1930 – உருகுவே முதலாவது உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவை 4-2 கணக்கில் தோற்கடித்து உலகக்கிண்ணத்தை வென்றது.

🔹1932 – கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

🔹1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் I-58 அமெரிக்காவின் கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

🔹1954 – எல்விஸ் பிறீஸ்லி முதற்தடவையாக பொது மேடையில் பாட ஆரம்பித்தார்.

🔹1966 – உதைபந்தாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கு ஜெர்மனியை 4-2 என்ற கணக்கில் வென்றது.

🔹1971 – அப்பல்லோ 15இல் சென்ற டேவிட் ஸ்கொட் மற்றும் ஜேம்ஸ் ஏர்வின் இருவரும் லூனார் ரோவர் வாகனத்துடன் சந்திரனில் இறங்கினர்.

🔹1971 – ஜப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதிக் கொண்டதில் 162 பேர் கொல்லப்பட்டனர்.

🔹1980 – பிரான்ஸ், மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.

🔹1997 – அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் “திரெட்போ” என்ற இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

*🌍பிறப்புகள்🌍*

🔹1818 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1848)

🔹1863 – ஹென்றி ஃபோர்ட், அமெரிக்க பொறியியலாளர், தொழிலதிபர், போர்ட் தானுந்து நிறுவனம் நிறுவனர் (இ. 1947)

🔹1886 – முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி (இ. 1968)



🔹1909 – கோ. வேங்கடாசலபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1969)

🔹1917 – கே. குணரத்தினம், இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1989)

🔹1918 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேயக் கவிஞர், புதின எழுத்தாளர் (இ. 1848)

🔹1924 – மா. நன்னன், தமிழறிஞர், எழுத்தாளர்

🔹1927 – மாதவசிங் சோலான்கி, குசராத்தின் 7வது முதலமைச்சர்

🔹1945 – பத்திரிக்கு மொதியானோ, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர்

🔹1947 – பிரான்சுவாசு பாரி-சினோசி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர்

🔹1947 – ஆர்னோல்டு சுவார்செனேகர், ஆத்திரிய-அமெரிக்க நடிகர், அரசியல்வாதி, கலிபோர்னியாவின் 38வது ஆளுநர்

🔹1958 – பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழக எழுத்தாளர், பதிப்பாளர்

🔹1962 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (இ. 2015)

🔹1963 – லிசா குட்ரோ, அமெரிக்க நடிகை

🔹1969 – சைமன் பேக்கர், ஆத்திரேலிய நடிகர்

🔹1970 – கிறிஸ்டோபர் நோலன், ஆங்கிலேய-அமெரிக்க இயக்குநர்

🔹1971 – பேரறிவாளன், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்

🔹1973 – சோனு நிகம், இந்தியப் பின்னணிப் பாடகர், நடிகர்

🔹1982 – ஜேம்ஸ் அண்டர்சன், ஆங்கிலேயத் துடுப்பாளர்

*🌍இறப்புகள்🌍*

🔹1898 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க், செருமனியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1815)

🔹1914 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1862)

🔹1942 – லியோபோல்டு மேன்டிக், கப்புச்சின் சபையை சேர்ந்த கத்தோலிக்க அருட்பணியாளர், புனிதர் (பி. 1866)

🔹1961 – குஞ்சிதம் குருசாமி, திராவிட இயக்க செயற்பாட்டாளர் (பி. 1909)

🔹1969 – இ. சி. இரகுநாதையர், இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் கணித்து வெளியிட்டவர்

🔹2003 – கே. பி. சிவானந்தம், வீணையிசைக் கலைஞர் (பி. 1917)

🔹2004 – இரேந்திரநாத் முகர்சி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1907)

🔹2007 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடிய இயக்குநர் (பி. 1918)

🔹2015 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (பி. 1962)

*🌍சிறப்பு நிகழ்வு🌍*

🔹1825 – பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது

English_Contractions

*aren’t = are not*
*can’t = cannot*
*could’ve = could have*
*couldn’t = could not*

*didn’t = did not*
*doesn’t = does not*
*don’t = do not*
*gonna = going to*
*gotta = got to, got a*
*hadn’t = had not*
*hasn't = has not*
*haven't = have not*
*he’d = he had, he would*
*he’ll = he shall, he will*
*he’s = he has, he is*
*how’d = how did,* *how would*
*how’ll = how will*
*how’s = how has* *how is*
*I’d = I had, I would*
*I’ll = I shall / I will*
*I’m = I am*
**I’ve = I have*
*isn’t = is not*
*it’d = it would*
*it’ll = it shall, it will*
*it’s = it has, it is*
*mightn’t = might not*
*might’ve = might have*
*mustn’t = must not*
*must’ve = must have*
*needn't = need not*
*she’d = she had / she would*
*she’ll = she shall, she will*
*she’s = she has, she is*
*should’ve = should have*
*shouldn’t = should not*
*somebody’s =* *somebody is*
*someone’d =* *someone had,* *someone would*
*someone’ll =* *someone shall,* *someone will*
*someone’s =* *someone has,* *someone is*
*something’d =* *something had*
*something’ll =* *something shall,* *something will*!
*something’s =* *something has,* *something is*
*that’ll = that will*
*that’s = that has,* that is
that’d = that would, that had
there’d = there had, there would
there’d’ve = there would have
there’re = there are
there’s = there has / there is
they’d = they would
they’d’ve = they would have
they’ll = they shall, they will
they’re = they are
they’ve = they have
wasn’t = was not
we’d = we had
we’ll = we will
we’re = we are
we’ve = we have
weren’t = were not
what’ll = what will
what’re = what are
what’s = what has / what is
what’ve = what have
when’s = when is
where’d = where did
where’s = where has, where is
where’ve = where have
who’d = who would
who’d’ve = who would have
who’ll = who shall, who will
who’re = who are
who’s = who has, who is
who’ve = who have
why'd = why did
why’re = why are
why’s = why has, why is
won’t = will not
won't I've = will not have
would’ve = would have
wouldn’t = would not
wouldn’t’ve = would not have
you’d’ve = you would have
you’ll = you shall, you will*

ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு!- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Sunday, July 29, 2018


தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு
 பயோமெட்ரிக் வருகை பதிவு இன்னும் ஒரு வாரக் காலத்தில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

ஈரோட்டில் இன்று (ஜூலை 29) நடைபெற்ற கொங்கு வேளாளர் இளைஞர் சங்கத்தின் வாசக சாலை திறப்பு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக ஒரு ஆங்கில வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும். மாநிலத்தில் 32 மாவட்டங்களிலும் உள்ள நூலகங்களிலும் ஐ.ஏ.எஸ். அகாடமிகள் தொடங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக இந்த ஆண்டு 25 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டயக் கணக்கு சிறப்பு பயிற்சி அளிக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 9, 10, 12ஆம் வகுப்புகள் அனைத்தும் கணினி மையமாக்கப்பட உள்ளது" என்று தெரிவித்தார்

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-30-07-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

உரை:
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

பழமொழி :

A stitch in time saves nine

வருமுன் காத்தல் சாலவும் நன்று

பொன்மொழி:

இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.

- பிரேண்டர்ஜான்சன்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஆசிரியராக இருந்து பின்னர் குடியரசு தலைவராக பொறுப்பு வகித்தவர்
விடை: டாகடர் ராதாகிருஷணன்

2 மக்களவையின் பெரும்பாண்மை கட்சியின் தலைவர்
விடை: பிரதமர்

நீதிக்கதை :

நரியும் கொக்கும் | The Fox And The Stork - Short Story

அது ஒரு அடர்ந்த காடு. அங்கு பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்த காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி அவர்கள் ஏமாறுவதைக் கண்டு மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

அதே காட்டில் அறிவு மிக்க கொக்கு ஒன்றும் இருந்ததது. அந்த கொக்கு அணைத்து மிருகங்களிடமும் நன் மதிப்பை பெற்று இருந்தது. இதை பொறுக்க முடியாத நயவஞ்சக நரி அந்த கொக்கை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது.

ஒரு நாள் கொக்கு நரியின் குகை இருக்கும் வழியில் வந்துகொண்டிருந்தது

நரி அந்த கொக்கைப் பார்த்து "நண்பனே! உன்னுடைய அறிவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் நாளை உனக்கு ஒரு விருந்து வைக்க விரும்புகிறேன். உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது.

கொக்கும் சரி வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது.

அடுத்த நாள், நரி சுவைமிக்க சூப் ஒன்றை செய்தது.

அன்று மாலை கொக்கு நரியின் இடத்திற்கு சென்றது.

நரியோ திட்டமிட்டபடி, சூப்பை அகன்ற இரு தட்டில் ஊற்றியது. ஒன்றை கொக்கிடம் கொடுத்தது.

கொக்கினால் வாய் அகன்ற தட்டில் உள்ள சூப்பை குடிக்க முடியவில்லை.

