எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்…

Monday, October 1, 2018



உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப் படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும். எனவே தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவசரப்படாமல், ஒருசிலவற்றை சரியாகவும், நம்பிக்கையுடனும் மேற்கொண்டால், அதற்கான பலனைப் பெறுவது உறுதி.

ஆகவே தொப்பையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, அதனைக் குறைக்க சில எளிமையான மற்றும் ஆரோக்கியமான டிப்ஸ்களை படித்து, தினமும் நம்பிக்கையுடன் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவது உறுதி.

எலுமிச்சை ஜூஸ்

தொப்பையை குறைக்க எளிய ஒரு வழியென்றால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைத்து, நாளடைவில் தொப்பை மறைந்துவிடும்.

வெள்ளை சாதத்தை தவிர்க்கவும்

தினமும் வெள்ளை சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக, கோதுமை பொருட்களை உணவில் சேர்க்கலாம். வேண்டுமெனில் கைக்குத்தல் அரிசி, ப்ரௌன் பிரட், நவதானியங்கள், ஓட்ஸ் மற்றும் தினை போன்றவற்றை உணவில் சேர்த்தால், அவை உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

தண்ணீர் குடிக்கவும்

பெல்லி குறைய வேண்டுமெனில், தினமும் போதுமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இவ்வாறு அடிக்கடி போதிய இடைவெளியில் தண்ணீர் பருகினால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.

இனிப்பு உணவுகளை தவிர்க்கவும்

இனிப்புகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு, உடல் எடை மற்றும் தொப்பை குறைவதில் தடையை உண்டாக்கும்.

பூண்டு சாப்பிடவும்

தினமும் காலையில் 2-3 பூண்டுகளை பச்சையாக சாப்பிட்டு, பின் எலுமிச்சை ஜூஸை குடித்தால், உடல் எடை ஆரோக்கியமான வழியில் விரைவில் குறைவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.

அசைவ உணவுகளை தவிர்க்கவும்

வயிற்றில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை நீக்க வேண்டுமெனில், முதலில் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பழங்களை சாப்பிடவும்

தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், தொப்பை குறைவதோடு, உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும்.

பொரித்த உணவுகளை தவிர்க்கவும்

தொப்பை குறைய வேண்டுமெனில், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடலில் கொழுப்புக்களை அதிகரிக்கும்.

காரமான உணவுகளை சாப்பிடவும்:

மசாலாப் பொருட்களான பட்டை, இஞ்சி மற்றும் மிளகு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் அதிலுள்ள காரமானது கொழுப்புக்களை கரைப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக்கி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One