ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வு 5 நாட்கள் நடக்கிறது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 789 பதவிகளை நிரப்ப உள்ளது. இதற்காக கடந்த ஜூன் 3ம் தேதி நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வை சுமார் 3 லட்சம் பேர் எழுதினர்.இதில் இந்தியா முழுவதும் சுமார் 9000 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் சுமார் 432 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது. இத்தேர்வு 5 நாட்கள் நடக்கிறது.இன்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு(கட்டுரை வடிவிலானது) நடக்கிறது. தொடர்ந்து 29ம் தேதி காலை இரண்டாம் தாள்(பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும் நடக்கிறது.
30ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு4), அக்டோபர் 6ம் தேதி இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும் நடக்கிறது.கடைசி நாளான 7ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இந்தியா முழுவதும் 24 நகரங்களில் மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடக்கிறது. அதாவது, சூளைமேடு ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் தேர்வு நடக்கிறது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தகட்டமாக நேர்முக ேதர்வு நடைபெறும்
No comments:
Post a Comment