அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின் போராட்டத்திற்கு ஆதரவாக, தலைமை செயலக ஊழியர்கள், 28ம் தேதி முதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் சார்பில், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, கோட்டை வளாகத்தில், நேற்று மதியம், ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி பேசுகையில், ''சங்க பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி, ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். ''கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், 28ம் தேதி, மனித சங்கிலி போராட்டம் நடத்துவோம். அதன்பின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்,'' என்றார்.இதை, தலைமை செயலக ஊழியர்கள் ஏற்க மறுத்தனர். 'வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்' என, வலியுறுத்தினர். அதற்கு, சங்க நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்ததும், அவர்களுக்கு எதிராக ஊழியர்கள் கூச்சலிட்டனர்.அப்போது, சங்கத்தின் முன்னாள் செயலர் வெங்கடேசன், ''அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போராட்ட களத்தில் உள்ளனர். அவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய, தலைமை செயலக சங்க நிர்வாகிகள், மிரண்டு ஓடுகின்றனர். ''எனவே, நாம் போராட்ட களத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவாக, 28ம் தேதி முதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.அதை, ஊழியர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். 'வேலைநிறுத்தம் வேண்டாம்' என வலியுறுத்திய, சங்க நிர்வாகிகளுக்கு எதிராக, ஊழியர்கள் கோஷம் எழுப்பினர். எனவே, சங்க நிர்வாகிகளை புறக்கணித்து விட்டு, 'பழைய ஓய்வூதிய திட்டம் மீட்பு குழு' என்ற பெயரில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட, ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தலைமை செயலக ஊழியர்கள் 28 முதல் வேலைநிறுத்தம்
Saturday, January 26, 2019

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment