எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் (OBC) வாங்குவது எப்படி?

Saturday, March 24, 2018


சாதிச் சான்றிதழ் பிசி வாங்கியிருந்தால் இதர பிற்படுத்தப்பட்டோர் ஓபிசி சான்றிதழ் வாங்குவது சுலபம். பிசி சான்றிதழ் வாங்கவில்லை என்றால் அதை வாங்கிவிட்டு ஓபிசி-க்கு மனுசெய்ய வேண்டும்.



ஓபிசிக்கு மனு செய்யும் போது பொருளாதாரத்தில் முன்னேறியவர் (Creamy Layer) இல்லை. பொருளதாரத்தில் பின்தங்கியவர் (Non Creamy Layer) என்பதற்கான ஆதாரம் காட்டவேண்டும்.

(Creamy Layer) என்றால் என்ன?
---------------------------------------------
ஒரு குடும்ப தலைவருடைய ஆண்டு வருமானம் ரூபாய 6 லட்சத்திற்கு மேல் இருந்தால் அதற்கு கிரிமிலேயர் என்று பெயர். அதாவது அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறியவர் என்று பொருள். அவர் பிற்படுத் தப்பட்ட சாதியாக இருந்தாலும், வருமானம் 6 லட்சத்திற்கு மேல் இருந் தால் அவர்களுக்கு எந்த சலுகையும் கொடுக்க கூடாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.

அப்படியானல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் (Non-Creamy Layer) யார்?.
--------------------------------------------------------
குடும்பத் தலைவரின் வருமானம் 6 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அவர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர். அவர் பிறபடுத்தப்பட்டோ ருக்கான சலுகைகளை பெற தகுதி உடையவர். அவர்கள் மட்டும் ஒபிசி சான்றிதழ் வாங்க வேண்டும். அதோடு பொருளாதாரத்தில் பின்தங்கியவர் (Non-Creamy Layer) என்று தாசில்தாரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். ஓபிசி சான்றிதழ் வழங்கும் போதே, இதையும் சேர்த்துக் கொடுத்துவிடுவார்கள்.

பயப்பட வேண்டாம், நம்மில் பெரும்பாலனவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் (Non-Creamy) தான்!

8.9.1993 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏஎஸ், ஐபிஎஸ், குரூப்-ஏ (Group-A) அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், மற்றும் வழக்கறிஞர்களை பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாக வகைப்படுத்தியிருக்கிறது. குரூப்-ஏ அதிகாரிகளுக்கு கீழே பணிபுரியும் குரூப்-சி மற்றும் குரூப்-டி பணியாளர்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களாக (Non-Creamy Layer) குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கும் போது, மாதந்திர வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், விவசாயத்தின் மூலம் வருகின்ற வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மத்திய அரசு வெளியிட்ட ஆணையில் குறிப்பிட்டிருக்கிறது.

மத்திய சர்க்காரின் உத்தரவை மேற்கொள் காட்டி, தமிழக அரசும் விளக்க மான ஒரு ஆணையை 24.4.2000-ல் பிறப்பித்து இருக்கிறது. அதில் வருமானத்தை கணக்கில் எடுத்துக கொள்ள கூடாது என்றும் குறிப்பிட் டிருக்கிறது.

ஓபிசி சான்றிதழ் வாங்க மனு செய்யும் போது, வேலை செய்யும் அலுவல கத்திலிருந்து பெறப்பட்ட சம்பள சான்றிதழை தாசில்தார் அலுவலகத்தில் கேட்டால் மட்டும் கொடுக்கவும். அதை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள் வார்கள். சம்பளத்தை வைத்து ஓபிசி சான்றிதழ் நிராகரிக்க மாட்டார்கள்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது.
--------------------------------------------------
1. ஓபிசி சான்றிதழில் தாசில்தார் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். தாசில்தார் (Head QuatersTahsildar) பதவிக்கு கீழே உள்ளவர்கள் கையெழுத்துப் போட்டிருந்தால் செல்லாது.
2. தமிழக அரசின் கோபுரசீல் போட்டிருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
3. பெயர், விலாசம் மற்றும் சாதியின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக் கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஏனெனில் ஓபிசி சான்றிதழ் சரிபார்ப்பவர்கள் மத்திய அரசு அதிகாரிகள். ஒரு சிலரே தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள். பெரும்பாலனவர்கள் தமிழ் படிக்கத் தெரியாதவர்கள். அதனால் ஆங்கிலத்தில் சாதி சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்று திருப்பி அனுப்பி விடுவார்கள். அதனால் சான்றிதழ் வாங்கும் போதே, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை முன் கூட்டியே கவனித்து வாங்கிவிடுவது நல்லது.

பிசி சான்றிதழ் வாங்குவது கடினம். ஓபிசி வாங்குவது அதைவிட கடினம். இவ்வளவு சிரமப்பட்டு வாங்கப்படுகின்ற ஓபிசி சான்றிதழ் 6 மாதத்திற்கு தான் செல்லுபடியாகும்.

அதனால் மனம் தளர்ந்துவிட வேண்டாம். இரயில்வே, வங்கித்துறை, மத்திய தேர்வு வாரியம், யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (Unian Public Service Commission-UPSC), ஊழியர் தேர்வு வாரியம் (Sfaff Selection Commi ssion-SSC) போன்ற தேர்வு வாரியங்கள், சில காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விளம்பரம் செய்து, மனு பெறும் போது ஓபிசி சான்றிதழ் கேட்கிறது.

அதுவும் மனு செய்வதற்கு 6 மாதத்திற்குள் (within 6 month) பெற்றிருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. இந்த சிரமத்தை கருதி ஒரு சிலர் மனு செய்யாமல் இருந்து விடுகின்றனர். அது சரியல்ல. குறுகிய காலத்தில் ஓபிசி சான்றிதழ் வாங்க முடியவில்லை என்றால், ஏற்கனவே ஓபிசி சான்றிதழ் 6 மாத்திற்கு முன்பாக வாங்கியிருந்தால் அதனுனைடய நகலை அனுப்பி வைக்கலாம். பின்னர் வாங்கி அனுப்பலாம். நீங்கள் தேர்வில் வெற்றி பெற்று விட்டால். நேர்காணலுக்கு செல்லும் முன்பாக புதிய ஓபிசி சான்றிதழ் தாசில்தாரிடம் வாங்கிச் சென்றால் போதும்.  காலி பணி யிடங்களுக்கான விளம்பரங்கள் வரும் போது 27 சதவீத இட ஓதுக்கிட்டின் கீழ் மனு செய்யலாம். தகுதி இருந்தும் மனு செய்யாமல் இருந்து விட வேண்டாம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One