எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஜனவரி முதல் மாதிரி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

Friday, December 28, 2018




சென்னை, அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி முதல், தினமும் மாதிரி தேர்வு நடத்தி, பொது தேர்வுக்கு தயார்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் 1ல், பொது தேர்வுகள் துவங்க உள்ளன. 25 சதவீதம்தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பாடங்கள் முடிக்கப்பட்டு, பாடங்களின் திருப்புதல் நடந்து வருகிறது. அரசு பள்ளிகளில், 25 சதவீத பாடங்கள் மட்டும் பாக்கி உள்ளன. புத்தாண்டு விடுமுறை முடிந்து, வரும், 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து, பொது தேர்வு மாணவர்களுக்கு, தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தி, சிறப்பு பயிற்சி அளிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாடத்திலும், சில பகுதிகளுக்கு தேர்வு வைத்து, அவற்றை உடனே திருத்தி, மாணவர்களின் மதிப்பெண்ணை தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில், மாணவர்கள் கூடுதல் நேரம் படித்து, சிறப்பு பயிற்சி பெற முடியும்.வார விடுமுறைஇந்த திட்டங்களை, தலைமை ஆசிரியர்கள், தாமாகவே முன்வந்து அமல்படுத்த வேண்டும். மேலும், வார விடுமுறை நாட்களிலும், காலை மற்றும் மாலை வேளைகளிலும் கூடுதல் வகுப்புகள் நடத்தி, மாணவர்களை தயார் செய்ய ஆலோசனை தரப்பட்டு உள்ளது. பொது தேர்வில், வெறும் தேர்ச்சி என்ற இலக்கை தாண்டி, அதிக மதிப்பெண் பெறவும் மாணவர்களை தயார் செய்ய, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

1 comment

  1. ஏட்டுக்கல்வியால் என்ன பயன்..மாணவர்களின் நிலை அந்தோ பரிதாபம்..

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One