எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு எச்சரிக்கை மீறப்பட்டுள்ளதா? சிறப்பு வகுப்பு சென்ற மாணவர் கார் மோதி பலி

Thursday, May 3, 2018

கிருஷ்ணகிரி அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சிறப்பு வகுப்புக்கு சென்றபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் பிரவீன். இவர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒனறில் பத்தாம் வகுப்பு படித்து வரருகிறார். இவர் இன்று காலை சிறப்பு வகுப்பிற்கு செல்வதற்காக பள்ளி பேருந்தை பிடிப்பதற்காக உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.


அப்போது, காவிரிப்பட்டணம் கூட்டுச்சாலையில் வந்துகொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோதி மோதி விபத்துக்குள்ளானதில் மாணவன் பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிச்சென்ற சத்யா தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள வேலையில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள நிலையில், சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அரசின் உத்தரவுகளை தனியார் பள்ளிகள் மதிப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One