எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ப்ரீகேஜி டூ யுகேஜி..! அரசுப் பள்ளியில் சாத்தியமாகுமா ? கல்வியாளர்கள், பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

Friday, October 12, 2018






தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ப்ரீகேஜி, எல்.கேஜி, யு.கேஜி உள்ளிட்ட பள்ளி முன்பருவக் கல்விக்கான பாடத்திட்டம் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக கல்வியாளர்கள், பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

ப்ரீகேஜி டூ யுகேஜி..! அரசுப் பள்ளியில் சாத்தியமாகுமா ?
ப்ரீகேஜி டூ யுகேஜி..! அரசுப் பள்ளியில் சாத்தியமாகுமா ?
தனியார் மற்றும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் மட்டுமே செயல்பட்டு வரும் பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் பொதுவான திட்டமாக இருக்க வேண்டும் என மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு இத்திட்டத்தின் படி கல்விக்கான பாடத் திட்டத்தை தயாரிக்க ஆணையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் ப்ரீகேஜி, எல்.கேஜி, யு.கேஜி உள்ளிட்ட பள்ளி முன்பருவக் கல்விக்கான பாடத்திட்டத்தை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி வழியில் எஸ்.சி.இ.ஆ.ர்டி உருவாக்கி www.tnscert.org என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



கருத்துக்கள் மற்றும் மேம்படுத்துவதற்கான ஆலோசனை
கருத்துக்கள் மற்றும் மேம்படுத்துவதற்கான ஆலோசனை
மேலும், இத்திட்டம் குறித்து பொதுவான கருத்து கேட்கும் வகையில், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்கள் மற்றும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளைத் தெரிவிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்புவோர் சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்குக் கடிதம் மூலமாகவோ அல்லது  மின்னஞ்சல் முகவரியிலோ தங்களது கருத்துக்களை வரும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்

3 comments

  1. Very good plan, that is open to the primary school campus is100% successful, the parents are very eagerly waiting for this plan

    ReplyDelete
  2. A good plan. Starting to this year better to feel. Congratulations to this plan

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One