கணிதப் புதிர்கள் கணிதத்தின் விதிகளை அறிந்து கொள்ள உதவும் ஒரு சாதனமாகும்.
அத்துடன் கணிதத்தை நேசிக்க வைக்கும் ஒரு கருவியாகவும் இது உதவும்.
ஆசிரியர்கள் இத்தகைய புதிர்களை கணிதப் பாடத்தினை வகுப்பின் ஆரம்பத்தில் பயன்படுத்தி, மாணவர்களை கணிதத்தில் ஆர்வமாக கற்கச் செய்யலாம்.
1. விமானப் பயணம்
ஒரு விமானம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு 1 மணி 20 நிமிடங்களில் சென்று சேர்கிறது. ஆனால், அதே ஊரிலிருந்து திரும்பி வருவதற்கு 80 நிமிடங்களே ஆகிறதாம். இது எப்படி நடக்கும்?
பதில்
1. எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது. இதில் குழப்பம் ஏதுமில்லை. ஏனென்றால், விமானம் போய்ச் சேர்வதற்கும், திரும்ப வருவதற்கும் ஒரே அளவு நேரம்தான் ஆகியிருக்கும். 80 நிமிடங்களும் 1 மணி 20 நிமிடங்களும் ஒன்றுதான். இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும், 80 நிமிடங்கள் குறைவாக இருப்பது போலவும் தோன்றுவதற்குக் காரணம், அதை எழுதும் முறையில் இருக்கிறது. கவனக் குறைவால் தவறவிட்டுவிடக் கூடாது.

No comments:
Post a Comment