அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நிதி ஆதாரம் இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு ஊழியர்களுக்கு 7_வது ஊதியக்குழுவின் அடிப்படையில் கூடுதலாக ரூபாய் 14,719 கோடி செலவிடப்படுகிறது.எனவே தற்போது அரசு ஊழியர்கள் போராட்டம் வாயிலாக வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசிடம் எந்த நீதி ஆதாரம் இல்லை.நீதி ஆதாரம் இருந்தால் அரசு ஊழியர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கப்படும் எனவே அரசின் நிலைமையை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.தற்போது அரசிடம் நிதிஆதாரம் இல்லை என்று அனைவருக்கும் தெரியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
முதலமைச்சரிடம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊதியத்தை உயர்த்தி தர கோரவில்லை. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையை நிறைவேற்ற நிதி ஆதாரம் தேவையில்லை. மேலும் GPF ஐ அமல்படுத்துவதால் அரசுக்கு இலாபமே . நிதிச்சுமை ஏற்படாது.
ReplyDeleteJACTTO-GEO WIN போராட்டத்தை திசைதிருப்பவே முதல்வர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
முதல்வருக்கு நமது கோரிக்கைகள் தெரியுமா அல்லது தெரியாததுபோல் நடிக்கிறாரா என்று விளங்கவில்லை.
பங்கு பங்களிப்போ தேதி ரத்து செய்து ஓய்வூதியத்தை மட்டுமே நாங்கள் கேட்கின்றோம்
ReplyDelete