சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் பதவிக்கான ரிசல்ட் நேற்றிரவு வெளியிடப்பட்டது. தமிழக அளவில் தர்மபுரியை சேர்ந்த கீர்த்தி வாசன் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2017ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 985 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி வெளியிடப்பட்டது. முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி நடந்தது. தொடர்ந்து ஜூலை 27ம் தேதி ரிசல்ட் ெவளியிடப்பட்டது.
இத்தேர்வில் இந்தியா முழுவதும் 13,350 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 700 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த அக்டோபர் 28ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடந்தது. . மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,567 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். மாணவ-மாணவிகள் நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.
இந்நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று இரவு வெளிட்டது. அதில் நாடு முழுவதும் 990 பேர் நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்ைத சேர்ந்த கீர்த்தி வாசன் அகில இந்திய அளவில் 29வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 42 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனத் தலைவர் சங்கர் கூறியதாவது:
சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து 2,567 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 990 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இறுதி தேர்வு முடிவு யு.பி.எஸ்.சி.யின் இணையதளமான www.upsc.gov.in வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் மட்டும் 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதேபோல், தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 42 பேரில் 35 பேர் எங்கள் பயிற்சி மையத்தில் படித்தவர்கள். கீர்த்திவாசன் எங்கள் மையத்தில் படித்து முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். இந்திய அளவில் 74 பேர் எங்கள் பயிற்சி மையத்தில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் என்ன பணி என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment