எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியர், தங்கள் குடும்பத்தில் படிப்பறிவு இல்லாத ஒருவருக்கு, மூன்று மாதங்களில், அடிப்படை கல்வியை கற்பிக்க வேண்டும்

Friday, September 28, 2018





உத்தர பிரதேசத்தில் புது உத்தி ஆசிரியராகும் பிள்ளைகள்


மீரட், உத்தர பிரதேசத்தில், படிப்பறிவில்லாத பெற்றோருக்கு, அடிப்படை கல்வி வழங்க, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, மாநில கல்வித் துறை தயார்படுத்தி
வருகிறது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 57.18 சதவீத பெண்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றிருந்தனர்.
இந்நிலையை மாற்றி, படித்த பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, மாநில கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து, மாநில கல்வித் துறை இயக்குனர், சர்வேந்திர விக்ரம் பஹதுார் சிங் கூறியதாவது:
படிப்பறிவு இல்லாத பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, படிக்க ஊக்குவிப்பதில்லை. இந்நிலையை மாற்ற, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தங்கள் பெற்றோருக்கு எழுத, படிக்க கற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியர், தங்கள் குடும்பத்தில் படிப்பறிவு இல்லாத ஒருவருக்கு, மூன்று மாதங்களில், அடிப்படை கல்வியை கற்பிக்க வேண்டும்.பள்ளி ஆசிரியர்கள் இதை கண்காணித்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, செயல் திட்டம் தயாரித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One