எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று வாரம் (02.07.2018 முதல் 20.07.2018வரை) அடிப்படை பயிற்சி வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!

Saturday, June 30, 201810- வது தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு

 கர்நாடகத்தில் முதல்- மந்திரி குமாரசாமி தலைமையில் ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவி ஏற்றபின்பு கல்வியின் தரத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

 கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் கல்வியின் தரம் மிகவும் பின் தங்கி விட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.


குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்து விட்டது.சில மாவட்டங்களில் சில பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.


ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறாத பள்ளிகளும் உள்ளது.


இதற்கு ஆசிரியர்களே காரணம் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் ஆசிரியர்கள் போதிய கவனம் செலுத்தாததால் தான் தேர்ச்சி விகிதம் குறைந்து விட்டதாக கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

எனவே கல்வித்தரத்தை மேம்படுத்த வேண் டுமானால் ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும்.


 தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு போன்ற தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.


 இதை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. விரைவில் அதிரடி முடிவு அறிவிக்க மாநில கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


கர்நாடகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற்று நடைபெறும் பள்ளிகள் 9,000 உள்ளது.


இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளமாக ரூ.3000 கோடி பணம் அரசு வழங்குகிறது இவ்வளவு செலவிட்டும் ஆசிரியர்கள் பணி சிறப்பாக இல்லை என்று அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டு வெளியான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 2,08,227 மாணவர்கள் எழுதியதில் 49,408 பேர் தோல்வி அடைந்தனர்.


 அதாவது 24 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை.


இதையடுத்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பற்றி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.


 அதன் அடிப்படையில் தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு செய்யவும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி உதவியை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது

ஆசிரியர்களுக்கு அரசால் எந்த ஆபத்தும் வராது - அமைச்சர் செங்கோட்டையன்


 தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற ரூ.512 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் செங்கோட்டையன்


11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 40% நீட் தேர்வுக்காக உருவாக்கப்பட்டது என்று  அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

மேலும் அவர் கூறும் போது, ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான அரசாக தமிழக அரசு இருக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற ரூ.512 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது


 
6, 7 மற்றும் 8 வகுப்பில் புதிய பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்து படிக்க ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் டேப் வழங்க மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.*

*நாமக்கல் மாவட்டட்த்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்த அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, எளையாம்பாளையத்தில் நடைபெற்றது.*

*இதில், அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.*

*இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கமணி, பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கும் தமிழக அரசு, ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்

இனி அட்மின் சொன்னால்தான் குரூப் மெம்பர்கள் மெசேஜ் அனுப்ப முடியும்! - வாட்ஸ்அப் அப்டேட்


தற்போது, வாட்ஸ்அப்பில் புதிதாக ஒரு வசதி பீட்டா வெர்ஷன் மூலம் பயனர்களால் சோதனைசெய்யப்பட்டுவருகிறது.


இதற்கு முன், வாட்ஸ்அப் குழுவில் எத்தனை நபர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுவில் குறுந்தகவல் அனுப்பலாம்.


ஆனால், இனி அந்தக் குழுவின் அட்மின் நினைத்தால் மட்டுமே அனைத்து நபர்களும் குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியும்.


வாட்ஸ்அப் ஃபீட்டா ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 2.18.201 மற்றும் ஐ.ஓ.எஸ் வெர்ஷன் 2.18.70 இவ்விரண்டு ஃபீட்டா வெர்ஷன்களிலும் இந்தப் புதிய வசதி சோதனையில் உள்ளது.


இதன்படி, வாட்ஸ்அப்பின் குரூப் செட்டிங்ஸில் ' sent messages' என்ற ஆப்ஷன் இருக்கும்.


அதைக் க்ளிக் செய்தால், ' All participants' அல்லது ' only admins' என இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும்.


only admin என குரூப் செட்டிங்கை மாற்றினால், குழுவில் உள்ள அட்மின்கள் மட்டுமே அந்தக் குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியும். All participants ல் குரூப் செட்டிங்கை மாற்றினால், அனைவரும் குழுவில் குறுந்தகவல் அனுப்பலாம்.


இந்த வசதி விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அப்டேட்டாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில், குறிப்பிட்ட நபர்களை மட்டும்   குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியாதபடி ப்ளாக் செய்யும் வசதியும் இனி எதிர்காலத்தில் வரலாம் எனவும் கூறப்படுகிறது

ஜூலை மாதம் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் "அறிவியல் கண்காட்சி" நடத்த வேண்டும் - CEO PROC


மாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்

மாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியுள்ளார். சென்னை வியாசார்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்,

 இயற்கையை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றம் : அமைச்சர் செங்கோட்டையன்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 40% நீட் தேர்வுக்காக உருவாக்கப்பட்டது என்று  அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது,

ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான அரசாக தமிழக அரசு இருக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற ரூ.512 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம் - கருத்தாளர்களுக்கான சிறப்பு ஆய்வு கூட்டம்:

ஜூலை மாத பள்ளி நாட்காட்டி


புதிய பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. வி.சி.இரமேஸ்வரமுருகன்


"கைநாட்டு" - அரசுப்பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை விளக்கும் குறும்படம்


ALM Reinforcement - படைப்பாற்றல் கல்வி -Module For Upper Primary Teachers

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் இதுவரை 7000 கும் மேல் கேள்வி கேட்டு மக்களுக்கு பயன் தரும் பதில் பெற்ற ஏங்கல்ஸ்- வினா தொடுப்பது பற்றி அறிய வேண்டுமா?


ஒரு முதன்மைக் கல்வி அலுவலரால் முதலாம் வகுப்புக் குழந்தைகள் நலனில் அக்கறை காட்ட முடியுமா?


ஒரு முதன்மைக் கல்வி அலுவலரால் முதலாம் வகுப்புக் குழந்தைகள் நலனில் அக்கறை காட்ட முடியுமா?
தினசரி வேலைப் பளுவில் தொடக்கக் கல்வித் துறையில் அடி நாதம் வரை ஊடுறுவி உள் இயங்க முடியுமா?
இலட்சக்கணக்கான ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகள் மீது உயர்தனிக் கவனம் செலுத்த முடியுமா?
எல்லாவற்றிற்கும் ஒற்றை விடை திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்கள்.

மாவட்டம் முழுதும் தமிழை வாசிக்க வைத்து சாதனை படைத்ததோடு நின்று விடாமல் தொடர்ந்து, அத்துணை குழந்தைகளும் ஆங்கில வாசிப்புத் திறனில் மேம்பட Teaching of English by Phonetic method என்ற ஆகப் பெரும் முயற்சியை கையெடுத்துள்ளார்.

அப்படி என்ன விளைவுகள் ஏற்பட்டு விடும்?
1.எல்லா இடைநிலை ஆசிரியர்களுக்கும் Phonetic training அளிக்கப்பட்டு வகுப்பில் தன்னம்பிக்கையாக செயல்பட வைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

2.திரு.ஐயப்பன், திரு.அமலன் ஜெரோம்,திரு.கண்ணன் அவர்களின் தலைமையில், இத்திட்டத்தை உருவாக்கிய இவர்களைக் கொண்டே மாவட்டம் முழுவதும் பயிற்சிகள் சீரிய முறையில்  இயக்கி விடப்பட்டுள்ளன.

3.இனி ஆசிரியர்கள் பாடம் நடத்தியே ஆக வேண்டும். ஏனெனில் 43 நாட்களுக்குள் குறைந்தது 5000 ஆங்கில வார்தைகளையாவது இம்முறை வழிகாட்டலில் வாசிக்க வைக்க வில்லையெனில் முழுப் பொறுப்பு அவர்களே ஏற்றாக வேண்டும்.

4.தற்போது வரை திருவண்ணாமலை மாவட்ட 3 ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது.தண்டராம்பட்டு ஒன்றிய ஆசிரியர்களுக்கு இப்போதும்,அடுத்து செங்கம் ஒன்றியம்,பிறகு இதர ஒன்றியங்களுக்கும் பயிற்சிகள் வீரியப்பட அத்தனை வேலைகளிலும் மாவட்ட அதிகாரிகள் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

5.surprise visitக்கான குழுக்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. எந்த நேரத்திலும் இவர்கள் மாவட்டம் முழுதும் சுழன்று கொண்டே இருப்பார்கள். கற்றுக் கொடுப்பவர்கள் பாராட்டப்படுவர்.அன்றன்றைய இலக்கை எட்டாதவர்கள் on the spot அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு வரப்படுவர்.

6. Phonetic DVD, Teacher's Module, students word cards book போன்ற supporting materials கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

திருவண்ணாமலை ஆசிரியர்கள் மிக ஆர்வமாக பயிற்சிகளை மேற்கொண்டு ஆங்கில வாசிப்பில் அக்கறை எடுத்து வருகிறார்கள்.இந்த முதல் பருவம் முடிவதற்குள் இந்த மாவட்டம் எல்லா மாவட்டங்களையும் விட ஆங்கில வாசிப்பில் முதன்மை பெற்று தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
மாவட்ட ஆட்சித்தலைவரின் நேரடிப் பார்வையில் இத்திட்டம் இருப்பது கூடுதல் பலம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் Phonetic என்னும் தீபம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் பற்ற வைக்கப் பட்டிருக்கிறது.இது இலட்சோப இலட்சம் அரசுப்பள்ளிக் குழந்தைகளின் நலனில் ஜோதியாய் பகிரப்பட்டு,
ஒளிர்விக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Emis Enrolment Status as on 29-06-2018 All Districts


5 ஆம் வகுப்பு ஜூலை முதல் வாரத்திற்கான SALM பாடக்குறிப்பு S Science

5 ஆம் வகுப்பு ஜூலை முதல் வாரத்திற்கான SALM பாடக்குறிப்பு Science

5 ஆம் வகுப்பு ஜூலை முதல் வாரத்திற்கான SALM பாடக்குறிப்பு Maths

5 ஆம் வகுப்பு ஜூலை முதல் வாரத்திற்கான SALM பாடக்குறிப்பு English

5 ஆம் வகுப்பு ஜூலை முதல் வாரத்திற்கான SALM பாடக்குறிப்பு தமிழ்

தலைமையாசிரியர் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள் - CEO அட்வைஸ்

கல்விக்கு இணையாக ஒழுக்கத்தை
முதலில் கற்றுத்தர வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தினார்.

 திருப்பூர் ஜெய்வாபாய் மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சித்ரா முன்னிலை வகித்தார்.
இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி பேசியதாவது:
மாணவர்களுக்கு, கல்விக்கு இணையாக ஒழுக்கத்தை முதலில் கற்றுத்தர வேண்டும். 'நீட்', ஜே.இ.இ., ஐ.ஐ.டி., தேர்வுகளுக்கு இப்போதிருந்தே மாணவர்களை தயார்படுத்துவது அவசியம்.ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம் ஐந்து மாணவர்களை தேர்வு செய்து, பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். பொதுத்தேர்வில், கூடுதல் தேர்ச்சி விகிதம் பெற, அனைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கெடு!


'பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத்திறனை,
ஆக., மாதத்துக்குள் மேம்படுத்த வேண்டும்,'' என மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 பள்ளி கல்வித்துறை, புதுப்பாடத்திட்டத்தை தொடர்ந்து, பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளது. அதில், நிர்வாக மாற்றமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனையடுத்து, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், அந்தந்த ஒன்றியங்களில் நடத்தப்படுகிறது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு வடுகபாளையம் பள்ளியிலும், வடக்கு ஒன்றியத்துக்கு ஆர்.பொன்னாபுரம் பள்ளியிலும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், வட்டார கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட கல்வி அலுவலர் நாசரூதீன் தலைமை வகித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார். பள்ளிகளில், மாணவர் திறன் மேம்பட ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மாவட்ட கல்வி அலுவலர் கூறியதாவது:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. பள்ளிகளில், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் மாணவர்களை சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும் கேட்டறிய கூட்டம் நடத்தப்படுகிறது.
பள்ளிகளில் ஆய்வு செய்த போது, 30 சதவீதம் மாணவர்கள் பாட புத்தகத்தை வேகமாக படிக்கும் திறன் கொண்டுள்ளனர். மற்ற, 70 சதவீத மாணவர்கள் பாட புத்தகத்தை வேகமாக படிக்க திணறுகின்றனர்.
தமிழ், ஆங்கில மொழி பாடங்களை திணறாமல் வேகமாக படிக்க ஆசிரியர்கள் தொடர் பயிற்சி கொடுக்க வேண்டும். வரும், ஆக., மாதத்துக்குள் மாணவர்கள் பாட புத்தகத்தை வேகமாக படிக்கும் திறனை மேம்படுத்திட வேண்டும்.
மாணவர்கள் மனதில் பாடங்கள் எளிதாக பதியும் வகையில் கற்பிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒரு சில மாணவர்களிடம் எழுத்து பயிற்சி இல்லை. பாடங்களை புரிந்து படிப்பதுடன் எழுத்து பயிற்சியும் மேற்கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் என அடிப்படை கணக்குகள் நன்றாக மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதற்கேற்ப பயிற்சி அளிக்க வேண்டும்.
மாணவர்கள் திறமையை மேம்படுத்தினால், அவர்கள் உயர்கல்விக்கு செல்லும் போது, பாடங்களை எளிதாக கற்க முடியும். இதற்கான ஆலோசனை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகை பதிவேட்டில் உள்ள மாணவர்களின் பெயர்களை இ.எம்.ஐ.எஸ்.,ல் பதிவிடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்

SSA & RMSA -க்கு நடப்பாண்டுக்கு வழிகாட்டுதல் வழங்கவில்லை -கல்வித்துறைச் சார்ந்த பணிகள் பாதிப்பு!

நடப்பு கல்வியாண்டு முதல், அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம் மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தையும் இணைத்து செயல்படுத்தும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

 கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் வழிகாட்டுதல் படி, எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில் புதிய மாற்றங்களுடன் கூடிய பயிற்சிகள் வழங்குவது, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வது போன்ற செயல்பாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.நடப்பு கல்வியாண்டு துவங்கி ஒரு மாதம் நிறைவடைந்தும், எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் உள்ளவர்களுக்கு நடப்பாண்டுக்கான பணிகள் என்னென்ன, பள்ளிகளில் ஆய்வுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.

 மத்திய அரசு, மூன்று இயக்ககங்களும் இணைக்கப்பட்டுள்ளதை மட்டுமே உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாததால், தற்போது, ஆசிரியர் பயிற்றுனர்கள் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வழக்கமாக, கல்வியாண்டின் துவக்கத்தில், பள்ளிகளில், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். இப்போது, எதன்படி ஆய்வு நடத்துவதென்பது தெளிவான வழிகாட்டுதல் இல்லை.இதனால், மாதம்தோறும் நடத்தப்படும் குறுவளமையப்பயிற்சிகளும் நடத்தப்படவில்லை. அறிவிப்புகளை அவசரமாக வெளியிட்டு அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தாமதப்படுத்துவதால், கல்வித்துறைச் சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தங்களுடைய சொத்து விவரத்தை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

6-முதல் 12 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் பாடக்குறிப்பு (Notes Of Lesson) எழுதும் முறை - CEO சுற்றறிக்கை

அரசுப்பள்ளி கழிவறையை நவீனப்படுத்திய ஆசிரியர் : குவியும் பாராட்டுக்கள்

*விழுப்புரத்தில் குறைந்த செலவில் அரசுப்பள்ளி கழிவறையை நவீனப்படுத்திய பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

*விழுப்புரம் மாவட்டம், சேரானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 114 மாணவர்கள் படிக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் ஏழை, விவசாய குடும்பங்க‌ளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தான்.

*இந்தப் பள்ளியில் உள்ள கழிவறை சுகாதாரமற்ற முறையில் இருந்து‌வந்தது. இதனால், மாணவர்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழித்தனர்.

*மாணவர்களுக்கு சுகாதார சூழலை உருவாக்குவதற்காக‌ பள்ளியின் தலைமையாசிரியரும், ஆசிரியர்களும் இணைந்து ஆலோசித்தனர்.

*இதற்காக, 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன்களை வாங்கி அவற்றை நவீன கழிவறைகளைப்போன்று வடிவமைத்து மாணவர்களுக்கான நவீன கழிவறையை ஆசிரியர்களே உருவாக்கினர்.

*இயற்கை உபாதையை கழித்தபின்னர், கைகால்களை கழுவதற்கு தனியாக தண்ணீர் குழாயும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களிடையே கழிவறை சுகாதாரப் பழக்கத்தை ஆசிரியர்கள் பழக்கியுள்ளனர்.

 *இதற்கான செலவை தலைமையாசிரியரும், பிற ஆசிரியர்களும் இணைந்து பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த நவீன கழிவறையை பள்ளி மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த கிராம மக்களே திறந்து வைத்தனர்.

 *பள்ளி ஆசிரியர்களின் இந்த அர்ப்பணிப்பும், அக்கறையும் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க CEO தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


திருவண்ணாமலை மாவட்டத்தில் அடிக்கடி விடுப்பு எடுக்கும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ,
மாணவிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் 10, 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 2018 - 2019ஆவது கல்வியாண்டின் முதல் இடைப் பருவத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற வேண்டும் என்று கல்வித் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்கான பல்வேறு முயற்சிகளில் கல்வித் துறை ஈடுபட்டு வருகிறது.

முதல்கட்டமாக பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர்களின் வருகைப் பதிவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்களை விடுப்பு எடுக்காமல் தினமும் பள்ளிக்கு வரவழைக்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


பெற்றோர் - ஆசிரியர் கழகம், மாணவர் நன்னடத்தைக் குழு ஆகியவை மூலம் மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில் மாணவர்கள் விடுப்புக் கடிதம் அளித்து தலைமை ஆசிரியர் அனுமதியுடன் விடுப்பு எடுக்க வேண்டும்.


