தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நாதியம்பாளையம் மற்றும் கொளப்பலூர் ஊராட்சிகளில் குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நல்லாசிரியர் விருதில் மீண்டும் பழைய முறையை கடைப்பிடித்து, 22 ஆசிரியர்களுக்கு விருது வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment