எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வரலாற்றில் இன்று 1.12.2018

Saturday, December 1, 2018


பதிவு நாள்:01.12.2018

டிசம்பர் 1  கிரிகோரியன் ஆண்டின் 335 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 336 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 30 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1420 – இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.
1640 – போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான்.
1768 – அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றுtoday நோர்வேக்கருகில் மூழ்கியது.
1822 – முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான்.
1875 – வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார்.
1918 – ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.
1918 – சேர்பிய, குரொவேசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொஸ்லாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.
1924 – எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1934 – சோவியத் ஒன்றியத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1958 – பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது.
1958 – சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.
1959 – பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1960 – கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.
1961 – இந்தோனீசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.
1963 – நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.
1965 – இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
1971 – இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.
1973 – பப்புவா நியூ கினி ஆஸ்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.
1981 – யூகொஸ்லாவியாவின் விமானம் ஒன்று கோர்சிக்காவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் கொல்லப்பட்டனர்.
1981 – எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.
1982 – முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து.
1989 – பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு ஜேர்மனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.
1989 – பிலிப்பீன்ஸ் அதிபர் கொரசோன் அக்கீனோவை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
1991 – பனிப்போர்: உக்ரேன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரேன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.
2006 – இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.
பிறப்புகள்
1935 – வூடி அலன், அமெரிக்க திரைப்படம்|திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்.
1954 – மேதா பட்கர், இந்திய சமூக ஆர்வலர்.
1960 – உதித் நாராயண், இந்திய திரைப்படம்|திரைப்படப் பின்னனிப் பாடகர்.
1963 – அர்ஜூன றணதுங்க, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர்.
இறப்புகள்
1825 – முதலாம் அலெக்சாண்டர், ரஷ்ய சார் மன்னன் (பி. 1777)
1973 – டேவிட் பென்-குரியன், இஸ்ரேலின் முதல் பிரதமர் (பி. 1886)
1990 – விஜயலட்சுமி பண்டிட் (பி. 1900)
சிறப்பு தினம்
உலக எய்ட்ஸ் நாள்
போர்த்துக்கல் – விடுதலை நாள்
மத்திய ஆபிரிக்கக் குடியரசு – விடுதலை நாள் (1958)
தொகுப்பு
✅நாட்டு ⚖ நடப்பு*

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One