ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, தடையின்மை சான்றுக்கான விண்ணப்பங்கள், போதிய கால அவகாசமின்றி அனுப்பினால், ஏற்கப்படமாட்டாது' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, பாஸ்போர்ட் புதுப்பித்தல் நடைமுறைகளுக்கு, கல்வித்துறையிடம் இருந்து தடையின்மை சான்று பெற்று, சமர்ப்பிக்க வேண்டும். முன் அனுமதி கோரும் விண்ணப்பங்கள், இறுதி நேரத்தில் அனுப்பப்படுவதால், அதிக பணிப்பளு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வரமுருகன் வெளியிட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது:வெளிநாடு செல்லும் ஆசிரியர்கள், கல்வித்துறையிடம் முன் அனுமதி பெற விண்ணப்பிக்கும் முன், 10 வகையான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம், ஏழு வேலைநாட்களுக்கு முன், அனுப்பினால் மட்டுமே, விண்ணப்பம் ஏற்கப்படும்.மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் இல்லாதவை மற்றும் முழு தகவல் இல்லாத விண்ணப்பங்களுக்கு, தடையின்மை சான்று வழங்கப்படமாட்டாது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment