எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

3 நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணை

Friday, December 28, 2018




கோவை, ''டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணையை, மூன்று நாட்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது,'' என, செயலர் நந்தகுமார் தெரிவித்தார்.அரசு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி, லட்சக்கணக்கான தேர்வர்கள் பயிற்சி களை தொடர்ந்து வருகின்றனர். ஆண்டு தோறும் வெளியிடப்படும், ஆண்டு தேர்வு அட்டவணையை மையமாக வைத்து, பயிற்சிகளை மேற்கொள்வர். ஒவ்வொரு ஆண்டும், இந்த அட்டவணை, மார்ச் மாதமே வெளியாகி வந்தது.இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை, புத்தாண்டு துவங்கும் முன்னரே வெளிவரவுள்ளதால், தேர்வர்கள் பயிற்சிகளின் போக்கை, முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட இயலும்.இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் கூறுகையில், ''வரும் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தயார் நிலையில் உள்ளது. ஒப்புதல் பெற்றதும், மூன்று நாட்களுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One