நரியோ நக்கி நக்கி அந்த சூப்பை குடித்துவிட்டு, "நண்பனே இந்த சூப்பை உனக்காக செய்தேன் எப்படி இருந்தது?" என்று சிரித்துகொண்டே கேட்டது.

கொக்கு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரியிடம், "நண்பனே சூப் மிகவும் ருசியாக இருந்தது" என்று கூறியது .

கொக்கு நரியிடம், "இரவு நேரம் ஆக போகிறது நான் செல்ல வேண்டும்" என்று கூறியது.

செல்லும்முன் "இன்று நீ எனக்கு விருந்து வைத்தாய்! பதிலுக்கு நான் நாளை உனக்கு விருந்து வைக்கலாம் என்று நினைக்கிறன். உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது.

நரியும் வர சம்மதம் தெரிவித்தது.

நரியோ கொக்கை ஏமாற்றி விட்டேன் என்ற கர்வத்துடன் சந்தோசமாக உறங்க சென்றது. கொக்கு பசியுடனும், வருத்ததுடனும் பறந்து சென்றது.

அடுத்தநாள் கொக்கு நரிக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தது.

பல இறைச்சிகளை போட்டு சுவை மிக்க சூப் ஒன்றை செய்தது. அதன் வாசனை அந்த காடு முழுவதும் பரவியது.

அன்று மாலை நரி கொக்கின் வீட்டுக்கு சென்றது. கொக்கு நரி வந்தவுடன், அந்த சுவை மிக்க சூப்பை சிறிய துளை கொண்ட இரண்டு குவளையில் ஊற்றியது. அந்த சூப்பின் வாசனயை முகர்ந்தவுடன் நரிக்கு வாயில் எச்சில் ஊறியது. இன்றைக்கு நல்ல வேட்டை என்று நரி நினைத்தது.

கொக்கு குவளையை நரியிடம் கொடுத்தது. கொக்கு தன் வாயை குவளையில் நுழைத்து சூப்பை ருசித்தது. நரியினால், துளை சிறியதாய் இருப்பதனால் குடிக்க முடியவில்லை.

குவளையின் ஓரங்களில் சிதறி இருந்த சிறு துளிகளை மட்டுமே நக்கி சாப்பிட முடிந்தது.

கொக்கு நரியைப் பார்த்து "சூப் எப்படி இருந்தது என்று கேட்டது?" நரியும், "மிகவும் அருமை இதுபோன்ற ஒரு சூப்பை நான் குடித்ததே இல்லை" என்று பொய் சொல்லியது.

அப்போது தான் நரி ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது.

நரி, கொக்கிடம் விருந்துக்கு நன்றி என்று கூறிவிட்டு வருத்ததுடன் சென்றது.

அப்போது தான் நரி "நாம் மற்றவர்களை ஏமாற்றும் போது அவர்கள் எவ்வாறு வருத்தப்பட்டு இருப்பார்கள்" என்று உணர்ந்தது.

அன்று முதல் திருந்திய நரி, பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

இன்றைய செய்தி துளிகள் :

1.மத்திய அரசு ஊழியர்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் வெளிநாடுகளுக்கு பயணிக்க புதிய திட்டம்: விரைவில் அறிமுகம்

2.டெல்லியில் ஏவுகணை தாக்குதல் தடுப்பு அமைப்பு: அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டம்

3.இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

4.தனிப்பட்ட முறையில் பள்ளிகளை நடத்த முடியவில்லை என்றால், அவற்றை மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை' என சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தல்.

5.குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய இளையோர் தடகள போட்டியில், தமிழக வீரர் கோகுல் தங்கப்பதக்கம் வென்று சாதனை

வேத கணிதத்தால் சீனாவை கவர்ந்த தமிழக ஆசிரியர்


அரசு ஊழியர் தனது பிறந்த தேதியை மாற்றம் செய்ய முடியுமா - தலைமைச் செயலாளர் அறிவுரை


5th Standard - Term 1 - Lesson Plan - July 5th week

TRB - Special Teachers Exam 2018 - Expected Cutoff Marks!

சிறப்பாசிரியர் தேர்வு 2018 - எதிர்பார்க்கப்படும் கட்-ஆப் மதிப்பெண்

SSA - Periodical Assessment Tool - மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் - All subjects (1 - 8 Std) Maths

SSA - Periodical Assessment Tool - மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் - All subjects (1 - 8 Std) Maths

CLICK HERE -MATHS - 2017 - PERIODICAL ASSESSMENT TOOLS


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One