எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

செப். 3-இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போஸ்டர்' வடிவமைப்புப் போட்டி

Saturday, September 1, 2018

தமிழக அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு போஸ்டர் வடிவமைப்புப் போட்டி செப்.3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் க.அறிவொளி முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
பள்ளிக் கல்வித்துறையின் மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், புதுதில்லியில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்துடன் (என்சிஇஆர்டி) இணைந்து அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் (அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகள் நீங்கலாக) 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போஸ்டர் தயாரித்தல் போட்டியை மக்கள் தொகைக் கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தத் திட்டமிட்டுள்ளது. பள்ளி அளவில் இந்தப் போட்டி செப்.3-ஆம் தேதி நடத்தப்பட வேண்டும்.





என்னென்ன தலைப்புகள்? உலக வெப்பமயமாதல்', திட்டமிட்ட நகரமயமாதலின் அவசியம்', வாழ்க்கை விலை மதிப்பில்லாதது-அதனைப் போற்று', பாலங்களை உருவாக்குவோம்-சுவர்களை அல்ல', போதைக்கு அடிமையாதலின் காரணங்களும் விளைவுகளும்', எய்ட்ஸ் நோய் பற்றிய மாயைகளும் தவறான எண்ணங்களும்',
தனிக் குடும்பம் மற்றும் கூட்டுக் குடும்பங்களின் பயன்கள்', வயதானவர்களைப் பேணிக் பாதுகாத்தல்' ஆகியவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் அரை சார்ட் தாளில் போஸ்டரை வடிவமைக்க வேண்டும்.
மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், தேர்ந்தெடுக்கப்படும் மற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். இவை தேசிய அளவில் தேர்வு செய்யப்படுவதற்காக புதுதில்லியில் உள்ள என்சிஇஆர்டி-க்கு அனுப்பி வைக்கப்படும்.
தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டியில் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்

1 comment

  1. How to contact ,where I have to to done the poster at school or home

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One