திருப்பூர்:நாளை மறுதினம் பணிக்கு வரும்படி தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்,' என, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அனைத்து பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர்களை பணிஅமர்த்தி, கல்வி பணிகளை சீர்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அரசு தரப்பில் இருந்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமிக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியரை நியமிக்க வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியரை மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலரால் நியமிக்கப்படுவர்.ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை இருதினங்களுக்கு முடிந்து, வரும், 28ம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது, என்றனர்.எத்தனை பேருக்கு?மாவட்டத்தில், 6 ஆயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. உடனடியாக பணிக்கு திரும்ப பட்சத்தில், மாவட்டத்தில், புதிய தற்காலிக ஆசிரியருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது.பள்ளியில் பணியாற்றி ஒய்வு பெற்றவர், ஏற்கனவே தனியார் பள்ளிகளில் பணிபுரிவோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், தற்காலிக ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடியேற்ற உத்தரவுஇன்று குடியரசு தினம் என்பதால், 'பள்ளிகளில் ஆசிரியர்களை எதிர்பார்க்காமல் தலைமை ஆசிரியர்கள் தேசிய கொடி ஏற்ற வேண்டும்; மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்,' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதேநேரம், பள்ளிக்கு வராத, தேசிய கொடி ஏற்றாத தலைமை ஆசிரியர் குறித்தும் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு, 17-பி, நோட்டீஸ் வழங்கப்படும்,' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment