கேரளாவில் மீண்டும் 27, 28 ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் 300–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி உள்ளதால் 5 லட்சத்தும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இந்நிலையில் கேரளாவின் சில பகுதிகளில் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment