எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அம்மா கல்வியக கையேடு 30 ஆயிரம் பேர் பதிவிறக்கம்

Sunday, April 1, 2018

அம்மா கல்வியகம்' சார்பில், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள, 'ரெடி ரெக்கனெர்' என்ற பெயரில், இலவச கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, 30 ஆயிரம் மாணவர்கள், பதிவிறக்கம் செய்துஉள்ளனர்.

அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், 2017 மார்ச், 1ல், 'அம்மா கல்வியகம்' துவக்கப்பட்டது. இது, இலவச கல்வி இணையதளமாகும்.இதில், ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு, கட்டணம் செலுத்தி, பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்காக, தலைசிறந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தும் வீடியோக்கள், 1,500 வெளியிடப்பட்டன.அதேபோல், அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற உதவி, கல்லுாரி மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி போன்றவற்றை, இந்த இணையதளம் மேற்கொள்கிறது.தற்போது புதிதாக, மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக, இலவச கையேடு தயார் செய்துள்ளது.

இந்தக் கையேடு, www.ammakalviyagam.in என்ற இணையதளத்தில், 23ல் வெளியிடப்பட்டது.'இக்கையேட்டை, நேற்று வரை, 30 ஆயிரம் மாணவர்கள், பதிவிறக்கம் செய்துள்ளனர். இது, 230 பக்கங்கள் உடையது.'அம்மா கல்வியகத்தில், இதுவரை, 18.50 லட்சம் மாணவர்கள், தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்' என, 'அம்மா கல்வியகம்' பொறுப்பாளர், அஸ்பயர் சாமிநாதன்தெரிவித்தார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One