இதையும் மீறி அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தினமும் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டத்திலும், வகுப்பாசிரியர்கள் மூலமும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

தேவையான நேரத்தில் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கையை அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைத்து மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோரும் முழு ஒத்துழைப்பு அளித்து தேர்ச்சி இலக்கை அடைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

MBBS / BDS : மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவையான ஆவணங்கள்!


மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. அதற்கு, எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய ஆவணம் குறித்த விபரங்களை, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

 தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மொத்தம், 5,757 இடங்கள் உள்ளன. இதற்கான தர வரிசையில், 44 ஆயிரத்து, 332 பேர் இடம் பெற்றுள்ளனர். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்கி, 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்போர், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் விவரம்:

* நீட் தேர்வு நுழைவு சீட்டு மற்றும் மதிப்பெண் அட்டை, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்

* கடைசியாக படித்த பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் அல்லது தற்போது படித்து வரும் நிறுவனத்தின், 'போனோபைடு' சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

* இருப்பிட; ஜாதி சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பெற்றோருக்கும், மாணவருக்குமான உறவை குறிப்பிடும் ஆவணம் மற்றும் தேவைப்படுவோருக்கு, முதல் பட்டதாரி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

* தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், வேறு மாநிலங்களில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்திருந்தால், கட்டாயம் இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

* மாணவரின் பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான, ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர் தேர்வு குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகல் கட்டாயம் எடுத்து வர வேண்டும். அசல் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்டு, திரும்ப கொடுக்கப்படும்; நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி இல்லை.போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிப்பதை தடுக்க, விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. பெற்றோருக்கும், மாணவருக்குமான உறவை குறிப்பிட, தங்களிடம் உள்ள ரேஷன் கார்டு போன்ற, ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

அரசுப் பள்ளியில் நம் பிள்ளைகள்: உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஊர்ப் பொதுமக்கள்!

Friday, June 29, 2018


அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும். மாணவர்களை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்று பெற்றோர்களும் இளைஞர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதனால் பள்ளிகளுக்கு செல்லும் இளைஞர்கள் மாணவர்களின் படிப்புக்கு என்ன தேவை என்பதை அறிந்து அந்த உதவிகளை செய்வதுடன் வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் பனங்குளம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியர் கருப்பையன் பள்ளியின் வளர்ச்சிக்காக "ஆளுக்கொரு ஆலோசனை" என்ற கூட்டத்தை கூட்டினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களும், இளைஞர்களும் ஆளுக்கொரு ஆலோசனை சொன்னதுடன் அந்த ஆலோசனைகளை செயல்படுத்த களமிறங்கியுள்ளனர்.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முன்னுரிமை: தமிழக அரசு முடிவு!

சென்னை:
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கே மருத்துவ
படிப்பில் சேர முன்னுரிமை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியான நிலையில், அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதியவர்களில் 12 பேருக்கு மட்டுமே மருத்துவம் படிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்திருந்த மாணவர்களுக்கு எம்.பி.பி.பிஎஸ் படிப்பில் முன்னுரிமை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

பணியிட மாற்றம் கேட்ட ஆசிரியையை கைது செய்யுமாறு உத்தரவிட்ட உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு வலுத்த கண்டனம்

பணியிட மாற்றம் கேட்ட ஆசிரியரை கைது செய்யுமாறு உத்தரவிட்ட உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர ராவத் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற போது உத்தர பகுகுணா என்ற பெண் அவரை அணுகினார்.


  தாம் உத்தரகாசியில் ஒரு ஊரக பகுதியில் அரசு பள்ளியில் 25 ஆண்டுகளாக ஆசிரியையாக உள்ளதாகவும், தனது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் தமது பிள்ளைகள் வசிக்கும் டேராடூனுக்கு இடமாற்றம் செய்து தருமாறு கூறிய ஆசிரியையை  முதலமைச்சர் கடிந்து கொண்டதோடு, கைது செய்யவும் உத்தரவிட்டார்.

தமது கோரிக்கைக்கு பதில் அளிகாததற்கு காரணம் கேட்டதற்கு உடனடியாக தன்னை சஸ்பெண்ட் செய்து, கைது செய்யுமாறு போலீசாருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும்  அந்த பெண் அழுதபடியே குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரியை உத்தர பகுகுணா ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மக்கள் குறைதீர் கூட்டத்தில் முறையிட வந்த ஆசிரியையை கைது செய்ய உத்தரவிட்டதற்கு உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு அம்மாநில எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது.

New Textbook - 2 Days Training Schedule for 11th Handling Teachers


New Textbook - 2 Days Training Schedule for 9th Handling Teachers


BRC Level Training for 6 th std Handling teachers


2 Days BRC Level Training for All Primary Teachers on New Textbooks 1st Std -4 Batches


எட்டாம் வகுப்பு அறிவியல் "பயிர்பெருக்கமும் மேலாண்மையும்" Video


ஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பதிவேற்றும் நடைமுறை 2ம் தேதி முதல் வருகிறது


திருவண்ணாமலை மாவட்டத்தில், செல்போன் செயலி மூலம் 12 ஆயிரம் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் நடைமுறை வரும்2ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

 திருவண்ணாமலை மாவட்டத்தில்,கல்வித் தேர்ச்சி சதவீதத்தையும், மாணவர்களின் கற்றல் அடைவுத்திறனையும் அதிகரிப்பதற்கான பல்வேறு சிறப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், மாணவர்களின் இடைநிற்றல் தடுத்தல், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருதல், தாமதம் தவிர்த்தல் போன்றவற்றில் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் அனைவரது வருகையையும், செல்போன் செயலி விரல் ரேகை பதிவு முறை மூலம் வருகைப்பதிவேடு பராமரிக்கும் நடைமுறை,தமிழகத்தில் முதன்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய பரிசோதனை திட்டம் திட்டமிட்டபடி வரும் 2ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும்12 ஆயிரம் ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு ஆன்லைன் மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.அதற்காக, பிரத்யேகமான செல்போன் செயலி (ஆப்) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இருந்த ஒருசில நடைமுறை குறைபாடுகளும் செயல்முறை பரிசோதனைகள் மூலம் சரி செய்யப்பட்டு, முழுமையாக்கப்பட்டுள்ளது.எனவே, அனைத்து ஆசிரியர்களும் ஸ்மார்ட் செல்போன் வைத்திருப்பது அவசியம் என அறிவுறுத்தியிருந்தோம். அதன்படி, தற்போதுவரை சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்கள் ஸ்மார்ட் போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். மற்றவர்களும் விரைவில் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

பள்ளிக்கு குறித்த நேரத்தில் சென்றடைந்ததும், தங்களுடைய செல்போன் செயலியை ஆன் செய்து,விரல் ரேகையை பதிவுசெய்ய வேண்டும். எந்த இடத்தில் இருந்து, எத்தனை மணிக்கு பதிவு செய்யப்படுகிறது என்ற விவரம் ஆன்லைன் மூலம் உடனடியாக எங்களுக்கு கிடைத்துவிடும்.எதிர்பாராத சூழ்நிலையில், செல்போன் எடுத்து வர மறந்தவர்கள், இணைய வசதியில்லாதவர்கள், தங்களுடைய தலைமை ஆசிரியரின் செல்போனில் வருகையை பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தியிருக்கிறோம். விரல் ரேகை பதிவின்போது, இன்டர்நெட் சிக்னல் கிடைக்காவிட்டாலும் (ஆப்லைன்) விரல் ரேகையை பதிவு செய்யலாம். இணைய சிக்னல் கிடைத்ததும் பதிவேற்றிய விபரம் சரியானநேர விபரத்துடன் எங்களுக்கு கிடைத்துவிடும். எனவே, சிக்னல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம்.தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு முதன்முறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்படும். தொடர்ந்து தாமமை இருந்தால், அந்த நாளுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படும். இந்த நடைமுறையை தொடர்ந்து, மாணவர்களின் வருகையையும் இணையத்தின் வழியாக பதிவேற்றம் செய்யும் வசதி நடைமுறைக்குவரும். அதன்மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தின் கல்வித்தரம் உயரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். பெட்டிச் செய்தி: அரசு பள்ளி மாணவரின் வடிவமைப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆசிரியர்களின் வருகையை பதிவேற்றம் செய்வதற்கான செல்போன் செயலியை, நந்தகுமார் என்ற இளைஞர் வடிவமைத்திருக்கிறார்.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசுமேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவரான இவர், சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். செல்போன்செயலி வடிவமைப்பு, 12 ஆயிரம் ஆசிரியர்களின் வருகைப் பதிவை ஒருங்கிணைத்து, நொடிப்பொழுதில் கணக்கிடும் ஆன்லைன் நெட்ஒர்க்கிங் கட்டமைப்பு வசதி போன்றவற்றை இலவசமாக செய்து கொடுத்திருக்கிறார்.

பொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்'' - எச்சரிக்கை செய்யும் தேர்வுத்துறை!

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கடினமான கேள்விகள் கேட்டதும், தேர்வுத்தாள் திருத்தியபோது மதிப்பெண் அள்ளிப்போடுவதற்கு அணைபோட்டதும் ஏராளமான மாணவர்களை தனியார் சுயநிதிக் கல்லூரிகளை நோக்கிப் படையெடுக்கவைத்திருக்கிறது.


  இந்த நிலையில், அடுத்த ஆண்டு பொதுத்தேர்வில் சிந்தித்துப் பதிலளிக்கும்வகையில் 20 சதவிகிதக் கேள்விகள் இடம்பெறும் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது தேர்வுத்துறை.

தேர்வுத்துறை

இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவில் 1,000 மதிப்பெண்ணுக்குமேல் பெற்றவர்கள் 11.23 சதவிகிதம் பேர். 900 - 1000 மதிப்பெண் வரை பெற்றவர்கள் 12.47 சதவிகிதம் பேர். 900 மதிப்பெண்ணுக்குக் குறைவாக பெற்றவர்கள் 75 சதவிகிதத்துக்கும் கூடுதலாக உள்ளனர். 1000 மதிப்பெண்ணுக்கும் குறைவாகப் பெற்ற மாணவர்கள் தற்போது தனியார் சுயநிதிக் கல்லூரியில் சேர கடுமையாகப் போராடிவருகின்றனர்.

`நடந்து முடிந்த பொதுத்தேர்வில், எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் கடினமான கேள்விகள் கேட்டதும், தேர்வுத்தாள் திருத்தும்போது மதிப்பெண் அள்ளி வழங்குவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதும் சுயநிதிக் கல்லூரிகளின் சேர்க்கைக்காக' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டைத் தவிர்க்கும்விதமாக, ஆசிரியர்களுக்கு முன்னரே ஆலோசனை வழங்கும் சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது தேர்வுத்துறை. இதில், `அடுத்த ஆண்டு பொதுத்தேர்விலும் மாணவர்கள் யோசித்து பதிலளிக்கும் வகையில், 20 சதவிகிதம் கேள்விகள் இடம்பெறும். அதற்குத் தகுந்தாற்போல் மாணவர்களைத் தயார்செய்ய வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட பகுதியை மட்டும் படிக்காமல், பொதுத்தேர்வுக்குப் பாடப்புத்தகத்தின் அனைத்து பகுதிகளையும் முழுமையாகப் படிக்க வேண்டும்’ என்று ஆலோசனை வழங்கியிருக்கிறது

பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கு, ஏற்கெனவே உள்ள ப்ளூ பிரின்ட் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு இன்னமும் ப்ளூ பிரின்ட் முறையில் நடத்தப்படுகிறது. ப்ளூ பிரின்ட் முறையைப் பின்பற்றுவதால் மாணவர்கள் பாடப்புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல் தேர்ந்தெடுத்துப் படித்து அதிக மதிப்பெண் பெறுகின்றனர். இதனால், பதினொன்றாம் வகுப்பில் படிக்கும்போது தனியார் பள்ளிகள் குறிப்பிட்ட பாடப்பகுதியை மட்டும் நடத்தி முடித்து அதிக மதிப்பெண் பெற்றுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து பதினொன்றாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறையைக் கொண்டுவரப்பட்டது. மேலும் பத்தாம், பதினொன்றாம் வகுப்புக்கு ப்ளூ பிரின்ட் முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தில் படிப்பதால் அவர்களுக்கும் ப்ளூ பிரின்ட் முறை இருக்காது. இதனால் பாடப்புத்தகத்தை முழுமையாகப் புரிந்து படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும்.

புதிய பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி. என்ற முறையே பின்பற்றப்படும்


📗புதிய பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி. என்ற  முறையே பின்பற்றப்படும்

📗எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  விளக்கம்.

📗புதிய பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி.க்கு பதில் பொது ஆண்டு  பயன்படுத்தப்படுகிறது.

விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: 130 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. தங்கள் மதிப்பெண்களில் திருப்தி அடையாத பல மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறுமதிப்பீட்டு பணி, கடந்த 1–ந் தேதி தொடங்கியது.

அதில், விடைத்தாள் திருத்தும் பணியில் நிறைய ஆசிரியர்கள் தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மதிப்பெண் கூட்டலில் பலர் தவறு செய்துள்ளனர். இதனால், சில மாணவர்கள், மறுமதிப்பீட்டில் 55 மதிப்பெண்கள் அதிகமாக பெற்றிருந்தனர்.

இதையடுத்து, நாடு முழுவதும், விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்த 130 ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சி.பி.எஸ்.இ. நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களில் சென்னையில் 14 ஆசிரியர்களும், திருவனந்தபுரத்தில் ஒருவரும் அடங்குவர். பாட்னாவில்தான் அதிக அளவாக 45 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது

7வது ஊதியக்குழுவின்படி பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம் உயர்கிறது : எம்எல்ஏ(MLA) ஊதியத்தை விட அதிகம்

தமிழகத்தில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான சம்பளம் 18 சதவீதத்தில் இருந்து 24 சவீதம் வரை உயர உள்ளது. இது எம்எல்ஏக்களின் சம்பளத்தைவிட கூடுதலாக இருக்கும்.  தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுக்களுக்கு பிறகு  கல்லூரி மற்றும் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது.  குறிப்பாக 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பேராசிரியர்கள் சம்பளத்தில் திருத்தம் செய்யவும், உயர்த்தி வழங்கவும் கூடிய ஆணையை அரசு வழங்க உள்ளது. அப்படி திருத்தம் செய்யப்படும் சம்பளமானது தற்போது பேராசிரியர்கள் பெறும் சம்பளத்தில் இருந்து 18 முதல் 24 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
kaninikkalvi.blogspot.com
புதிய ஊதிய விகிதத்தின்படி பேராசிரியர்கள் அடிப்படை சம்பளமாக அதிகபட்சம் ₹1 லட்சத்து 40 ஆயிரம் மாதம் ஒன்றுக்கு பெறுவார்கள். இது தமிழக எம்எல்ஏக்களின் சம்பளத்துடன் ஒப்பிடும் போது 30 சதவீதம் அதிகம்.  கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் புதியதாக பணியில் சேரும் உதவிப் பேராசிரியர்களுக்கு  மாதம் ஒன்றுக்கு 55 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரமாக சம்பளம் உயரும்.

ஊதிய உயர்வு தொடர்பான சம்பள உயர்வு என்பது நாடு முழுவதும் கடந்த 2016ம் ஜனவரி 1ம் தேதி  முதல் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2017 அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி அரசு ஆசிரியர்கள் 21 மாத கால நிலுவைத் தொகையை இழக்க நேரிடும்.  திருத்திய சம்பள அட்டவணைப்படி உதவிப் பேராசிரியர்களின் அடிப்படை சம்பளம் 57 ஆயிரத்து 700 ல் இருந்து 79 ஆயிரத்து 800 ஆகவும், இணைப் பேராசிரியர்கள் 1 லட்சத்து 30 ஆயிரம் அடிப்படை சம்பளமாக பெறுவார்கள். பேராசிரியர்கள் ₹1 லட்சத்து 40 ஆயிரம் முதல் 1 லட்சத்து 80 ஆயிரமாக இருக்கும். அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 7 சதவீதம்  இருக்கும் போது மற்ற உதவித் தொகைகள் வேறுபட வாய்ப்புள்ளது. திருத்திய சம்பளம் தொடர்பான உத்தரவு வெளியான பிறகுதான் முழுமையான  பணப்பயன்கள் எவ்வளவு கிடைக்கும் என்று சொல்ல முடியும் என்று பேராசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது

மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழக்கை குறிப்பு - இன்று ஜூன் 29

இந்திய விஞ்ஞானி, புள்ளியியலாளர், சுதந்திர இந்தியாவின் முதல் திட்டக் கமிஷனின் உறுப்பினர்-

பிரசாந்த சந்திர மகலனோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) பிறந்த தினம்


ஆறாம் வகுப்பு தமிழ்கும்மி பாடலை மாணவர்கள் கும்மியோடு கற்ற வைரல் வீடியோ.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் கல்வி மாவட்டம், சிந்தாமணி புளியங்குடி கமிட்டி நாடார் உயர்நிலை பள்ளி மாணவர்கள் ஆறாம் வகுப்பு தமிழ்கும்மி பாடலை ஆசிரியர் ராஜலிங்கம் அவரகளின் வழிகாட்டுதலில் கும்மி கலையோடு, மகிழ்ச்சியுடன் கற்ற வைரல் வீடியோ

காலை வழிபாடு முதல் மாலை வரை தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர், அனைத்து வகை பிற ஆசிரியர்கள் பணி என்ன ??RTI பதில்...How to delete " Duplicate Files" in Mobile Phone Through App


மதிய உணவு திட்டத்துக்கு சரியான தகவல் தேவை'

'மதிய உணவு திட்டத்தில் பயனடையும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை,
ஒவ்வொரு மாதமும் அளித்தால் தான், நிதியுதவி வழங்கப்படும்' என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் நிதிஉதவியின் கீழ், மாநில அரசு பள்ளிகளில், மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

எண்ணிக்கை
மாநில அரசு அளிக்கும் மாணவர் எண்ணிக்கையை வைத்து, நிதிஉதவி அளிக்கப்படுகிறது. ஆனால், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியாததால், சராசரி எண்ணிக்கையை, மாநில அரசுகள் அனுப்பி, அதிகஅளவு நிதியை பெறுகின்றன.இது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:மதிய உணவு திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியில், முறைகேடுகள் நடப்பதை தடுக்க, இந்த திட்டத்தில், மாணவர்களுக்கு, 'ஆதார்' எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரிந்துவிடும்.ஒவ்வொரு மாதமும், மாணவர்களின் எண்ணிக்கையை, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில், நிதி வழங்கப்படும்.

நடவடிக்கை
மேலும், மதிய உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த, சமூக தணிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உள்ளூர் மக்கள் அடங்கிய குழு, மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்யும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

மாவட்ட குழு பள்ளிப் பார்வை (TEAM VISIT 29.06.2018)தமிழக அரசு ஊழியர்களுக்கு… நான்காம் ஆண்டிலேயே வீட்டுக் கடன்!!!


‘வீட்டுக் கடன் பெறுவதற்குக் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் பணி செய்திருக்க
வேண்டும்’ என்ற விதியை மாற்றி, ‘நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால் போதும்’ என்கிற புதிய அரசாணைக் கொண்டு வந்திருப்பதன்மூலம் இன்னும் அதிகமானவர்கள் சொந்த வீடு வாங்க வழி செய்துதந்திருக்கிறது தமிழக அரசாங்கம்.   கடந்த ஐந்து ஆண்டுகளில் வீட்டுக் கடன்மீது அடுத்தடுத்து நான்கு சலுகைகளைத் தந்து ஆச்சர்யப் படுத்தியது  தமிழக அரசு. அந்த நான்கு என்னென்னவெனில்,

1. வீடு கட்டும் கடன் வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தியது.

2. மனையின் முக்கியத்துவம் கருதி, மொத்த வீட்டுக் கடனில் மனை வாங்க 20% என்றிருந்ததை மாற்றி, வீட்டுக் கடனில் சரிபாதித் தொகை வரை மனை வாங்க அனுமதி.

3. வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதம் குறைப்பு.

4. ஏழாவது சம்பள கமிஷன் நடைமுறையின்படி, ஊதிய மேம்பாடு; அதனால் அதிகபட்சக் கடன் தொகை பெறும் வாய்ப்பு.

இந்த நான்கு சலுகைகளுக்கும் சிகரம் வைத்தாற்போன்று வந்திருக்கிறது இப்போது வந்திருக்கும் ஐந்தாவது சலுகை. அதுமட்டுமல்ல, ஐந்து வருடப் பணி காலத்தைவிடக் குறைவான காலம் கொண்டவர்கள் வீட்டுக் கடன் பெற முடியாது. கடனைத் திரும்பச் செலுத்த 15 ஆண்டுகளும், வட்டியைத் திரும்பச் செலுத்த  ஐந்து ஆண்டுகளும் என அதிக பட்சக் காலக்கெடு 20 ஆண்டு களாகும். எனவே, 40 வயதுக்குப் பிறகு வேலைக்குச் சேருபவர்கள், அந்தக் கடனை அடைக்க முடியாது. அந்த வகையில் 24 மாத பணித் தகுதிக் குறைப்பு என்பது பெரிதும் பயன் தரும். இதனால் ஓய்வுக்காலத்துக்கு 24 மாதங் களுக்கு முன்பே பணத்தைக் கட்டி முடித்துவிட முடியும். இதன்மூலம் வேலையில் இருக்கும் கடைசி 24 மாதங்களில் சேர்க்கும் தொகையைப் பிள்ளைகளின் கல்வி, திருமணத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

படித்து முடித்தவுடன் 25 வயதிலேயே மருத்துவர், துணை ஆட்சியர் உதவிப் பேராசிரியர், பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டப் படிப்பு ஆசிரியர் போன்றோர் வேலைக்குச் சேர்ந்த புதிதிலேயே சொந்த வீட்டின் அவசியம் கருதி, ஆறு ஆண்டுகள்  காத்திருக்க இயலாத நிலையில், பிற நிதி நிறுவனங்களில் மூலம் வீட்டுக் கடன் பெறக்கூடும். தற்போது, பணித்தகுதி நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு இருப்பதால்,  இவர்கள் அனைவருக் கும் வீட்டுக் கடன் எளிதில் கிடைக்கும்.   நடுநிலையான பதவிகளில் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள கணவன்-மனைவி ஆகிய இருவருமே இதன்மூலம் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டலாம். உயர்நிலை ஊதியம் பெறுவோர் மட்டுமன்றி, மத்திய நிலை ஊதியம் பெறும் செவிலியர், அமைச்சுப் பணியினர் மற்றும் நிலையில் உள்ள பல்வேறு பதவியினரும் தகுதியான அளவுக்குக் கடனைப் பெற்று, வீடு கட்டுவதற்குச் சரியான தருணம் இது.

அடிப்படைப் பணியில் (Basic Service) உள்ள ஊழியர்களும்கூட ரூ.15 லட்சம் வரை வீட்டுக் கடன் பெற வாய்ப்புண்டு. ஆனால், வீட்டின் தரைப்பரப்பு (Floor Area) 22 சதுர மீட்டருக்குக் குறையக் கூடாது என உள்ள நிபந்தனையை மறந்துவிடக் கூடாது.

சில கூடுதல் தகவல்கள்

முறையான சம்பள ஏற்ற முறை யில் (Regularisation Scale of Pay) அமைந்த பதவியில், தகுதிகாண் பருவம் முடித்து, நான்கு ஆண்டு  பணிக்காலமும் நிறைவு செய்த, அடிப்படைப் பணியாளர் (Basic Service) முதல், மேல்நிலைப் பணியாளர் (Superior Service) வரை தமிழக அரசு ஊழியர் அனைவரும் வீட்டுக் கடன் பெறலாம்.

*  நான்கு ஆண்டுகள் பணிக்காலம் என்பது பணி வரன் (Regularisation) செய்த நாள் முதல் கணக்கிடப்படும்.

*  மனை வாங்க, வீடு கட்ட அனுமதி கோரி, துறைத் தலைமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

*  மனைவியின் பெயரில் உள்ள சொத்தாக இருந்தால், அவருடைய எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்றுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மனை பெற துறை அனுமதி அவசியமில்லை.

*  அசல் தொகையைத் திரும்பச் செலுத்த அதிகபட்சத் தவணை 180  மாதங்கள் என்றாலும், தவணையின் எண்ணிக்கையை 100 மாதங்கள் என்கிற அளவில் குறைத்துக்கொண்டால், பெரிய அளவில் வட்டி மிச்சமாகும். அதாவது, கடன் தொகையில் 50 சதவிகிதத்துக்கு உட்பட்டு வட்டி இருக்கும். அல்லாதபட்சத்தில் வட்டியானது அசல் தொகையின் 80 சதவிகிதத்துக்கும் அதிகமாகலாம்.

*  தற்போதுள்ள பதவியில் நான்கு ஆண்டுகள் பணிநிறைவு செய்த ஊழியர், போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று, மேம்பட்ட பதவிக்கு (தமிழக அரசிலேயே) செல்வதாக இருப்பினும், தற்போதே இந்த வீட்டுக் கடன் பெற விண்ணப்பித்துவிடலாம். துறை மாறுதல் காரணமாகக் கடன் பெறுவது பாதிக்கப்படாது.

*  இதேபோல், தமிழக அரசு ஊழியர் ஒருவர் சம்பளமில்லா விடுப்பில், மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மூலம் வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம். இப்படி வீட்டுக் கடன் பெற்றவர்கள், ஓராண்டுக்கான தவணைத் தொகையை முன்னதாகச் செலுத்திவிட்டு வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம். இப்படி வீட்டுக் கடன் பெற்றவர்கள், ஓராண்டுக்கான தவணைத் தொகையை முன்னதாகச் செலுத்திவிட்டு வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம். திரும்பி வந்து அரசுப் பணியில் தொடரலாம். ஐந்தாண்டுகள் இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருக்கலாம்.

*  வேலைக்கு வரும்முன்போ அல்லது வந்தபின்போ, சொந்தப் பணத்தைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்து, மேற்கொண்டு கட்ட நிதி ஆதாரம் இல்லாமல் நின்றுபோன வீட்டுக்கும் வீட்டுக் கடன் பெறலாம். மிஞ்சியுள்ள வேலைக்குத் தேவையான பணமதிப்பீடு (Estimate) எவ்வளவோ, அந்தத் தொகை கடனாகக் கிடைக்கும்.

