Preposition இல்லையென்றால்கூட வாக்கியங்களின் அர்த்தங்கள் புரிந்துவிடும் என்று நினைப்பதாக ஒரு வாசகர் குறிப்பிட்டார்.
அது எப்படி? I come Mumbai என்றால் மும்பையிலிருந்து வருகிறீர்களா? அல்லது மும்பைக்கு வருகிறீர்களா? From அல்லது to போட்டால்தானே விளக்கம் கிடைக்கும்?
He is angry with me என்றாலும், he is angry because of me என்றாலும் அர்த்தம் ஒன்றுதானா என்று கேட்டிருந்தார். இல்லை. He is angry with me என்றால் என்னிடம் அவர் கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம். He is angry because of me என்றால் என்னால் அவருக்குக் கோபம் என்று அர்த்தம். நான் ஏதோ செய்ததன் காரணமாக அவருக்கு வேறு யாருடனோகூடக் கோபம் வந்திருக்கலாம்.
Prepositionகளின் அவசியத்தை உணர வேண்டுமானால் கீழே உள்ள வாக்கியங்களுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை உணருங்கள்.
A ball is on the table.
A ball is behind the table.
A ball is over the table.
A ball is near the table.
A ball is instead of the table.

No comments:
Post a Comment