சிவகங்கை மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் இருக்கும் 270 பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டது.
மாவட்டத்தில் 1,950 அரசு பள்ளிகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இருபது முதல் 50 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டன. பெரும்பாலான பள்ளிகள் சேதமடைந்து உள்ளன. இதில் 300 க்கும் மேற்பட்ட பள்ளி கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தன.
அவற்றை புகைப்படம் எடுத்து தலைமைஆசிரியர்கள் கல்வி அலுவலருக்கு அனுப்பினர். அதில் ஒரு சில கட்டடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டன. 270 கட்டடங்கள் இதுவரை இடிக்கவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் இடம் இல்லாததால், பழையதை இடித்தால் மட்டுமே, புதிய கட்டடம் கட்ட முடியும்.
ஆனால் இரண்டு ஆண்டுகளாக சேதமடைந்த கட்டடத்தை இடிக்காமல் அப்படியே விடப்பட்டன. மேலும் அந்த கட்டடங்களுக்கு அருகே மாணவர்கள் விளையாடுவதால் விபத்து அபாயமும் உள்ளது. இதையடுத்து சேதமடைந்த கட்டடங்களை இடிக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. விரைவில் அவை இடிக்கப்பட உள்ளன
No comments:
Post a Comment