அமேசான் கிரேட் இந்தியன் சேல் அண்மையில்
முடிவடைந்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி மீண்டும் வருகிறது.
அமேசான் நிறுவனம் கடந்த 10ம் தேதி, கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் அதிரடி விலை குறைப்பு விற்பனையை துவங்கியது. இதில் பல்வேறு பொருட்களுக்கு சலுகைகள், கேஸ் பேக் ஆஃபர் அறிவித்தது. குறிப்பாக, ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகப்படியான விலை குறைத்தது. இதையடுத்து அக்டோபர் 15ம் தேதி அமேசான் கிரேட் இந்தியன் சேல் நிறைவடைந்தது.
பின்னர், அக்டோபர் 24ம் தேதி மீண்டும் அமேசான் கிரேட் இந்தியன் ஆஃபர் அறிவித்து. அக்டோபர் 28ம் தேதி வரை இருந்த இந்த ஆஃபரில், ரெட்மி 6A ஸ்மார்ட்போன் 5,999 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அத்துடன், 2,000 ரூபாய் மதிப்புள்ள இலவச ஸ்கிரீன் ரீப்ளேஸ்மெண்டும் வழங்கியது.மேலும், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80% வரையில் தள்ளுபடியும், கூடுதலாக 10% கேஷ்பேக் ஆபரும் வழங்கியது. ஜவுளி மற்றும் பேஷன் ரகங்களுக்கு 60 முதல் 80 சதவீதம் வரையில் தள்ளுபடி அறிவித்தது. பின்னர், அக்டோபர் 28ம் தேதி இந்த ஆஃபரும் முடிவடைந்தது.
இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் நவம்பர் 2ம் தேதி வருகிறது. இதில் ஒன் பிளஸ் 6T ஸ்மார்ட்போனுக்கு பிரத்யேக ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2ம் தேதி மட்டும், 500 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால், இலவச சினிமா டிக்கெட், ஹோட்டல், ரீசார்ஜ் ஆஃபர் வழங்கப்படுகிறது.
மேலும், அமேசானின் பிரத்யேக தயாரிப்புகளான அமேசான் கிண்டல், அமேசான் எக்கோ, ஸ்பீக்கர் பொருட்களுக்கும் 45% வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப்பொருட்களுக்கு 80% வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது
No comments:
Post a Comment