எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பள்ளியில் டிஜிட்டல் நூலகம்: மாணவர்கள் வரவேற்பு

Saturday, December 1, 2018




தர்மபுரி கல்வி மாவட்டத்தில் முதன்முறையாக, லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திறக்கப்பட்ட டிஜிட்டல் நூலகம் மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டம், லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் பங்களிப்புடன், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில், 13 கம்ப்யூட்டர்களுடன், கல்வி மாவட்ட அளவில் முதன்முறையாக டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டது. இதை திறந்து வைத்த பின், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமசாமி கூறுகையில், '' டிஜிட்டல் நூலகத்தில் கணினி மூலம், 600 நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பொது அறிவு, நீட், போட்டித் தேர்வுகளுக்கு, மாணவர்கள், தங்களை தயார்படுத்திக் கொள்ள உதவும். இதில் படித்து, அறிவுத்திறனை மாணவர்கள் மேம்படுத்தி கொள்ளலாம்' என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One