பணிக்கு தாமதமாக வந்த 37 ஆயிரம் ஊழியர்களின் சம்பளத்தை மாநகராட்சி பிடித்தம் செய்து உள்ளது.
மும்பையில் உள்ள மாநகராட்சி ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து செல்வதை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சி அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்காக மாநகராட்சி அலுவலகங்களில் 3 ஆயிரத்து 900 பயோமெட்ரிக் கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பயோ மெட்ரிக் வருகைப்பதிவு மூலம் மாநகராட்சியில் பணிபுரியும் 37 ஆயிரம் ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வந்ததும், பணி நேரத்திற்கு முன்னதாகவே சென்றதும், அனுமதி இன்றி விடுமுறை எடுத்து இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சரியான நேரத்திற்கு பணிக்கு வராத ஊழியர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி பணிக்கு தாமதமாக வந்த 37 ஆயிரம் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டது.
ஆனால் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு மாநகராட்சி ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் ஊழியர்களின் முழுமையான சம்பளத்தை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

No comments:
Post a Comment