எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

11 th Exam

Wednesday, March 7, 2018

தமிழகத்தில் முதல்முறையாக பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு இன்று துவக்கம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 7,070 பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த தேர்வில்  8 லட்சத்து 63 ஆயிரத்து 668 மாணவ மாணவியர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு உண்டு என்று அரசு அறிவித்தது. இதன்படி, நாளை பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் இயங்கும் 7,070 பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ மாணவியரும், தனித் தேர்வர்களாக 1,753 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 மாணவ மாணவியர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 407 பள்ளிகள் மூலம் 49 ஆயிரத்து 422 பேர் எழுதுகின்றனர்.

அவர்களுக்காக சென்னையில் 156 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 150 பள்ளிகள் மூலம் 15404 பேர் எழுதுகின்றனர். அவர்களுக்காக 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1 தேர்வை கண்காணிக்க 43190 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 4000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளியின் தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை  ரத்து செய்திட மெட்ரிக்குலேஷன் இயக்குநருக்கு பரிந்து செய்யப்படும் என்றும் தேர்வுத் துறை எச்சரித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வைப் போல பிளஸ் 1 தேர்வுக்கும் நேரம் இரண்டரை மணியாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.45 மணிக்கு முடியும். வழக்கம் போல, கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும், விடைத்தாள் முகப்பில் விவரங்கள் பூர்த்தி செய்யவும் 15 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One