எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கு, இன்று முதல், 31ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., போன்ற, இளநிலை பட்டப்படிப்புக்கு, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர முறையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. அதேபோல, எம்.இ., - எம்.டெக்., போன்ற, முதுநிலை பட்டப்படிப்புக்கும், அண்ணா பல்கலை சார்பில், தனியாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, மத்திய அரசின், 'கேட்' அல்லது அண்ணா பல்கலையின், 'டான்செட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன்படி, இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் இன்று துவங்குகிறது.இன்று, 'கேட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், நாளை முதல், 31ம் தேதி வரை, டான்செட் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், கவுன்சிலிங் நடத்தப்படும் என, பல்கலை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment