எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

`ஊர் திருவிழா போல கொண்டாடப்பட்ட அரசுப் பள்ளி ஆண்டுவிழா' - அசத்தும் கிராமம்!

Friday, April 13, 2018


பெற்றோரின் சமையல், லக்கி கார்னர் விளையாட்டு, குழந்தைகள் டான்ஸுக்கு சாமியாடிய பார்வையாளர்கள். புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளி ஆண்டுவிழா ஒன்று ஊர் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் காட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில், நேற்று (12.04.2018) ஆண்டு விழா நடைபெற்றது. ஒவ்வோர் ஆண்டும் இதை ஊர் பொதுமக்களும் மாணவ, மாணவியருக்கு வெகுவிமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது. மேடையில் பள்ளி மாணவிகள், 'அம்பிகையே.. ஈஸ்வரியே' பாடலுக்கு டான்ஸ் ஆடியபோது, வேடிக்கைபார்த்த சில பெண்கள் சாமியாடினர். இதேபோல, 5-ம் வகுப்பு மாணவர்கள் இரு அணிகளாகப் பங்குபெற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. அந்தப் பட்டிமன்றத்தை எல்லோரும் வெகுவாக ரசித்தார்கள்.

இதற்கிடையே, பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களே அறுசுவை சைவ உணவைச் சமைத்து, எல்லோருக்கும் பரிமாறினார்கள். விழாகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை சுபாவிடம் பேசியபோது,  `` இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கென 120 புரவலர்கள் 2008-ம் ஆண்டிலிருந்து இந்தாண்டு வரை ரூபாய் ஒரு லட்சத்து இருபதாயிரம் வழங்கி பள்ளிக்கு உதவியுள்ளார்கள்.



கிராமப்புற பள்ளிக்கு மற்ற எந்த ஊரிலும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான புரவலர் நிதியை ஊர் பொதுமக்கள் வழங்கியிருப்பது எங்களுக்குக் கிடைத்த சிறப்பு. ஒவ்வொரு வருடமும் இந்தப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறும் அத்தனை குழந்தைகளையும் பாராட்டி கௌரவித்துவருகிறோம். அத்துடன், ஆண்டு விழா என்று சொன்னவுடனே ஊர் பொதுமக்கள்ஒவ்வொருவரும் ஒவ்வொரு செலவை ஏற்றுக்கொள்வதாகக் கூறி, விழாவை முன்னின்று நடத்துவதோடு, விழாவுக்கு வரும் அனைவருக்கும் தாங்களாகவே சமையல் செய்து பரிமாறிவிடுவார்கள். எங்கள் பள்ளியின் ஆண்டுவிழாவை ஒவ்வொரு வருடமும் ஊர்த்திருவிழாவாக மாற்றிக்காட்டுவது காட்டுப்பட்டி கிராம மக்கள்தான்" என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One