*  மிதமான சம்பளம் கொண்ட தமிழக அரசுப் பதவியில் உள்ள தம்பதி, இருவரின் சம்பளத் தொகையைக் கூட்டி வரும் 75 மாத சம்பளத் தொகையைக் கடனாகப் பெறலாம். வரம்பு ரூ.25 லட்சம் கடன் பிடித்தத்தை ஒருவரின் சம்பளத்தில் தொடர அனுமதிக்கலாம்.

* ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்ட ஊழியரும் விண்ணப்பிக்க லாம். ஒழுங்கு நடவடிக்கை முடிவுக்கு வந்தபின் விண்ணப்பம் பரிசீலனைக்கு வரும். மேலும், எந்தவொரு வீட்டுக் கடன் நிறுவனம் விதிக்கும் வட்டியைவிட தமிழக அரசு விதிக்கும் வட்டி குறைவு என்பதால், சுமார் 45% வரை பணம் மிச்சமாகும்.

ஆக, வீட்டுக் கடன் மூலம் வீடு கட்ட அரசு நிறைய சலுகைகளை அளித்துவிட்டது

2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் இல்லை

2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் இல்லை -சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்
20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன் என்பதற்கு, 2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை
என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.சட்டசபையில் நேற்று தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி (திருக்கோவிலூர் தொகுதி), கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து பேசினார். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அரசு மூட இருப்பது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தொடக்க கல்வியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 29,297 ஆகும். இதில், 85,109 இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஆசிரியர்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு (2017) ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை, ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்த 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர் எழுதினார்கள். இவர்கள் அனைவரும் வேலைக்காக காத்திருப்பவர்கள். இடைநிலை ஆசிரியர்களின் நியமனங்கள் வெகுவாக குறைந்துள்ளதால், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேருவதற்கு விருப்பம் காட்டுவதில்லை.

கடந்த ஆண்டு 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 2,650 இடங்களில் 1,047 மாணவர்களும், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 480 இடங்களில் 113 மாணவர்களும், 7 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 350 இடங்களில் 66 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர்.

20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன் என்பதற்கு, 2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.இவை தவிர, 40 அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 3,360 இடங்களில் 459 பேரும், 279 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 19,150 இடங்களில் 3,419 பேரும் மட்டுமே சேர்ந்தனர்.

நடப்பு கல்வியாண்டில், 10 உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 47 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திவிட்டு, மூடுவதற்கு அனுமதி வேண்டியுள்ளன. இப்படிப்பட்ட நிலையே அனைத்து மாநிலங்களிலும் உள்ளதால், மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பயிற்சிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்களை பணியிடைப் பயிற்சிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளது.

எனவே, 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணி முன் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி, அப்பயிற்சி நிறுவனங்களில் பணியிடைப் பயிற்சி மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 மாவட்டங்களில் பணிமுன் பயிற்சி மற்றும் பணியிடை பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SAALAKOSH - FORMAT 2018

நாம் எல்லோரும் மீடியாவிற்கு தெரியாத பகவான்களே..


கல்வித்துறை அதிரடி:
ஆசிரியர்களின் உடலில் சிறிய எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்படும்.

அது தலைமைச்செயலக சர்வரில் இணைக்கப்பட்டு இருக்கும்..
நாம் என்ன செய்கிறோம் என்ற தகவல்களை உடனுக்குடன் சர்வருக்கு அனுப்பி கொண்டே இருக்கும்..
அத்துடன் அந்த சிப்பானது Google maps உடன் இணைக்கப்பட்டு இருக்கும்..
அதில் எப்பொழுது வருகிறோம்
போகிறோம் என்ற தகவல்களை சேகரிக்கும்..
QR code TLM பயன்படுத்துகிறீர்களா என்ற தகவலை அனுப்பும்..
மருத்துவ விடுப்பு உங்களுக்கு தேவையா என்று அதுவே உங்கள் உடலை Scan செய்து ரிப்போர்ட் செய்யும்..
செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய Curiosity Rover விண்கலத்தில் இருக்கும் அதிநவீன கேமரா நம்மை படம்பிடித்து கொண்டே இருக்கும்..
படிக்கும்போது வயிறு கலக்குதா..
இப்படித்தான் நம்ம ஆசிரியர்கள் அதிரடி., அதிரடினு   Forward மெசேஜா அனுப்பும்போது எனக்கும் கலக்கியது ..
90% ஆசிரியர்கள் தம் பணியை சரியாக செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்..
நாம் நம் வேலையை சரியா செய்யும் போது எந்த Google map ற்கும் அச்சம்கொள்ள தேவையில்லை..
பதற்றம் வேண்டாம்..
மற்றவைரையும் பதற்றபட வைக்கவேண்டாம் நண்பர்களே. .
நாம் எல்லோரும் மீடியாவிற்கு தெரியாத பகவான்களே

போதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை முழுமையாக ஒப்படைத்த 22 பொறியியல் கல்லூரிகள்

மாணவா் சோ்க்கை இல்லாத காரணத்தால் 22 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தங்களிடமுள்ள நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் முழுவதையும், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வுக்கு ஒப்படைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவா் சோ்க்கையை நடத்தி வருகிறது. இந்த முறை ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் இடங்களை நிரப்ப உள்ளது. அரசுக் கல்லூரிகளைப் பொருத்தவரை, அவற்றில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பி.இ. இடங்களும் கலந்தாய்வு மூலமே நிரப்பப்படும். அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை சிறுபான்மையினா் கல்வி நிறுவனமாக இருந்தால் 50 சதவீத இடங்களை கலந்தாய்வுக்கு ஒப்படைக்க வேண்டும் (அதாவது அரசிடம் ஒப்படைக்க வேண்டும்). சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனமாக இருந்தால் 65 சதவீத இடங்களை கலந்தாய்வுக்கு ஒப்படைக்க வேண்டும்.

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பி.இ. படிப்புகளில் மாணவா் சோ்க்கை வெகுவாகக் குறைந்து வருவதால், அரசு ஒதுக்கீட்டு இடங்களை மட்டுமின்றி நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அரசிடம் ஒப்படைத்து வருகின்றன. அதுபோல இந்த ஆண்டும் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள 509 பொறியியல் கல்லூரிகளில், 187 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 18,771 நிா்வாக ஒதுக்கீடு பி.இ. இடங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதில் 22 பொறியியல் கல்லூரிகள் தங்களிடமுள்ள நிா்வாக ஒதுக்கீட்டு பி.இ. இடங்கள் முழுவதையும் கலந்தாய்வுக்கு ஒப்படைத்துள்ளன.

இதன் காரணமாக, 2018-19 பி.இ. கலந்தாய்வில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 865 பி.இ. இடங்கள் இடம்பெற்றள்ளன என உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறினாா்.

அரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடுக்க தற்காலிக ஆசிரியர்கள் !

அரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், வகுப்பெடுக்க போதிய கணினி ஆசிரியர் இன்றி மாணவர்கள் பாதிக்கின்றனர் என, ஆசிரியர் சங்கங்கள் புகார் கூறுகிறது.
தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வால் பள்ளிக் கல்வியில் சில மாற்றம் கொண்டு வரப்பட்டது.

 இவ்வாண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வானது. நுழைவுத் தேர்வுகளை அரசுபள்ளி மாணவர்களுக்கு எதிர்கொள்ளும் நோக்கில் 11-ம் வகுப்பு பாடத்திட்டமும் மாற்றப்பட்டது. புத்தகங்களை முழுமையாக படித்து தேர்வெழுத ஒவ்வொரு பாடத்திற்கும் 800 முதல் 1500 பக்கங்கள் அடங்கிய புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறித்த நாளுக்குள் யூனிட் அடிப்படையில்கற்பிப்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு இன்னும் கிடைக்காத சூழல் உள்ளது என, புகார் எழுந்துள்ளது. அதிக பக்கங்களை படித்தாலும் நீட் தேர்வால் மருத்துவ கனவை எட்டமுடியுமா என்ற தயக்கத்தில் அரசு பள்ளிகளில் கலைப் பாடப்பிரிவில் சேர ஆர்வம் காட்டிஉள்ளனர்.மேல்நிலை கல்வியில் அறிவியல் பிரிவில் மட்டும் இருந்த கணினி வகுப்பு இம்முறை அனைத்துப் பிரிவிலும் கணினி பாடத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான கணினி ஆசிரியர்களைநியமிக்கவில்லை என, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.இதுகுறித்து தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சிவகங்கை இளங்கோவன் கூறியது:“அரசு பள்ளிக் கல்வியில் சீர்த்திருத்தங்களை வரவேற்கிறோம். புதிய பாடத்திட்டத்தின்படி, 11-ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் 1000 முதல் 1500 பக்கங்கள் இடம் பெறுகின்றன. இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும். இதை அவர்களிடம் திணிப்பதால் கல்வித்தரம் உயர்வு, மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆய்வு செய்தால் விவரம் தெரியும்.இவ்வாண்டு 11 ஆம் வகுப்பில் குரூப்-1, பயோ சயின்ஸ் பிரிவுகளில் சேர்க்கை குறைந்துள்ளது. கலைப் பிரிவுகளில் அதிகம் சேர்ந்துள்ளனர். பத்தாம் தேர்ச்சி பெற்றவர்கள் 20 சதவீதம் பேர் 11-ம் வகுப்பில் சேர தயங்கி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டைவிட 30 சதவீத மாணவர்கள் கலைப்பாட பிரிவுகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.அதிக பக்கங்களை படிப்பது, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்வது என்ற தயக்கம் உள்ளது. ஒருவேளை நீட் தேர்விலும் தோல்வியை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் மாணவர், பெற்றோர் மத்தியில் உள்ளது. அறிவியல் பாடங்களில் 70 மதிப் பெண்ணுக்கு 1200 பக்கமும், கணிதம் 90 மதிப்பெண்ணுக்கு 2 வால்யூம் கொண்ட800 பக்கங்களை படிக்க வேண்டும்.முதல் வகுப்பில் இருத்தே மாணவர்களை தயார்படுத்தி இருந்தால் சாத்தியம். இதுபோன்ற சூழலில் அரசு பள்ளியில்மாணவர் சேர்க்கை குறைவை காரணம் காட்டி, உபரி என, ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு மாற்ற கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிடுகின்றனர்.கணினி ஆசிரியர்களுக்கு பணிமாறுதலான காலியிடத்திற்கு பதில் ஆசிரியர்கள் நியமிக்கமில்லை. மாநிலம் முழுவதும் 2,570 மேல்நிலைப் பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மாற்று ஏற்பாட்டில் இருந்த கணினி ஆசிரியர்களை நிறுத்திவிட்டனர். மேல்நிலை கல்வியில் அனைத்துப் பாடப்பிரிவிலும் கணினி வகுப்பு கட்டாயம் என, அறிவித்துவிட்டு, அதற்கான ஆசிரியர்கள் நியமனமின்றி எப்படி வகுப்பெடுக்க முடியும்.இதை அறிந்த பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். தரமான கல்வி என்ற உத்தரவு இருந்தும், புதிய பாடப் புத்தகங்கள் சப்ளை இன்றி, எப்படி பாடம் நடத்துவது என்ற கேள்வி எழுகிறது. சரியான திட்டமிடல் இன்றி, ஆசிரியர்கள் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது பள்ளிக் கல்வித்துறை.பயோ மெட்ரிக் வருகைப் பதிவு என, அறிவித்துவிட்டு தயக்கம் ஏன்?புளூபிரண்ட் இன்றி புத்தகத்திற்குள் இருந்து மட்டுமே வினாக்களுக்கு பதிலளிக்கும் முறை கிராமப்புற மாணவர்களை மறைமுகமாக தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் செயல்” என்றார்.கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பள்ளிகள் துவங்கிய 2 வாரம் மட்டும் 11-ம் வகுப்பு புத்தகம் வர தாமதம் இருந்தது. ஆன்லைனில் அதற்கான பாடத்திட்டத்தை பார்த்து பாடமெடுக்க அறிவுறுத்தப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் புதிய பாடப்புத்தகங்கள் கிடைத்துள்ளது. கணினி வகுப்பெடுக்க தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

How to use ICT Activity 9 ஆம் வகுப்பு - கணிதம்-கணமொழி - பக்கம் 26 -ICT corner செயல்பாட்டை கையாளும் முறை

Thursday, June 28, 2018


TNPSC - தேர்வு முடிவுகளின் தற்போதைய நிலை!


Free Laptop with Data Card - Govt Announced!!


கிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு,
'லேப்டாப்' மற்றும் 'டேட்டா கார்டு' வழங்கப்படுமென அறிவித்துள்ளது.தமிழக சட்டசபையில், பட்ஜெட் கூட்டம் நடந்து வருகிறது. நேற்று, வருவாய்த்துறையின் மானியக்கோரிக்கை நடந்தது. அப்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கான மேம்பாட்டு பணிகள்; 'இ-சேவை' மையம் போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.முக்கியமாக, கிராம நிர்வாக அலுவலர்கள் வேண்டுகோளின்படி, 'லேப்டாப்' மற்றும் 'டேட்டா கார்டு' வழங்கப்படுமென, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, இத்திட்டத்துக்கு, 1.42 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நிறைவேற்றிய அரசுக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், 'பொது 'இ-சேவை' மையங்கள் வழியாக, மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, 'லேப்-டாப்' முழுமையாக வழங்கவில்லை. 'லேப்-டாப்' வழங்கியவர்களுக்கு, இணைய சேவைக்கான வசதி செய்து கொடுக்கப்படவில்லை.இதனால், 'ஆன்லைன்' மூலமாக, சான்றிதழ் வழங்க பரிந்துரைப்பதில் பல்வேறு சிக்கல் நீடிக்கிறது. 'டேட்டா கார்டு' வழங்கி,, மாதாந்திர செலவு தொகையும் வழங்க வேண் டுமென வலியுறுத் தினோம். அதன்படி, 'டேட்டா கார்டு' வழங்கப்படுமென அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்

அரசு பள்ளி ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்கூடாது - மாணவர்களின் அடுத்த நெகிழ்ச்சியான போராட்டம்!


தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பாசப்போராட்டம் தொடர்கதையாக மாறி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஆசிரியர் பகவான் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போது,

அவரை அனுப்பக்கூடாது என மாணவர்களும், பெற்றோர்களும் கதறி அழுது, கோஷமிட்டு நடத்திய போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்றது. தற்போது வேலூர் மாவட்டத்திலும் இதுபோல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விஜயா என்பவர் தமிழ் ஆசிரியையாக பணியாற்று வருகிறார். இவரைத் தற்போது குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தமிழாசிரியர் விஜயாவை பணியிட மாற்றத்தை கைவிட வலியுறுத்தி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு பெற்றோரும் ஆதரவு வழங்கினர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் போராடத்தை கைவிடும் படி கோட்டுக்கொண்டதை அடுத்து அவர்கள் வகுப்புக்கு வென்றனர். இந்த பிரச்னை தொடர்பாக  மாணவர்களின் பெற்றோருடன் பேச்சு நடத்திய முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், தமிழாசிரியர் விஜயா, பணி மாற்றம் தொடர்பாக உரிய பரிசீலனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மறுகூட்டலில் 10ம் வகுப்பில் 433 மாணவர்களின் மதிப்பெண் அதிகரித்தது!!

LIST OF MERIT SCHOLARSHIP SCHEME -2018

ஐஐடி-க்காக ஆந்திராவுக்கு படையெடுக்கும் தமிழக பள்ளி மாணவர்கள்


சென்னை: தமிழகத்தைப் போல 7 பாடங்கள் அல்லாமல், வெறும் 5 பாடங்கள் மட்டுமே இருப்பதால் ஆந்திரா, தெலங்கானாவுக்குச் சென்று பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஐஐடி-க்களில் சேர வேண்டும் என்பதற்காக ஆந்திரம், தெலங்கானா சென்று பள்ளிப் படிப்பை மேற்கொள்ளும் கலாசாரம் தமிழகத்தில் தொடர்ந்து பெருகி வருகிறது.

இவ்வாறு பிற மாநிலங்களுக்குச் சென்று பிளஸ்-1, பிளஸ்-2 படித்து வரும் மாணவர்களுக்கு தமிழகத்தில் உயர் கல்வி படிக்க மாநில ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிப்பதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது.

இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களில் 3 பேர் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே தமிழகத்தில் படித்துள்ளனர். அதன் பிறகு, இவர்கள் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் உள்ள பள்ளிகளில் சேர்ந்து பிளஸ்-2 வரை படித்துள்ளனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு மொத்தம் 6 பாடங்கள் வைக்கப்படுகின்றன. முதல் மொழிப் பாடம், இரண்டாம் மொழிப் பாடம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் என ஆறு பாடங்களை தமிழக மாணவர்கள் படித்தாக வேண்டும். பிளஸ்-2 வகுப்பில் எந்தப் பிரிவை எடுத்தாலும் 6 பாடங்கள்தான்.

