கல்லுாரி ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் உதவி தொகைக்கான, 'நெட்' தகுதி தேர்வுக்கு, இன்று விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
முதுநிலை பட்டம் முடித்தோர், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின் பல்கலை மானிய குழுவின் அங்கீகாரம் பெற்ற, 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.மத்திய அரசின், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றலாம். மாநில தேர்வில் தேர்ச்சி பெற்றால், அந்த மாநிலத்திற்குள் உள்ள கல்வி நிறுவனங்களில் மட்டும் பணியாற்றலாம்.நடப்பு கல்வி ஆண்டுக்கான நெட் தேர்வு, நேற்று அறிவிக்கப்பட்டது. தேர்வு, டிச., 9 முதல், 23 வரை நடக்கிறது. தேர்வில் பங்கேற்க, இன்று முதல், 30ம் தேதி வரை, ஆன்லைனில் பதிவு செய்யலாம். தேர்வு முடிவு, ஜன., 10ல் வெளியிடப்படுகிறது. இளநிலை ஆராய்ச்சி மாணவருக்கான கல்வி உதவி தொகை பெறுவதற்கும், இந்த தேர்வில் பங்கேற்கலாம்.
கணினி வழியில் நடக்கும் இந்த தேர்வுக்கு, இரண்டு தாள்களில் வினாத்தாள் வழங்கப்படும். முதல் தாளில், 100 மதிப்பெண்களுக்கு, 50 வினாக்கள் இருக்கும். அவற்றுக்கு, ஒரு மணி நேரம் அவகாசம் தரப்படும். இரண்டாம் தாளில், 200 மதிப்பெண்களுக்கு, 100 வினாக்கள் இருக்கும். அவற்றுக்கு, இரண்டு மணி நேரம் அவகாசம் தரப்படும். தேர்வு விபரங்களை www.ntanet.nic.in முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment