எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அசத்தல்! 3 லட்சம் மாணவர்களுக்கு ஜப்பானில் பயிற்சி முதல் குழுவில் தமிழகத்தின் 15 பேருக்கு வாய்ப்பு

Sunday, April 1, 2018

புதுடில்லி:தொழில் துறையில், இளைஞர்களின் திறமையை மேம்படுத்தும் நோக்கில், மூன்று லட்சம் இந்திய மாணவர்களுக்கு, 3 -- 5 ஆண்டுகள் வரை, ஜப்பானில் வேலையுடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சிக்கு செல்லும் முதல் குழுவில், தமிழகத்தைச் சேர்ந்த, 15 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.ஜப்பானில், தொழில் பயிற்சி அசத்தல்!, முதல் குழுவில் தமிழகத்தின், 15 பேருக்கு, வாய்ப்புதொழில் துறையில் இந்தியாவை, முதன்மை நாடாக மாற்ற, பிரதமர் மோடி தலைமை யிலான மத்திய அரசு, பல முயற்சிகளைஎடுத்து வருகிறது; இதற்காக, பல நாடுகளுடன் சேர்ந்து, ஒப்பந்தங்களை உருவாக்கி வருகிறது. இந்த வரிசையில், ஜப்பானில், நம் மாணவர் களுக்கு, வேலையுடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்க, கடந்தாண்டு, இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த தொழில் பயிற்சியில் பங்கேற்க, இயந்திர வியல் மற்றும் மின்னணுவியலில், 'டிப்ளமா' படித்த மாணவர்கள் தேர்வு செய்யப் படுகின்ற னர். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களுக்கு, சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழிலக கூட்டமைப் பில் பயிற்சி அளிக்கப்படும்.அதன்பின் அவர்களுக்கு, ஜப்பான் மொழியின் அடிப்படை விஷயங்கள்; அங்கு உள்ள தொழிற் சாலைகளின் விதிமுறைகள் போன்றவை குறித்து பயிற்சி தரப்படும்.இதையடுத்து,ஜப்பானில் அவர்களுக்கு, அதிகபட்சம், ஐந்து ஆண்டுகள், பணியுடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தின்போது, மாதம் தோறும், 60 ஆயிரம் முதல், 65 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் வழங்கப்படும்.இந்த பயிற்சிக்கு தேர்வான முதல் குழு, இந்திய தொழில் கூட்டமைப்பில், வெற்றிகரமாக பயிற்சியைமுடித்துள்ளது.அடுத்த கட்ட பயிற்சிக்காக, இந்த குழுவினர், ஜப்பான் செல்கின்றனர். பயிற்சிக்கு தேர்வான முதல் குழுவில், 15 பேர், தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருமே, பொருளாதார ரீதியில், மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

நல்லெண்ண துாதுவர்கள்!

ஜப்பானுக்கு தொழிற்பயிற்சிக்குசெல்லும் மாணவர்களுக்கு, மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, தர்மேந்திர பிரதான், டில்லியில் பாராட்டு விழா நடத்தினார்; அப்போது அவர் கூறியதாவது:பயிற்சிக்கு செல்லும் இந்த மாணவர்கள் தான், இந்த பயிற்சித் திட்டத்தின் நல்லெண்ண துாதுவர்கள். அடுத்தடுத்து ஜப்பான் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு, இவர்கள் பெரிய ஊக்க சக்தியாக அமையப் போகின்றனர்; இவர்கள்,மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை, மேலும் பலப்படுத்தப் போகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

தகுதி என்ன?

ஜப்பானில் நடக்கும் தொழிற்பயிற்சிக்கு தேர்வு பெற விரும்பும் மாணவர்கள், ஐ.டி.ஐ., தொழிற் கல்வி அல்லது இயந்திரவியல் மற்றும் மின்னணுவியலில் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்.வயது,18-24க்குள் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு உற்பத்தி தொழிற் சாலையில், ஆறு மாத பயிற்சி அல்லது ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதல் குழுவில் தேர்வாகியுள்ள, 15 மாணவர்களும், வரும், மே மாதம் ஜப்பான் புறப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One