'ஆதார்' சட்ட விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு, 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடுமையாகிறது,ஆதார் சட்டம்,ரூ. 1 கோடி,அபராதம்,விதிப்பு?
ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவதால், தனி நபர் ரகசியம் வெளியாகும் ஆபத்து இருப்பதாக, பலர் கவலை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ஆதார் அடையாள அட்டை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையத்துக்கு, அரசின் பிற கட்டுப்பாட்டு அமைப்புகள் போல், அதிக அதிகாரங்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆதார் தகவலை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், தற்போது, ஆதார் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஆதார் சட்டத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஆதார் விதிகளை முறையாக பின்பற்றாத நிறுவனங்களுக்கு, 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். ஆதார் விதிகளை தொடர்ச்சியாக மீறி வரும் நிறுவனங்களுக்கு, ஒரு நாளைக்கு, 10 லட்சம் ரூபாய் வீதம், கூடுதலாக அபராதம் விதிக்கும் வகையிலும், புதிய விதிகள் வகுக்கப்பட உள்ளன.
'ஆதார் இல்லை என்பதால், எந்த குழந்தைக்கும், அரசு வழங்கும் பயன்கள், சேவைகள் மறுக்கப்பட கூடாது' என, விதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளது. ஆதார் சட்டத்தின் கீழ், யு.ஐ.டி.ஏ.ஐ., நிதியத்தை ஏற்படுத்தவும்,
மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், ஆதார் ஆணையத்துக்கு கிடைக்கும் வருவாய்க்கு, வரி விலக்கு அளிக்கவும், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
ஆதார் சட்ட திருத்த மசோதா, இந்திய டெலிகிராப் மசோதா, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட திருத்த மசோதா ஆகியவை, லோக்சபாவில், இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளன
No comments:
Post a Comment