எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சத்துணவின் தரம் குறித்து பள்ளிகளில் ஆய்வு - அறிக்கை அனுப்ப அரசு உத்தரவு

Friday, October 19, 2018



சத்துணவு மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தேவையான சத்துணவு கிடைக்க, ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் 40 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 10 ம் வகுப்பு வரை படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு வகை சாதம், பயறு வகைகள் மற்றும் தினமும் முட்டை வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் பப்பாளி, முருங்கை மரக்கன்றுகளை அங்கன்வாடி, சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உணவில் ஆய்வு:இந்நிலையில் சத்துணவு மையங்களில்சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அரசு அறிவுறுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் வாரம் 10 மையம் வீதம் மொத்தம்1,520 மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

அன்றைய தினம் சமைக்கப்பட்ட உணவு 2 மணி நேரத்திற்குள் மதுரை உணவு பாதுகாப்பு துறை ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படும்.

அங்கு உணவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என சோதனை செய்யப்படும். அதன் தரம் அறிந்த பிறகே மாணவர்களுக்கு சாப்பிட வழங்கப்படும். மேலும் சத்துணவு மைய வளாகத்தை சுத்தமாக வைக்க, நல்ல தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த சமையலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என சத்துணவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One