எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

செல்ஃபிக்கு இனி தடை?

Wednesday, April 4, 2018

செல்ஃபி எடுப்பது என்ற பெயரில் விபத்துகளில் மாட்டிஉயிருக்கே ஆபத்தாகமுடிவதைத் தொடர்ந்து, இனி ஆபத்தான இடங்களில் ‘நோ செல்ஃபி’ எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சமீப காலமாக மிகவும் ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பது என்ற பெயரில் மொபைலை வைத்து தன்னைத்தானே படம் எடுத்துக்கொண்டு மாட்டிக்கொண்டு உயிரிழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது.

ரயில் வருவதற்கு முன்பாக தண்டவாளத்தில் நின்றுகொண்டு செல்ஃபி எடுப்பது, மலை உச்சியில் நின்றுகொண்டு செல்ஃபி எடுப்பது, யானைகளையும் வன விலங்குகளையும் சீண்டிவிட்டு அதற்கு முன்பாக நின்றுகொண்டு செல்ஃபி எடுப்பது என எண்ணற்ற உயிருக்கே உலை வைக்கும் செல்ஃபி கலாசாரம் அதிகரித்துவருவது அனைவரும் அறிந்த செய்திகளாகும். இப்படி செல்ஃபி எடுப்பதால் பலரும் மரணமடைந்து வருகின்றனா்.இதை உணர்ந்த மத்திய அரசு ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பதைத் தடை செய்ய ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்விக்கு ஒன்று பதிலளித்த மத்திய உள்துறையின் இணை அமைச்சா் கிரென் ரிஜிஜீ, “சுற்றுலா தளங்களிலும் அபாயகரமான இடங்களிலும் செல்ஃபி எடுப்பவர்களை ஒலி பெருக்கிகளின் மூலமாக எச்சரிப்பது, செல்ஃபி தடை செய்யப்படும் பகுதிகள் என்ற அறிவிப்பு பலகைகள் வைப்பது போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மகாராஷ்டிராவில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One