ஆனால், ஆந்திரம், தெலங்கானாவில் பெரும்பாலான பள்ளிகள் ஐஐடி சேர்க்கைக்காக முன்னுரிமை அளித்து, அதற்காக பள்ளி பாடத் திட்டத்தையே மாற்றியமைத்துள்ளன. பிளஸ்-2 வகுப்புக்கு வெறும் 5 பாடங்கள் மட்டுமே. ஆதாவது ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்கள் மட்டுமே அவர்கள் படிக்கின்றனர். அதிலும், வகுப்பில் பெரும்பாலும் பள்ளி பாடங்கள் நடத்தப்பட மாட்டாது. ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட பி.இ. தரவரிசைப் பட்டியலில் 8 ஆவது இடம் பிடித்த என்.ஏ.நிஷா, 9 ஆம் இடம் பிடித்த எஸ்.நிதிஷ்குமார், 10 ஆம் இடம்பிடித்த ஏ.ஏ.மணிகண்டன் மூவரும் ஆந்திரத்தில் பிளஸ்-2 வரை படித்துள்ளனர். ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இதுபோல ஆந்திரம் சென்று படித்த இவர்களில், மணிகண்டன் மட்டும் மும்பை ஐஐடி-யில் இடம் கிடைத்துச் சேர்ந்துள்ளார். மற்ற இருவரும் கலந்தாய்வில் பங்கேற்று அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் இடத்தைத் தேர்வு செய்ய உள்ளனர்.

பொது அறிவை வளர்க்கும் பாடங்களுக்கு முக்கியத்துவம் அல்லாமல், பொது நுழைவுத் தேர்வு ஒன்றையே மையமாக வைத்து வகுப்புகள் நடத்தப்படும் ஆந்திரத்துக்குச் சென்று பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் கலாசாரம் கடந்த சில ஆண்டுகளாக தமிழக மாணவர்களிடையே பெருகி வருகிறது.

இந்த மாணவர்களுக்கு தமிழத்தில் உயர்கல்வியில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றபோது, தமிழகத்திலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடங்களின் எண்ணிக்கையை 5-ஆக குறைக்க வேண்டும். இல்லையெனில் ஆந்திரத்தில் படித்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியது:

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

அல்லது, பள்ளிப் படிப்பின் கடைசி 5 ஆண்டுகள் தமிழகத்தில் படித்திருக்க வேண்டும்.

இல்லையெனில், விண்ணப்பதாரரின் தாய், தந்தையர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், பள்ளிப் படிப்பை அவர் பிற மாநிலங்களில் மேற்கொண்டவராகவும் இருந்தால் இருப்பிடச் சான்றிதழை அவர் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அரசாணைப் படியே கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது என்றனர்

தமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்குவதற்கான பட்டியல் தயாரிப்பு!!


பட்டியல் சரியாக இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு ஜூன் மாத ஊதியம்!

பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாறுதல்களில் சரியாக இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு ஜூன் மாத ஊதியத்தை தரவேண்டும்:-முதன்மைக்கல்வி அலுவலர்களுக்குஉத்தரவு!

5th Std - English - "Wanting an answer" ( Unit 1 Poem ) - Video Lesson


முதல் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் உயிர் எழுத்துகளை எழுதும் முறை- video


உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம்

மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் நடித்த "காடு எம் வீடு" துணைப்பாடம்- Video


ஊ.ஒ.தொ.பள்ளி, மாங்குடி, முத்துப்பேட்டை ஒன்றியம், திருவாரூர் மாவட்டம்.

MBBS / BDS Courses 2018 - 19 | Government Quota Provisional Mark List

மாணவர்களின் கற்றல் அடைவுகள் முன்னேற்றம் தேவைப்படும் பள்ளிகளின் பட்டியல் அனுப்ப உத்தரவு -CEO செயல்முறைகள்


அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகள், ஆய்வகங்கள் கட்ட நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்


Treasury Guide 2018

மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு

மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
விளையாட்டு பிரிவினருக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 7, பிடிஎஸ் படிப்பில் ஒரு இடமும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 எம்பிபிஎஸ், 1 பிடிஎஸ் இடமும் அதிகரிக்கப்பட்டுள்ளது

எம்பிபிஎஸ் படிப்பில் 3,393 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 1,198 இடங்களும் உள்ளன" என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும்

💉தமிழ்நாட்டில் 3,393 மருத்துவ இடங்கள் உள்ளன,
பல் மருத்துவ படிப்பில் 1,198 இடங்கள் உள்ளன

💉மொத்தம் ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 25,417

💉ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் ஆண்கள் 10,473 பேர் , பெண்கள் 17,593 பேர், திருநங்கை ஒருவர்
--அமைச்சர் விஜயபாஸ்கர்

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசையில் முதலிடம் கீர்த்தனா ரவி

2-ம் இடம் ரித்விக், 3-ம் இடம் ஸ்ரீவர்ஷினி

முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர் - அமைச்சர் அன்பழகன்

பி. இ. படிப்புக்கான தர வரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் அன்பழகன்

தரவரிசைப் பட்டியலில் தவறிருந்தால் திருத்திக் கொள்ள ஒரு வார கால அவகாசம்

பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த 1,59, 631 பேரில் 1,04, 453 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு

வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில்... மெத்தனம்! நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிரடி உத்தரவு

கடலுார் : ஆசிரியர்கள் வருகைப்பதிவை தினசரி எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் மெத்தனம் காட்டி
வரும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தின் பழமையான கடலுார் மாவட்டத்தில் புகழ் வாய்ந்த பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு படித்த பலர் நாட்டின் பல்வேறு உயர் பதவிகளில் பணி புரிந்து வருகின்றனர். அந்தளவிற்கு கல்வியில் சிறந்த விளங்கிய கடலுார் மாவட்டம் கடந்த 20 ஆண்டுகளாக கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற அரசின் உத்தரவால், பெரும்பாலான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஆர்வம் காட்டுவதில்லை.

இதன் காரணமாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து போதிய கற்றல் திறனின்றி உயர்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் காட்டுவதில்லை.இதனால், பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் மாவட்டத்தில் வெகுவாக குறைந்து மாநில பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது.தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பணி நேரத்திற்கு சரிவர வராததே இதற்கு முக்கிய காரணம் என்பதை கடந்த 2010ம் ஆண்டு கலெக்டராக இருந்த அமுதவல்லி கண்டறிந்து, ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்திட எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.அதில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி துவங்கும் நேரம் முடிந்ததும் ஆசிரியர்கள் வருகை விபரத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்திற்கு (நிக்) மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். இந்த திட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு கட்டாயம் வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் செயல்பாட்டினால், மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் திறன் படிப்படியாக உயர்ந்து வருவதால், பொதுத்தேர்வில் கடைசி இடத்தில் இருந்த கடலுார் மாவட்டம் தற்போது 27ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.இந்த நிலையில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அனுப்புவதில் பல தலைமை ஆசிரியர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் 1,082 தொடக்கப் பள்ளிகள், 341 நடுநிலைப் பள்ளிகள், 146 உயர்நிலைப் பள்ளிகள், 135 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,704 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன.இப்பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டு துவக்கத்திலேயே 208 தொடக்கப் பள்ளி, 47 நடுநிலைப் பள்ளி, 24 உயர்நிலைப் பள்ளி, 17 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்த 296 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வருகைப் பதிவை எஸ்.எம்.எஸ் அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர். எஸ்.எம்.எஸ்., அனுப்பிய தலைமை ஆசிரியர்களில் 115 பேர் வருகைப்பதிவை தவறாக அனுப்பியுள்ளதால், பதிவு ஏற்கப்படவில்லை.

பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை ஆய்வு செய்த, கலெக்டர் தண்டபாணி, வருகைப்பதிவு எஸ்.எம்.எஸ்., பதிவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.அதன்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (பொறுப்பு) முனுசாமி, ஆசிரியர்கள் வருகைப்பதிவை தினமும், குறித்த நேரத்தில் எஸ்.எம்.எஸ்., அனுப்பவும், தவறும் பட்சத்தில், அதற்கான விளக்கத்தை அன்று மாலைக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Flash News : மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு : நீட் தேர்வில் மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று பட்டியலில் முதலிடம்


சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

 தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக ஜூன் 10ம் தேதி  அறிவிக்கை வெளியிடப்பட்டது. மாணவர்கள் ஜூன் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை  23 அரசு மருத்துவ கல்லூரிகளில் பணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றனர். இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தனர். ஜூன் 19ம் தேதி மாலை வரை 43,935 விண்ணப்பத்தை சமர்பித்திருந்தனர். தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சுமார் 6,500 இடங்கள் உள்ளன.ஜூலை 1ம் தேதி முதல் தேதி முதல்கட்ட  கலந்தாய்வை தொடங்கவும், ஜூலை 2வது வாரத்தில் 2வது கட்ட கலந்தாய்வையும் நடத்தி, செப்டம்பர் 30ம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க மருத்துவகல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.  எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடத்தை தருமபுரி மாணவர் அபிஷேக்கும், 3வது இடத்தை சென்னை மாணவர் பிரவீனும் பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மொத்தம்  25,417 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன என்று கூறினார். மேலும் ஏற்கப்பட்ட விண்ணப்பங்களில் ஆண்கள் 10,473 பேர், பெண்கள் 17,593 பேர் மற்றும் மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பொதுப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 28,067 ஆக உள்ளது என்றும் 5% ஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் கூறினார். இதனிடையே ஜூலை 1ம் தேதி மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது

ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க TN ATTENDANCE அறிமுகம்!!


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One