2.O வேண்டாம்; `சர்கார்' வேண்டும்!' - குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய கலெக்டர்
மதுரையைச் சொந்த ஊராகக் கொண்டவர் உமேஷ் கேசவன். மத்திய அரசின் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்று தற்போது கேரளா மாநிலம் வயநாட்டில் சப்-கலெக்டராகp பணிபுரிந்து வருகிறார்.
கலெக்டர் உமேஷ் கேசவன்
ஐ.ஏ.எஸ்-ஸாக இருந்தாலும் சமூக பணிகளில் குறிப்பாக, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் இவர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இவரின் ஃபேஸ்புக் பக்கமே சாட்சி. கேரளாவில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் அட்டப்பாடி பகுதி குறித்து இவர் கடந்த வருடம் பதிவிட்ட கருத்துகள் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தவகையில் தற்போது இவர் பதிவிட்டிருக்கும் பதிவு ஒன்று விஜய் ரசிகர்களை சந்தோசமடைய வைத்துள்ளது.
கலெக்டர் உமேஷ் கேசவன்
அவரின் பதிவில், ``மனந்தவாடி பகுதியில் விடுதியில் தங்கியிருக்கும் பழங்குடியின கிராம சிறுவர்களுடன் நேற்று விஜய்யின் `சர்கார்' படம் பார்க்கச் சென்றேன். நிறைய அரசியல் காட்சிகள் இருப்பதால் குழந்தைகள் படம் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்காது என்பதால் முதலில் சர்கார் படத்துக்கு அழைத்துச் செல்ல விருப்பமில்லை. இதைக் குழந்தைகளிடம் தெரிவித்தேன். சர்கார் படம் வேண்டாம் 3டி-யில் வெளியாகும் 2.0 படத்துக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்ததுடன் விஜய் படத்துக்குச் செல்ல வேண்டும் எனக் கூறினர்.
வெளியுலகத்துக்குப் பெரிதாக அறியப்படாத பகுதிகளிலும் சினிமாவும் அதன் சூப்பர் ஸ்டார்களும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவு வைரலாகப் பரவி வருகிறது. தொடர் எதிர்ப்புகள், காட்சிகள் நீக்கம், விமர்சனங்கள் எனச் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் சர்கார் படத்துக்கு கேரளாவில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment