அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும்
தனது அடுத்த பைக்கின் டீசரை வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு. போர்வையில் போர்த்திய ஒரு பைக்கின் படத்தைத் தவிர வேறு எந்தத் தகவலையும் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிடவில்லை.தீபாவளி சர்பிரைஸாக நவம்பர் 6-ம் தேதி தொடங்கும் மிலான் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.
சொகுசான பைக்குகளுக்கு பெயர் போன நிறுவனம் ராயல் என்ஃபீல்டு. உலக அளவில் பெருவாரியான மக்களை ஈர்த்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கிளைகளை விரித்து, பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.
கடந்த ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற மோட்டார் ஷோவில் டிவின் சிலிண்டர் எஞ்சின் கொண்ட இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளை அறிமுகப்படுத்தியது.
இவை அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான மிலான் மோட்டார் ஷோ(EICMA 2018) வரும் நவம்பர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது.
அதில் வெளியிடப் போகும் தனது அடுத்த பைக்கின் டீசரை ராயல் என்ஃபீல்டு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தில் ஒரு பைக்கின் மீது கருப்பு நிற போர்வை போர்த்தப்பட்டுள்ளது.
இதைத் தவிர வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த டீசர் படத்தைப் பார்க்கையில், டிரையம்ப் பாப்பர் பைக் போன்று சிங்கில் சீட் பெற்றிருக்கிறது. அலாய் வீல்கள், LED DRL ஆகியவற்றால் மாடர்ன் டச் இருக்கும் என்று தெரிகிறது.
தடியான டயர்கள், டிஸ்க் பிரேக், நீளமான பிளாட்டான ஹேண்டில் பார் ஆகியவை இருக்கின்றன. ஏற்கனவே தனது கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 பைக்குகளை அப்டேட் செய்வதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி புதிய ராயல் என்ஃபீல்டு பைக், பழையதன் அப்டேட் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment