குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 3-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 11-இல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் ஜூலை 30-இல் வெளியானது. தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு டிசம்பர் 3-ஆம் தேதி முதல் சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதம் தேர்வாணைய இணையதளத்திலிருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது
No comments:
Post a Comment