ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் நடத்துகிறது. 985 பணிகளுக்கு கடந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வு நடந்தது. இதில் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
நேர்முக தேர்வு முடிவு நேற்று வெளியானது. சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இந்த தேர்வுகளுக்கான பயிற்சிகளை இலவசமாக தமிழக மாணவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது.
இலவச பயிற்சி
இந்தநிலையில், நேர்முகதேர்வில் கலந்து கொண்டவர்களில் மனித நேய மையத்தில் பயிற்சி பெற்று முதல்நிலை, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் இருதேர்வு நிலைகளிலும் தானாக பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களும், நேர்முக தேர்விற்கான இலவச பயிற்சியை மனிதநேய மையத்தில் பெற்றனர்.
டெல்லியில் நடைபெற்ற நேர்முக தேர்வுக்கு, மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும், டெல்லி வரை சென்று வர விமான டிக்கெட், மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் டெல்லியில் தங்குவதற்கு வசதியும், நேர்முகத்தேர்வு நடக்கும் இடத்துக்கு சென்று வர வாகன வசதியும், மேலும் அவர்களுக்கான உணவு மற்றும் உடை ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.
51 பேர் தேர்ச்சி
மனிதநேய மையத்தின் வெற்றி பயணத்தில் 2017-2018-ம் ஆண்டுக்கான நேர்முகத்தேர்வு பயிற்சி மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. மனிதநேய மையத்தின் வாயிலாக நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளில் 51 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 15 மாணவிகளும், 36 மாணவர்களும் அடங்குவார்கள்.
இவர்களில் டாக்டர் வி.கீர்த்திவாசன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 29-வது ரேங்கும், மதுபாலன் 71-வது ரேங்கும், சிவகுரு பிரபாகரன் 101-வது ரேங்கும், சாய் ஸ்ரீதர் 107-வது ரேங்கும், பாலசந்தர் 129-வது ரேங்கும் பெற்று சாதனை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் துரி ஷெட்டி அனுதிப் முதல் இடம் பெற்றார். அவர் ஐதராபாத்தை சேர்ந்தவர்.
தமிழக அளவில் முதல் இடம்
டாக்டர் வி.கீர்த்திவாசன் தமிழக அளவில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். தேர்ச்சி பெற்றுள்ள 51 பேரில் கேரளாவைச் சேர்ந்த அஸ்வின், கர்நாடகாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், பிரித்திவி சங்கர், வினோத் பட்டேல், ராஜஸ்தானைச் சேர்ந்த டீத்தி, ஜெயபால் மாணிக் ஆகியோரும் அடங்குவார்கள்.
No comments:
Post a Comment