எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி மாணவிகளுக்கு இனிய நாளில் இனிப்பான செய்தி!

Friday, October 19, 2018





கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு .!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.



இதை தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்,அரசுப் பள்ளி மாணவிகள் தற்காப்புக்காக கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்கப்பட உள்ளது .சுமார் 5,711 உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு அக்டோபர் 22 ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது .

தற்காப்பு கலை பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமையும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One